Pages

Tuesday, March 12, 2013

குழந்தைகளும் குடும்பசூழலும்


- சிபாயா ஸமான்
செல்வமும், குழந்தைகளும் உங்கள் சோதனைப்பொருட்களே(குர்ஆன்). தாயும் குடும்பமும் குழந்தையின் முதலாவது சூழலாக அமைகின்றன. குழந்தையின் வாழ்வு, பாதுகாப்பு, அன்பு முதலிய தேவைகள் அடிப்படைத் திருப்தி நிலையிலாவது குழந்தைகளுக்கு வழங்கப்படல் வேண்டும். ஒருவர் மீது மற்றவர் தங்கியிருக்கின்றனர் என்ற உணர்வு குடும்பத்தால் வளர்க்கப்படுதல் முக்கியமானதாகும். இந்த நம்பிக்கை குழந்தைகளின் உளச் சமூக வளர்ச்சியில் அவசியமானதொன்றாகக் குறிப்பிடப்படுகின்றது.
குடுப்பச் சூழலியற் காரணிகளும் குழந்தை வளர்ச்சியிலே செல்வாக்கு செலுத்துகின்றன. குடும்ப வசதிகள், சுத்தம், நெருக்கம், குடும்ப உறுப்பினர்களின் மொழிப்பிரயோகம் நடத்தைகள், பொழுது போக்குகள் போன்ற பல்வேறு அமைப்புகள் இவற்றில் அடங்கும் மேலும் குழந்தை வளர்ப்பு முறை தாய் தந்தையரின் முதிர்ச்சிப் பண்புகள், குழந்தையின் சகோதரர்களுக்கிடையே காணப்படும் வயது வீத்தியாசம், குடும்பத்தில் காணப்படும் கட்டுப்பாட்டு முறைகள் போன்றன குழந்தையின் வளர்ச்சியிலே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
குடும்பத்திலுள்ள ஆண் உறுப்பினர்களைப்பின் பற்றியே குழந்தைகள் தான்கானும் ஆண் மாதிரிகையை(Male Model) உருவாக்கிக் கொள்ளுகிந்றது. அவ்வாறு பெண் குழந்தைகளும் தங்களை மாற்றிக் கொள்ளுகின்றனர். எனவே இது விஷயத்தில் குடும்பத்திலுள்ள பெரியவர்கள் காலத்திற்குக் காலம் மாறிவரும் ஆடைகளைத் தெரிவு செய்யாமல் எமது மார்க்க அடிப்படையிலான ஆடைகளை தெரிவுசெய்து கொள்வது மிகவும் முக்கியமானதொன்றாகும்.
எமது ஒவ்வொரு குழந்தையும் இறைவன் எமக்கு வழங்கிய மிகப்பெரிய அமானித சொத்தாகும் . அவர்களை நாம் முறையாக வளர்த்து மீண்டும் அவனிடம் ஒப்படைக்கக் கடமைப்பட்டுள்ளோம். இது குறித்து நாளை மறுமையில் நாம் ஒவ்வொறுவரும் விசாரிக்கப்படுவோம் இன்ஷா அல்லாஹ். ஆக குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கத் தேவையான அம்சங்களை நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்துதிருப்பது மிகவும் அவசியமானதாகும் அந்த வகையில்
1. குழந்தைக்கு முறையான ஆகாரம் தேவை:
போதிய அளவு ஆரோக்கியம் நிறைந்த உணவுகளையும், சுத்தமானதாகவும், உடனுக்குடன் வீட்டிலேயே தயாரித்துக் கொடுக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். பொதியில் அடைத்த (கயளவ கழழன) உணவுகளை கடைகளில் வாங்கிக் கொடுக்கும் பழக்கத்தை நாம் முடிந்தவரை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மிகவும் முக்கியமாக ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீர் எமது குழந்தைகளுக்கு பருகக் கொடுக்க வேண்டும். இது மூலை வளர்ச்சி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு மிகவும் உதவிபுரிகிறது. அத்துடன் கூடுதலாக பழங்கள், காய்கறி வகைகளையும் எமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வறுமை காரணமாக சிலர் குழந்தைகளை கருவிலேயே அழிக்க முயற்சிக்கின்றனர். இதுகுறித்து இறைவன் திருமறையில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
‘வறுமைக்குப் பயந்து நீங்கள் உங்கள்; குழந்தைகளை கொலை செய்யாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம். நிச்சயமாக அவர்களை கொலை செய்வது பெரும் குற்றமாகும்.(17:31)
குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டும் விஷயத்தில் கூட எம்மவர்கள் கவனக்குறைவாக இருக்கிறார்கள். அவர்களுடைய சுய காரணங்களைக் காட்டி கடைகளில் விற்கும் பால் பவுடர்களை வாங்கி கொடுத்து ஏதோ அவர்களின் பசியைத்தீர்த்து விடுகிறார்கள்.
ஆனால் இறைவனோ அவனுடைய அருளை தாய்ப்பாலில் சுரக்கச் செய்கிறான். சுப்ஹானல்லாஹ். சீம்பால் என்று சொல்லப்படும் முதலில் சுரக்கப்படும் பாலை குழந்தை பிறந்ததும் கட்டாயமாக கொடுக்கப்படவேண்டும். இந்தப்பாலில் குழந்தைகளின் ஈரலில் சேமித்து வைக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அவர்களுக்கு வழங்குகிறது. இது கொழுப்பு குறைந்ததாகவும், புரதம், விட்டமின்கள் அதிகம் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. எனவே 2வருடம் பாலூட்ட வேண்டும் அதன் பின் அதைக் கட்டுப்படுத்தலாம். ஏனெனில் 2வருடம் போனபின் தாய்பால் சுரக்கும் போது அதன் சக்தி குறைந்து அதிலுள்ள சோடியத்தின் அளவும் குறைந்துவிடும். இதனால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஏற்பட வாய்ப்புண்டு. இதனால்தான் இறைவன் கிட்டத்தட்ட 2 வருடம் என தனது திருமறையில் (31:14,46:15) வரையறுத்துக் கூறியுள்ளான்.
2. தக்க பாதுகாப்புத் தேவை:
உள அடிப்படையிலான பாதுகாப்பு, உடல்சார்ந்த பாதுகாப்பு, உறுதியான சூழல் முதலியவை குழந்தைகளின் தேவையாக உள்ளன. மனித மணம் எப்பொழுதும் இச்சையின்பால் போகக்கூடியது. எனவே வெளியிலுள்ளவர்கள் தங்களின் பிள்ளளைகளை பாலியல் ரீதியில் தவறாக நடத்த வாய்ப்புகள் உண்டு இன்னும் வீட்டிலுள்ள வேலை செய்பவர்களாலும் இன்னும் அண்டை வீட்டில் விட்டுச் செல்லும்போதும் இது போன்று ஏற்பட வாய்ப்புண்டு. பாடசாலைபோகும் போதும் வரும் போதும் குழந்தைகளுக்கு இது விஷயத்தில் பாதுகாப்பு அவசியம் தேவையாக உள்ளது.
எனவே பாதுகாப்பு இன்மை தொடர்பாக எழும் பயம் பிள்ளளைகளின் மனதில் மாறாத வடுவாக மாறி பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தம்மை ஒத்த வயதினருடம் உடல் அடிப்படையிலும் , உள அடிப்படையிலும் போட்டியிடமுடியாத நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இது விஷயத்தில் நாம் அனைவரும் விழிப்புணர்வோடு நடந்து கொள்வதுடன் பிறரின் குழந்தைகளையும் தன் குழந்தையாக நினைத்து அன்பு காட்டப்பழகிக் கொள்ள வேண்டும்.
3.சுத்தம் பேனப்படல் வேண்டும்:
சுத்தம் ஈமானில் ஒரு பகுதி என்று நாம் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம் ஆனால் செயலில் மிகக் குறைவே என்றால் அது மிகையாகாது. சுத்தமாக இருப்பவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான். இந்த வகையில் குழந்தைகளின் படுக்கை அறைகளில் தேவையில்லாத தூசிகளை அடிக்கடி துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எனவே அவர்கள் தூங்கும்போது சுவாசிக்கும் காற்று சுத்தமானதாக இருக்கும் அத்துடன் தனது உடை சுத்தமாக உள்ளதா, அயன் செய்யப்பட்டிருக்கிறதா என்று பிள்ளை பார்க்க அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் அவர்களின் சூ சுத்தமாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். ஒரு மனிதனின் சூ வை பார்த்தால் போதும் அவனின் சுத்தம் அப்படியே தெரியுமாம். எனவே இது மிகவும் முக்கியமாக கவனிக்கப்படவேண்டும்.
4.பிள்ளைகளின் நல்ல கல்வியும் நல்ல பயிற்சியும்:
ஏற்கனவே படித்த பிள்ளைகளின் பெற்றோரிடம், பாடசாலைகளின் தரத்தை அறிந்து எமது பொருளாதார நிலையையும் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு பாடசாலைகளைத்தெரிவு செய்ய வேண்டும். சிலர் நினைக்கிறார்கள் பள்ளிக்கூடக் கல்வி மட்டும் போதும் என்று. ஆனால் அப்படியல்ல, அது தவிர பெற்றோரும் நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பது கடைமையாகும். கற்பதற்கு முந்திய ஓய்வு அல்லது கற்பதற்கு முந்திய தியானமும் கற்று முடிந்த பின்னர் ஒரு குறித்த அளவு ஓய்வும் நினைவாற்றலை மேம்படுத்த துனைபுரியும்.
தந்தையாரின் கல்வி, தாயாரின் கல்வி, குடும்ப உறுப்பின்ர்களின் கல்வி, கல்வி சார்ந்த ஊக்குவிப்புக்கள், குடும்பத்தின் சுமூக பொருளாதார கட்டுமானம் போன்றன இவர்களின் கல்வி வளர்ச்சியிலே நேரடியாக செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாகும். எது எப்படியாருப்பினும் எமது இறைவன் நாடியோருக்கு மட்டுமே கல்வி ஞானத்தை வழங்குகிறான். இதை பின்வரும் குர்ஆம் வசனம் உண்மைப்படுத்துகிறது. அவன் தான் நாடுவோருக்கு ஞானததை வழங்குகிறான், எவர் ஞானம் கொடுக்கப்படுகின்றாரோ அவர் நிச்சயமாக அதிக நன்மைகள் வழங்கப்பட்டவராவார். சிந்தனையுடையோர்தான் படிப்பினை பெறுவார்கள்.(2:269) இறைவனின் கருனையும் அருளும் எமது குழந்தைகளுக்கு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையுடன் நாம் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக என்று பிறார்த்தனை செய்யவேண்டும்.
5.குழந்தைகளுக்கு பெற்றோர்களின் அரவனைப்பு தேவை:
ஒவ்வொரு சிறு பிள்ளைக்கும் எமது பொற்றோரால் நாம் ஏற்றுக் கொள்ளப்படுகிறோம் என்ற உணர்வு இருக்க வேண்டும். அந்த வகையில் அவர்கள் மத்தியில் முட்டாள், உதாவதவன் போன்ற தேவையில்லாத பேச்சுக்களைப் பேசக்கூடாது.  அவர்களுடன் நாம் நேரம் ஒதுக்கி விளையாட வேண்டும். அன்பை வெளிப்படையாகக் காட்ட வேண்டும். அவர்களின் உடல் நலத்திலே கவனம் செலுத்த வேண்டும் அவர்களின் நல்ல பன்புகளுக்கு உற்சாகமளித்தல் , அவர்களின் உணர்வுகளை மதித்து நடத்தல் போன்றன மிக முக்கியமானதாகும்.
இப்படி நாம் செயல்படும்போது அவர்கள் நினைக்கிறார்கள். நாம் நமது பெற்றோருக்குத் தேவையானவர்கள் என்றும், எம்முடன் அவர்கள் நல்ல அன்பாகவும் பாசமாகவும் இருக்கிறார்கள் என்றும் உணரத் தொடங்குவார்கள்.  எனவே தூங்கும் பிள்ளையை தட்டி எழுப்பாமல் கண்ணத்தில் முத்தம் கொடுத்து எழுப்புங்கள். ஏனெனில் முத்தத்தின் ஈரம் பிள்ளையின் கண்ணத்தில் பட்டு பாசத்தோடு அது எழும்புகிறது. அன்பு மற்றும் அரவனைப்பு கிடைக்கப் பெறாத சிறுவர்கள் அமைதி குலைந்துவர்களாகவும், இறுகிய உளப்பாங்கு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பெரியவர்களுக்கு மரியாதை செய்யாதவரும், சிறியவர்களுக்கு அன்பு காட்டாதவரும் நம்மைச்சார்ந்தவரல்ல என்ற நபிமொழியை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். ஆனால் செயற்படுவது குறைவாகவே இருக்கிறது.
சிறுபிள்ளைகள் செய்யும் தவறுகளை நாம் மிகவும் நுணுக்கமாக திருத்த முயல வேண்மு;.  அவர்களது உள்ளம் கண்ணாடி மாதிரி அது கீழே விழுந்தால் அப்படியே நொறுங்கிவிடும். வேறு பொருட்களை சில நேரம் சரிசெய்து பாவிக்கலாம் ஆனால கண்ணாடியை எப்படியும் சரி செய்து பாவிக்க முடியாது. அது போலத்தான் அந்தப் பிஞ்சு உள்ளங்களும் இருக்கிறது செய்யும் தவறுகளை அவர்கள் உணர்ந்து தாமாகவே விடும் அளவு நாம் மென்மையாக திருத்த முயற்சிக்க வேண்டும்.  இதற்கு பின் வரும் ஹதீஸ் நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது.  ஒரு முறை ஒழு செய்யுமிடத்தில் சிறு பிள்ளைகள் பிழையாக ஒழு செய்து கொண்டிருந்தார்கள். இதைக்கண்ட நபி(ஸல்)அவர்கள் நான் செய்வது சரியா? என்று பாருங்கள் என்று கூறி ஒழு செய்து காட்டினார்கள்.  இதை பார்த்துக்கொண்டிருந்த அனைத்துச் சிறார்களும் ஓஹோ… நாம் செய்ததுதான் பிழைபோலும் என்று நினைத்து ஒவ்வொருவரும் தம்மைத்திருத்திக் கொண்டனர்.
6.தெய்வீக உணர்வூட்டப்படுதல்:
எங்களின் ஒவ்வொரு குழந்தைக்கும் தாமாகவே எனது வேதமாகிய அல்குர்ஆனையும், ஆதார நூலாகிய ஹதீஸையும் வாசிக்க ஊக்கப்படுத்துவதுடன், அதைக் கற்று விளங்கிக் கொள்ள நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும் மாலை நேரமானதும் அல்குர்ஆனில் ஒரு சிறுபகுதியை ஓதிவிட்டு அதன் பின்னர்தான் தமது ஹோம் வோர்க் செய்ய தொடங்க வேண்டும். முதலில் வீட்டிலுள்ள பெரியவர்கள் இந்தமாதிரிப் பழக்கங்களை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.  ஏனெனில் தாய் தகப்பனிடமிருந்தே அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொள்கிறார்கள்.  உங்களின் சரியான பாதையைக் கண்டு அவர்களும் உங்கள் அடிச்சுவட்டைப் பின்பற்றி வருவார்கள்.
பெற்றோர்கள் அவாகளிடம் கூற வேண்டும் அடிக்கடி நாம உங்களை நேசிக்கிறேன். ஆனால் என்னைவிட இறைவன் உன்னைக் கூடுதலாக நேசிக்கிறான். எனவே உனது தேவைகளை அவனிடம் கேட்டுக்கொள் அவன் கட்டாயமாக உனது பிரார்த்தனைகளை ஏற்றுக கொள்வான் என்று கூறி அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும். துஆ கேட்கும் முறைகளை கற்றுக்கொடுக்க வேண்டும். மேலும் முதலில் அல்லாஹ்வைப்பற்றி நல்ல விளக்கமளிக்கவேண்டும் மாறாக அவர்கள் ஏதும் தவறு செய்தால் அல்லாஹ் பார்ததுக் கொண்டிருக்கிறான் அவன் உன்னை தீயால் சுட்டு விடுவான் என்றெல்லாம் அவனை ஒரு கொடுமைக்காரணாக சித்தப்படுத்த கூடாது. அவன் அன்பானவன் அரவனைக்கக்கூடியவன் என்று அவனது பன்புகளைச் சொல்லிக் கொடுத்து இறை நம்பிக்கையை அடிமனதில் ஆழப் பதிய வைக்க வேண்டும் யா அல்லாஹ் இச்சிறு குழந்தைகளுக்கு நல்ல ஞானத்தையும், புரிந்து கொள்ளும் தன்மையையும் கொடுத்து விடுவாயாக!.
செல்வமும் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும் எனினும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப்பலனுடையவையாகவும், அவனிடததில் நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத் தக்கவையாகவும் இருக்கின்றன. அல்குர்ஆன் (18:46)

பெண்மணி அவள் கண்மணி


-சிபாயா சமான்
இறைவன் படைத்த அற்புதமான படைப்புகளில் ஒன்றுதான் மனித படைப்பு. அதிலும் பெண்கள் பலவீனமானவர்களாக இருந்தாலும் அவர்களிடம் நற்பன்புகளும், நன்நடத்தைகளும் இருப்பது சிப்பியோடு முத்து ஒட்டி இருப்பதுபோல சேர்ந்தே காணப்படுகிறது. இருப்பினும் பெரும்பாலான பெண்கள் அவற்றை வெளிக்கொண்டு வராமல் தனக்குள்ளே புதைத்து வைத்திருக்கின்றனர். இதற்கும் காரணங்கள் இல்லாமல் இல்லை இந்த வகையில் தான் வாழ்கின்ற சுற்றுச்சூழல் இஸ்லாத்தைப் பற்றிய பூரண விளக்கமின்மை, சமுதாயத்தின் மத்தியில் ஏற்படும் ஒருவிதமான பயம் கலந்த வெட்கம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளில் ஒன்றுதான் கண் அல்ஹம்துலில்லாஹ் இது ஒரு மனிதனின் உடம்பில் எவ்வளவு முக்கியமான பகுதியோ அதுபோலத்தான் ஒரு குடும்பத்தில் பெண்ணின் நிலையும் உள்ளது.
இவ்வுலகம் முழுவதும் செல்வமாகும் அவற்றில் மிகச்சிறந்தது நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்). செல்வத்துள் செல்வம் ஒழுக்க மாண்புடையவளே என முழங்குகிறது இந்த நபிமொழி.
பெண்களைப் பொறுத்தவரை தங்களை அறியாமலே ஒரு சில தவறுகளை செய்கிறார்கள். அது தவறு என்று அவர்களுக்கு தெரிவதில்லை. ஆயினும் சில நேரங்களில் நல்ல ஹதீஸ், பயான்கள் கேட்கும் போதுதான் யோசிப்பது ஓ நாம் தவறுதான் செய்கின்றோம் என்று அப்படியாவது தன்னைத் திருத்திக்கொண்டாலும் பரவாயில்லை அல்ஹம்துலில்லாஹ். ஆனால் அப்படியும் ஒரு சிலர் செய்வதில்லை மாறாக அது ஒரிரு நாட்கள்தான் மனதில் நிற்கும்வரை எந்தத்தவறும் செய்வதில்லை, படிப்படியாக மறந்;துபோனால் பழைய குருடி கதவைத்திறடி என்று மாறிவிடுகிறார்கள்.
இதற்கு என்ன காரணம்? கூடுதலான விழிப்புணர்வு இல்லை தானும் தனது வேலையும் என்று இருக்காமல் எமது மார்க்க அறிவைக் கூட்டிக்கொள்ள முயல வேண்டும். வானம் முட்டாமல் போய்க்கொண்டிருப்பதைப்போல படிப்பதற்கு எல்லையே இல்லை. எனவே ஒவ்வொரு நாளும் ஒரு சிறுபகுதி நேரத்தை ஒதுக்கி நல்ல விஷயங்களைத்தேடி படிக்க முயல்வதுடன் அதை நடைமுறையிலும் கொண்டுவர முன்வரவேண்டும். இல்லையேல் இந்த உலகில் வாழ்வதில் அர்த்தமே இல்லை.
நாம் செய்யும் தவறில் மிக முக்கியமானது ஒருவர் இல்லாத நேரத்தில் அவரது குறைகளை பேசுவதும், அவர்களைக் கேவலப்படுத்துவதும் பழக்கமாகி விட்டது. இதுபற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் வன்மையாக கண்டிக்கிறான்.
முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம் (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்.
இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். (அல்குர்அன் 49: 11)
மேலும் ஒரு கூட்டம் இருக்கிறது திருந்தி வருபவர்களைக்கூட அவர்களது பாதையில் ஒழுங்காக செயல்பட விடுவதில்லை. அதையும் இதையும் பேசுவது. குறிப்பாக ஒரு பெண் தன்னுடைய பர்தா விஷயத்தில் தன்னை சரிசெய்து கொண்டால் கூட அதற்கும் ஏலனமாக பேசுவது முதலில் இவ எப்படி இருந்தா இப்ப பெரிதாக பர்தா எல்லாம் போட்டுக்கிட்டு வந்திருக்கா இவளைப்பத்தி எங்களுக்கு தெரியாதா? என்று இந்த மாதிரி எல்லாம் எடுத்தெறிந்து பேசுவது.
இப்படிப்பட்டவர்கள் முதலில் தங்களைத் திருத்திக்கொள்ளவேண்டும், இதுபற்றி அல்லாஹ் தனது அருள்மறையாம் திருமறையில் பின்வருமாறு குறிப்பிடுகிறான். எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை.. (அல்குர்ஆன் 13: 11) எனவே நாம் கட்டுப்பாடின்றி பேச்சை விட்டுவிடக்கூடாது. எதை பேசினாலும் சிந்தித்து பேசவேண்டும். நரகத்திற்கு கொண்டு செல்லும் சொற்களை தன் நாவால் மொழிந்து விடக்கூடாது.
தன் வெட்கத்தலத்தையும், நாவையும் பாதுகாக்துக் கொள்வதாக ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்வேன் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதை அடிக்கடி நாம் நினைவு படுத்திக்கொள்ள வேண்டும்.
கூடுதலான பெண்கள் தங்களை அறியாமலேயே நறுமனம் பூசிக்கொண்டு வெளியே சுற்றித்திரிவது, இதன் விபரீதம் அவர்களுக்கு தெரிவதில்லை ஒரு பெண் நறுமனம் பூசிக்கொண்டு அதன் வாடையை மக்கள் நுகர வேண்டும் என்பதற்காக அவர்களைக் கடந்து சென்றால் அவள் விபச்சாரியாவாள் (அஹ்மது)
மேலும் எந்தப்பெண் நறுமனம் பூசிக்கொண்டு பிறர் அந்த வாடையை நுகர வேண்டும் என்பதற்காக பள்ளிக்குச் செல்கிறாளோ அவள் கடமையான குளிப்பைப்போன்று குளிக்காதவரை அவளுடைய தொழுகை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. (அஹ்மது)
எனவே தாங்கள் ஒவ்வொருவரும் இது விஷயத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாமல் பெண்கள் பயன்படுத்தும் வாசனைப் பொருட்களைத் தேர்வு செய்யும் போது அது மணம் உள்ளடங்கியதாகவும் நிறம் எடுப்பாகவும் உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.
இன்று பலர் ஐவேளை தொழுகையில் கூட கவனம் செலுத்துவதில்லை. நீங்கள் இன்றைய பொழுதை எப்படி கடத்தினீர்கள் என்று கேட்டால் காலையில் எழுந்து பிள்ளைகளை ஸ்கூல் அனுப்புவதிலேயே போதுமென்று ஆகிபோச்சு அப்படியே பிள்ளைகள் பத்தி பதறி வருவார்களே என்று அடுத்த வேலை சமையலில் ஆரம்பித்து ஒருவாரு லுஹரைத் தொழுதாச்சு அத்தோடு சாப்பிட்டுவிட்டு அப்படியே தூங்கி எழுந்துப்பார்த்தால் மஃக்ரிப் நேரம் வந்து கொண்டிருக்கிறதே என்று சொல்லிவிட்டு அப்படியே அஸர் தொழுது முடிய மஃக்ரிப் பாங்கும் சொல்ல அதையும் சேர்த்து தொழுதாச்சு இப்படியே தங்கள் தொழுகையில் ஒரு உப்புசப்பு இல்லாதமாதிரி செயல்படுகிறார்கள்.
அத்துடன் பெரிதான காதுப்பூ, மோதிரம், காப்பு இவைகளை அணிந்து கொண்டே ஒழு செய்வது இப்படி செய்யும்போது அந்த இடங்களில் தண்ணீர் ஒழுங்காக படுவதில்லை இதனால் ஒழு சரியாக நிறைவேறாது. இதை யாரும் கவனிப்பதில்லை. எனவே இது விஷயத்தில் நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவே இப்படியான சிறிய சிறிய தவறுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதுபோல தெரியாத விஷயங்களை கேட்டுத் தெரிந்துகொள்ள எவ்வளவோ வாய்ப்பு வசதிகள் இருந்தும் கூட அதைக்கேட்பதற்கு வெட்கப்படுகிறார்கள். இதுவும் பெரும் தவறுதான் இப்படிக் கேட்டால் ஏதும் நினைப்பார்களா, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் யோசிப்பது ஆனால் ஸஹாபாப்பெண்கள் எப்படியான கேள்விகளெல்லாம் நபி(ஸல்) அவர்களிடத்தில் கேட்டுத் தெரிந்துக் கொண்டார்கள் என்பது நாமறிந்த விஷயமே எனவே இது விஷயத்தில் வெட்கப்படாமல் தயங்காமல் எங்களது மார்க்க விஷத்தில் ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்துக் கொள்ளவேண்டும்.
காலமும், கடலலையும் எவருக்காகவும் காத்திருக்காது. நாம்தான் வெற்றிப்பாதையை நோக்கி எங்களின் அனைத்து செயல்களையும் திருத்திக் கொள்ளவேண்டும். மனிதன் தவறுக்கும் மறதிக்கும் மத்தியில்தான் படைக்கப்பட்டிருக்கிறான். எனவே எங்களை இறைவன் மன்னிக்ககூடியவன் என்ற உறுதியான நம்பிக்கையுடனும், முழுமையான ஈமானுடனும் வாழ்ந்தால் ஒவ்வொரு பெண்ணும் அவ்வீட்டின் கண்மணி மட்டுமின்றி சுவர்க்கத்தின் கண்மணியாகவும் பூத்துக் குலுங்கலாம் இன்ஷா அல்லாஹ்.

உறவுகளை பேணுதல்


ஆரம்பத்தில் கணவன், மனைவி, பிள்ளைகள் என்று தொடங்கிய வாழ்க்கை, நாளடைவில்  அந்த பிள்ளைகளுக்கு திருமணமாகி பேரன், பேத்திகள் பிறந்து இப்படியே நமது வம்சமும் பெருகிக்கொண்டே செல்கிறது. முதலில் கூட்டுக்குடும்பத்தில் இருந்தவர்கள் பிரிந்து தனிக்குடித்தனமாகி சென்று விடுகிறார்கள். இப்படி நம் குடும்பத்தின் கிளைகள் விரிந்து கொண்டே செல்கின்றன. நம்முடைய வம்சாவழியும் நீண்டு கொண்டே இருக்கிறது. இவர்களைத்தான்  உறவினர்கள் என்று நாம் சொல்கிறோம். இப்படிப்பட்டஉறவினர்களுடன் ஒட்டி வாழ்வது எப்படி,வாழவேண்டுமென்று நமக்கு அழகான முறையில் இஸ்லாம் கற்றுத்தருகிறது. அதைப்பற்றி அல்குர்ஆனும், நபிமொழிகளும் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.
ஆரம்பத்தில் அல்லாஹுதஆலா படைப்புகளை எல்லாம் படைத்து முடித்துவிட்டு, இரத்த பந்தத்திடம்(உறவிடம்) சொல்கிறான் உன்னை சேர்த்து கொள்பவரை நான் சேர்த்துக் கொள்வேன், உன்னை துண்டிப்பவரை நான் துண்டித்து விடுவேன் என்று கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) புகாரி, முஸ்லிம்
இந்த நபிமொழியிலிருந்து உறவினர்களுடன் நாம் சேர்ந்திருப்பதின் அவசியம் தெரியவருகிறது. அவர்களுடன் நாம் எந்த அளவு  நெருக்கமாக இருக்கிறோமோ அந்த அளவிற்கு இறைவனும் நம்முடன் நெருக்கமாக இருப்பான்.
இன்று நாம் நம்முடைய பொருளாதாரம் முன்னேறுவதற்கும் நீடித்த ஆயுளை பெற வேண்டும் என்பதற்கும் தினந்தோறும் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் இறைவனின் தூதர்(ஸல்) என்ன கூறியிருக்கிறார்கள் என்றால்
யார் ரிஸ்கிலும்(பொருளாதாரம்) ஆயுளும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறாரோ அவர் தம் உறவினருடன் ஒட்டி வாழட்டும்  அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) புகாரி, முஸ்லிம்
ஆனால் நம்மிடையே சில உறவினர்கள் இருக்கிறார்கள். நாம் எது செய்தாலும் திருப்தி அடைந்து கொள்ளமாட்டார்கள் எல்லாவற்றிலும் குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள் ஏதாவது பொருள் கொடுத்து உதவி செய்தாலும் அதிலும் மற்றவருக்கு அதிகம் கொடுத்தாய், எனக்கு குறைவாக கொடுத்திருக்கிறாய், எனக்கென்று பார்த்து இவ்வளவு விலை குறைவானதை வாங்கிக் கொண்டு வந்தாயோ! என்று குறை கூறுவார்கள். இப்படிப்பட்ட இந்த உறவினர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று கேள்வி எழலாம்.
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சில உறவினர்கள் இருக்கிறார்கள் அவர்களை நான் சேர்த்துக் கொள்கிறேன் (ஆனால்) அவர்கள் என்னை துண்டித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு நான் நன்மை செய்கிறேன் (ஆனால்) அவர்கள் எனக்கு தீங்கு செய்கிறார்கள் அவர்களை நான் பொறுத்துக் கொள்கிறேன்; (ஆனால்) அவர்கள் என்னை கண்டு கொள்வதேயில்லை என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீர் கூறுவதைப்போல் இருந்தால் நீர் அவர்களை சுடு சாம்பலை உண்ண வைத்தவர் போலாவீர், இந்த பண்புகளுடன் நீர் இருக்கும் காலமெல்லாம் உமக்கு உதவுபவர் (மலக்கு) அல்லாஹ்வின் புறத்திலிருந்து உம்முடன் இருப்பார் என நபி(ஸல்) அவர்கள் பதிலுரைத்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) ஆதாரம் முஸ்லிம்
ஆகவே இந்த நபிமொழியிலிருந்து நம்முடைய உறவினர்கள் எப்படிபட்டவராய் இருந்தாலும் நாம் அவர்களுடன் நேசத்துடன் நடந்து கொள்வது நமது தலையாயக் கடமை என்பது தெளிவாகிறது.
அடிக்கடி நம் உறவினர்களை சந்திப்பது, அவர்களின் சுக, துக்கங்களில் பங்கு கொள்வது, நம்மிடையே இருக்கும் ஏழை உறவினர்களுக்கு உதவி செய்தல், அவர்களின் பிள்ளைகளை படிக்க வைக்க பொருளாதார உதவி செய்தல் போன்ற எத்தனையோ விஷயங்கள் நம்முடைய உறவுகளை பலப்படுத்த உதவும்.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் ஏழைக்கு தர்மம் செய்வது ஒன்றேயாகும் (ஒரு நன்மை) ஆனால் உறவினர்களுக்கு உதவி செய்வது (ஆதரிப்பது) இரண்டு (நன்மைகள்) ஆகும்.அறிவிப்பவர்: சுலைமான் இப்னு ஆமிர்
இறைவன் இதைப்பற்றி தன் திருமறையில் கூறும்போது உறவினர்களுக்கு அவர்களுடைய உரிமையை கொடுத்து விடுவீராக! மேலும் ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (அவரவர் உரிமையை கொடுத்து விடுவீராக) அல்லாஹ்வின் திருப்தியை பெற விரும்புவோருக்கு இதுவே மிகச்சிறந்த வழிமுறையாகும், அவர்கள் தான் வெற்றியாளர்கள்.(அல்குர்ஆன் 30: 38)
உறவினர்களுடன் ஒட்டி வாழ்ந்து நாம் வெற்றியாளர்களாக வாழ அல்லாஹ் உதவி புரிவானாக!.
இன்றைய சமுதாய சூழலில் நற்பண்புகள், நல்லொழுக்கம் ஆகியவையெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு மனிதனின் வாழ்க்கை தரத்தை பணம் ஒன்றை மட்டும் கொண்டு நிர்ணயிக்கக் காண்கிறோம். தனி மனிதனிடம் மட்டுமல்லாமல் குடும்ப உறவுகளிலும் பணம் ஒரு பலம்வாய்ந்த இணைப்புச் சங்கிலியாக வடிவெடுத்துள்ளது. நெருங்கிய ஏழை சுற்றத்தாரை பணக்காரர்களில் பெரும்பாலானோர்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை. அது மட்டுமின்றி அப்படிப்பட்ட ஏழை எளிய, சொந்த, பந்தங்களுடன் உறவு பாராட்டினால் அவர்கள் அடிக்கடி வந்து தங்கள் தேவைகளுக்காக உதவி கோரிவிடகூடும் என்று செல்வந்தர்கள் பயப்படுகிறார்கள்.
வம்சாவழியிலோ, இரத்த சம்பந்தப்பட்ட தொடர்பிலோ எந்த இணைப்பும் இல்லாதவர்கள் அனைவரும் பணம், என்ற ஒரு காரணியை வைத்துக் கொண்டு பணக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவதை நாம் இன்று காண்கிறோம். இவர்கள் தம் வீட்டு விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் கூட பணக்காரர்களையே விழுந்து, விழுந்து உபசரிக்கிறார்கள். தம் நெருங்கிய உறவினர்களை அவர்கள் ஏழைகள் என்ற ஒரே காரணத்திற்காக இது போன்ற நிகழ்ச்சிகளில் கண்டு கொள்ளாமல் இருந்து விடுகின்றனர்.
நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும் உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான். அன்றியும் மானக்கோடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமம் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகிறான்.(அல்குர்ஆன் 16: 90)
இந்த வசனத்தில் இறைவன் எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லும்போது பொதுவாக பாவங்கள், அக்கிரமங்கள் என்று கூறியுள்ளான். குறிப்பிட்ட இன்ன தவறுகள் என்று சொல்லவில்லை. அதேபோல் இதை செய்யுங்கள் என ஏவும்போது நீதி செலுத்துங்கள், நன்மை செய்யுங்கள் என்று பொதுவாக கூறிவிட்டு, உறவினருக்கு கொடுப்பதை மட்டும் குறிப்பிட்டு கூறுகிறான். இவ்வசனத்திலிருந்து. உறவினர்களுக்கு செய்யும் உதவியின் முக்கியத்துவம் தெள்ளத் தெளிவாக நமக்கு தெரிய வருகிறது.
அதே போல் எதை செலவு செய்வது, யாருக்கு செய்வது என்ற கேள்விகளுக்கும் பின்வரும் குர்ஆன் வசனங்கள் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; ”எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று நீர் கூறும் ”(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்) மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.” (அல்குர்ஆன் 2: 215)
இவ்வசனத்திலிருந்து பெற்றோருக்கு செலவிட்டு விட்டு அதற்கு அடுத்தபடியாக நெருங்கிய உறவுகளுக்கு செலவிடுவதை அல்லாஹ் ஏவகிறான். மேலும் மற்றொரு இறைவசனத்தில்
(நபியே! ”தர்மத்திற்காக எவ்வளவில்) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; ”(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக. (அல்குர்ஆன் 2: 219)
நம்மால் நம் உறவினருக்கு அதிகப்படியாக கொடுத்து உதவி செய்ய முடியாவிட்டாலும் அவர்களுக்கு கடன் கொடுத்து உதவி செய்யலாம். இப்படி பல வழிகளிலும் நம் உறவுகளை ஆதரித்து இம்மையிலும் மறுமையிலும் நற்பேறுகளை பெற இறைவன் நமக்கு உதவி புரியட்டும்.
இறைவன் கூறுகிறான், எவர் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சுவர்க்கப் பூங்காவனங்களில் இருப்பார்கள்; அவர்கள் விரும்பியது அவர்களுடைய இறைவனிடம் கிடைக்கும். அதுவே பெரும் பாக்கியமாகும். (அல்குர்ஆன் 40: 22)
(ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங் கூறுவதும்) (நபியே!) நீர் கூறும் ”உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!” (அல்குர்ஆன் 40: 23)
நினைத்ததெல்லாம் நிறைவேறும் சுவர்க்கப் பூங்காவினை நமக்கு கொடுக்க இறைவன் இந்த எளிதான உறவினரிடம் அன்பு காட்டும் நல்லமலை நாம் செய்து ஜன்னத்துல் ஃபிர்ளெதஸை அடைவோமாக.

பெண்ணினத்தின் முன்மாதிரிகள்


- உம்மு யாசிர்
பெண்கள் சமூகத்தின் கண்கள் என மதிக்கப்பட வேண்டியவர்கள். வருங்கால சந்ததியை உற்பத்தி செய்வோரும் அவர்களை செதுக்கி செப்பனிடுவோரும் அவர்களே! ஒரு பெண்ணின் நடத்தை, நம்பிக்கை, குணங்கள் என்பவற்றின் செல்வாக்கு தலைமுறை தாண்டியும் கடத்தப்படலாம். இவ்வகையில் பெண்களுக்கான வழிகாட்டால் ஒரு சமூகத்துக்கான வழிகாட்டலாக இருக்கும்.
இஸ்லாமிய எழுச்சியில் ஆண்களைப் போன்றே பெண்களும் பெரும் பங்களிப்பை நல்கியுள்ளனர். ஆரம்பகால இஸ்லாமிய வாழ்வை எடுத்து நோக்கும் போது இந்த உண்மையை நாம் அறியலாம். அவர்கள் இஸ்லாமிய கலைகளையும் கலாச்சாரத்தையும் கட்டிக்காப்பதில் தமது அக்கறையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையை இன்று காண முடிவதில்லை.
எமது இளம் பெண்களில் பலர் தொலைக்காட்சி சேனல்களின் செல்லப்பிள்ளைகளாக மாறியுள்ளனர். சினிமா நாயகிகளைத் தமது முன்மாதிரியாக்கிக் கொண்டு அதற்கேற்ப தமது உடை. நடை, பேச்சு முறைகளைக் கூட மாற்றிக் கொள்கின்றனர். இவ்வாறு சீரழிந்து செல்லும் பெண் இனத்தின் முன்மாதிரிகள் யார்? அவர்கள்தான் இஸ்லாமிய வரலாற்று வானில் மின்னும் ஒளித்தாரகையான அன்னை பாத்திமா(ரலி) அவர்களாவார்கள். இவர்கள் அகில உலகின் அருட்கொடை, மனிதருள் மாணிக்கம் மாநபி(ஸல்) அவர்களினதும் முதன்முதலில் இஸ்லாத்தில் இணைந்து தமது வளங்களையெல்லாம் அதன் வளர்ச்சிக்காக வாரி வழங்கிய அன்னை கதீஜா(ரலி) அவர்களின் அருமைப் புதல்வியுமாவார்கள்.
அன்னையவர்கள் தான்   நபி(ஸல்) அவர்களின் மகள் என்கிற எண்ணத்தில் இறுமாந்ததில்லை. ஒரு தலைவரின் மகளுக்குரிய மக்கள் செல்வாக்கையோ மரியாதையையோ எதிர்பார்த்திருந்ததாகவும் இல்லை. இவர்கள் இஸ்லாமிய உலகில் நிகழ்ந்த பலபோர் முனைகளிலும் பங்கு கொண்டார்கள். இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரும் மாற்றத்திற்கு காரணமாக இருந்த மக்கா வெற்றியிலும் அன்னையவர்கள் பங்கேற்றார்கள். அவர்கள் மதீனத்து மண்ணின் இணையற்ற தலைவரின் மகளாக இருந்தும் வறுமையில் வாடினார்கள். வீட்டுப்பணியை சிரமத்துடன் நிறைவேற்றினார்கள்.
ஒருமுறை யுத்தகைதிகள் பலர் பிடிபட்டிருந்தனர், அலி(ரலி) அவர்கள் அன்னையரின் இரு கரத்தையும் பார்த்தார்கள், தண்ணீர்  இறைத்து கைகளில் தழும்புகள், நீர் சுமந்து கழுத்தில் கருமை, வீட்டுப் பணிகள் புரிந்து ஆடைகள் அழுக்கடைந்து, முகம் வாடி வதங்கிய நிலை, சுவனத்து மங்கையர்களின் தலைவி, பாத்திமா(ரலி) அவர்களின் கோலமா இது!  அலி(ரலி) அவர்களின் நெஞ்சு கனத்துப் போனது. பாத்திமா(ரலி) அவர்களை பரிதாபத்துடன் பார்த்து, பாத்திமாவே! உன் தந்தையிடம் சென்று, உனக்கொரு பணியாளரை கேட்கலாமே! உனக்கு உதவியாக இருக்குமே என வேண்ட, பாத்திமா(ரலி) அவர்களும் பெருத்த எதிர்பார்ப்புடனும் மனமகிழ்வுடனும் அண்ணலார் இல்லம் சென்று தனக்கு ஒரு யுத்தக்கைதியை தந்துதவினால் பெரும் உதவியாக இருக்கும் என்று வேண்டினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பணியாளனைவிட சிறந்த ஒன்றை அறிவிக்கட்டுமா? எனக் கேட்டுவிட்டு உறங்கும் முன்னர் சுப்ஹானல்லாஹ் 33 தடவையும் அல்ஹம்துலில்லாஹ் 33 தடவையும் அல்லாஹுஅக்பர் 34 தடவையும் கூறுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். இதனை அன்னையவர்களும் திருப்தியாக ஏற்றுக் கொண்டார்கள்.
இங்கே அன்னையரின் வறுமையின் உச்ச நிலையையும் பொறுமையையும் நாம் பெரும் பாடமாக பெற வேண்டும். இன்றைய பெண்களுக்கு வாஷின்ங் மிசினிருந்தும் கேஸ் குக்கர் இருந்தும் மின்சார வசதி இருந்தும் வீட்டு வேலைகளை செய்வதென்பது பெரும் சிரமமாக உள்ளது. இறைவணக்கம் பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் நபி(ஸல்) அவர்களின் அருமை புதல்வி பாத்திமா(ரலி) அவர்களின் நிலை என்ன என்பதை பார்த்தீர்களா? நபி(ஸல்) அவர்களே தன் மகளை பார்த்து கூறுகின்றார்கள், பாத்திமாவே! நான் உனக்காக நாளை மறுமையில் பொறுப்பு எடுக்கமாட்டேன், ஒரு நபியின் மகள் என்று நல்லமல்களை விட்டுவிடாமல் சுயமாக நல்லமல் செய்து அல்லாஹ்வின் அன்பைப்பெற்ற பாத்திமா(ரலி) அவர்களின் முன்மாதிரியை நாம் படிப்பினையாகக் கொள்ள வேண்டும். ஒரு தலைவரின் மகள் என்ற நிலையில்கூட வறுமையிலும் பொறுமை காத்த இவர்களின் பொன்னான நல் வாழ்வை நம் பெண்ணினம் பின்பற்றிட வேண்டும். இன்னும் கூறுவதென்றால் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், ஆண்களில் ஈமானில் முழுமை அடைந்தவர்கள் அதிகமானோர், ஆனால் பெண்களில் ஈமானில் முழுமையடைந்தோர் நான்கு பேர் ‘ஆசியா(அலை), மர்யம்(அலை),    கதீஜா(ரலி), பாத்திமா(ரலி)’ இப்படிப்பட்ட உத்தமிகளின் வாழ்விலிருந்து நாம் படிப்பினை பெறுவதை விட்டுவிட்டு இவர்களின் பெயர்களை நம் பிள்ளைகளுக்கு வைத்து விட்டால் அவர்கள் பெற்ற பாக்கியங்களை நாமும் பெறலாம் என்ற மூடத்தனத்தை கைவிட்டுவிட்டு அவர்கள் இஸ்லாத்தை பின்பற்றியது போன்று இன்றைய பாத்திமாக்களும் முன்வர வேண்டும்.
அறிவுரைகள்:
• அல்குர்ஆனும் அண்ணலாரின் அருள்மொழிகளுமே நமது வாழ்க்கை வழிகாட்டல் என்பதை எச்சந்தர்பத்திலும் மறந்துவிடாதீர்கள்.
• இறை நம்பிக்கையும் இறையச்சமும் உங்களைக் காக்கும் இரு அரண்கள் என்பதை நினைவில் வையுங்கள்.
• பர்தா முறையை அனுசரியுங்கள், அது அடக்கு முறையோ, அடிமைத்தனமோ அல்ல, அதுவே உண்மையான கெளரவமும் உயர்வுமாகும் என்பதை உணருங்கள்.
• நபித்தோழிகளில் உங்களுக்கு அழகிய படிப்பினைகள் இருக்கின்றது, நடிகைகளோ, நட்சத்திர மாடல் அழகிகளோ, உலக அழகிகளோ? அல்ல என்பதை உறுதியாக நம்புங்கள்.
அல்லாஹ் நம் அனைவரையும் இஸ்லாத்தில் வாழ்ந்து மரணித்த பெண்களாக ஆக்கியருள்வானாக.!

பிரிந்து போகும் திருமண பந்தங்களுக்கு..


- உம்மு ஆனிஷா :
ஆண், பெண் உறவு என்பது உலகில் மனித சமுதாயம் நிலைத்திருக்க பிரதான காரணியாக அமைகிறது. இதனால்தான் அல்லாஹ் அனைத்தையும் ஜோடி ஜோடியாகப் படைத்தான் அத்தோடு ஆண்களை பெண்களுக்கு ஆடையாகவும் ஆக்கினோம் என்றும் கூறுகிறான். அதோடு யார் திருமணம் செய்கிறாரோ அவர் மார்க்கத்தில் அரைவாசியை பூர்த்தி செய்துவிட்டார் எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் இவ்வாறான சிறப்புக்களையும் தார்பரியங்களையும் கொண்டதாகவே இந்த திருமண பந்தம் காணப்படுகிறது. ஆனால் இன்று இந்நிலை மாறி குடும்ப உறவு என்பது கேளிக்கையாகிவிட்டது. சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் பிரிந்து செல்கிறார்கள் இதற்கான காரணம் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம் ஆனால் ஆண்கள் பெண்களை நிர்வகிப்பவர்கள் என்ற வகையில் அவர்களுக்கு செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றையே பெண்களும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள் இவற்றை ஆண்கள் நிறைவேற்றும்போது திருமணபந்தம் மனக்கசப்பின்றி சிறப்பாக தொடர்ந்து செல்லும்.
1. தான் மனைவியை விரும்புவதாக ஒவ்வொரு நாளும் கூறல்:
ஒவ்வொரு மனைவியும் தான் கணவனால் நேசிக்கப்படுகிறேனா என்பதை அறிந்து கொள்ளவே விரும்புவாள் எனவே இதனை கணவன் புரிந்து கொண்டு அவளை விரும்புவதாகக் கூறி அவளது மனதை ஆறுதல் படுத்தவேண்டும்.
2. புரிந்து கொள்ளலும், மன்னித்தலும்:
தவறு செய்யாதவர்கள் எவரும் இல்லை மனிதன் தவறு செய்யக்கூடியவன் என்ற ரீதியில் அவள் விடுகின்ற பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்தவே முற்பட வேண்டும் ஏனெனில் மன்னித்தல் என்ற அம்சம் இல்லாவிட்டால் எந்த உறவும் நிலைத்திருக்க முடியாது.
3. நல்ல முறையில் பேசுதல்:
காலம் செல்லச் செல்ல குறைந்து போகும் அம்சமான கணவனுக்கும் மனைவிக்கும் இடையான பேச்சு தொடர்பை குறைந்து விடக்கூடாது. மாறாக அவர்களோடு உங்களது பிள்ளைகள், காலநிலை, வீட்டு விவகாரம் செலவினங்கள் பற்றி பேசுங்கள். பேச்சு தொடர்பு குறைகின்ற போது மணவாழ்க்கை சிக்கலில் முடிவடையும்.
4. மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் நேரம் செலவழித்தல்:
நீங்கள் செலவழிக்கின்ற நேரத்திலே மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் செலவழிக்கின்ற நேரமே அதிகம் நன்மைபயக்கக் கூடியது.
5. இல்லை என்று கூறுவதைவிட அதிகமாக ஆம் என்று கூறுதல்:
வழமையாக நீங்கள் எதிராக நடத்தலானது (Negative) அவர்களை உங்களை விட்டும் தூரமாக்கி விடக்கூடும் இல்லை என்று சொல்வதற்கு முன் இருமுறை சிந்தியுங்கள் நீங்கள் ஆம் என்று சொல்வதானது எந்தளவிற்கு உறவை பலப்படுத்துகிறது என்பதை நீங்கள் அறியும் போது நீங்களே ஆச்சரியமடைவீர்கள்.
 6. பேச்சுக்களை செவிமடுத்தல்:
நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன என்ற வகையில் அவர்களின் உணர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள இடமளிக்க வேண்டும் உங்கள் மனைவியர் அவர்கள் கூறுகின்றவற்றை நீங்கள் காதுகளால் கேட்க வேண்டுமென எதிர்பார்ப்பதில்லை மாறாக இதயத்தால் செவிமடுக்க வேண்டும் என்றே எதிர்பார்ப்பர்.
7. அன்பு:
அவர்களோடு அன்பாக நடந்துகொள்ள வேண்டும் சில மணமக்கள் ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பதே சிறந்த திருமண உறவுக்கான பிரதான வழிமுறை என்பதை அறியாதிருக்கிறார்கள்.
8. வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளல்:
கணவனும் மனைவியும் சண்டையிட்டு பிரிந்து செல்வதற்கான பிரதான காரணம் வீட்டு வேலைகளை யார் செய்வது என்ற பிரச்சினையாகும் பிள்ளைகளை பராமரிப்பது என்பது பெண்கள் மீது மட்டும் திணிக்கப்பட்ட சுமையல்ல. அவள் அதை எதிர்ப்பார்க்காவிடினும் நீங்கள் அறிந்து உதவ வேண்டும்.
9. ஒருநாள் விடுமுறை அளித்தல்:
ஒரு மாதத்தில் பலமுறைகள் விடுமுறை அளியுங்கள் அதாவது அந்நாளில் அவள் வீட்டுக்கு பிள்ளைகளுக்கு உங்களுக்கு என்ன நடக்கிறது என்ற எந்தக் கவலையும் இன்றி ஓய்வாக இருக்க அனுமதியுங்கள் இவ்வாறான ஒருநாளை பெறுவதானாது அவர்களுக்கு உடல் ரீதியாகவும் உள ரீதியாவும் அவசியமானதாக அமைகிறது.
 10. உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் உங்களுக்காக நீங்கள் கவனம் செலுத்தல்:
பல ஆண்கள் தங்களின் ஆரோக்கிய வாழ்வில் கவனமற்றவர்களாக இருக்கிறார்கள் இது வாழ்விற்கு சிறந்ததல்ல. ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அது ஆரோக்கியமான உங்கள் குடும்ப வாழ்விற்கு அவசியமானதாகும்.

Saturday, March 2, 2013

மனிதா நீ எதற்காக படைக்கப்பட்டாய்!


- M. ஜமீலா B.A.,
நாம் வாழக்கூடிய இந்த நவீன கம்யூட்டர் உலகில் மனிதன் விண்ணைமுட்டுமளவு முன்னேறி உள்ளான். இதற்கு மேலும் ஒரு முன்னேற்றம் உண்டா என நினைக்கும் அளவிலுள்ள அசுர வளர்ச்சிதான் இது. 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த காலத்தையும், இக்காலத்தையும் எடுத்துக் கொண்டால் மலைக்கும், மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருப்பதை எவரும் மறுக்க இயலாது. இந்த அளவிற்கு அறிவை பயன்படுத்தி எல்லா துறையிலும் முன்னேறிய மனிதனின் இன்னொரு பக்கத்தை புரட்டி பார்த்தால் அவன் அதாள பாதாளத்தில் விழுந்து கொண்டிருப்பதை பார்க்கலாம். ஒழுக்கம், நேர்மை, கட்டுப்பாடு போன்ற நற்பண்புகள் இல்லாமல் மிருகத்தைவிட கேவலமாக தன் மனம் எப்படியெல்லாம் வாழ விரும்புகிறதோ அதற்கு கட்டுபட்டு, மயங்கி, அடிமையாகி அதன்படி வாழ்ந்து அவனுடைய தனிப்பட்ட வாழ்வில் விழ்ச்சி அடைந்துள்ளான். இக்காலத்தில் இந்தளவிற்கு ஒரு பக்கம் முன்னேறிக் கொண்டு இருக்கும் மனிதன் ஏன் மற்றொரு பக்கத்தில் இவ்வாறு வீழ்ச்சி அடைந்தான்? 
நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன – ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் – இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள். (குர்ஆன் 7: 179)
ஐம்புலன்களை கொண்டு செயல்படாத மனிதனை கால்நடையைவிட மோசமானவர்கள் என்று கூறுகிறான் இறைவன், இப்படிப்பட்ட சமுதாயத்தைதான் நாம் இன்று காண்கிறோம். ஒழுக்கம் இல்லாமல் எல்லா வகையிலும் வீழ்ச்சி அடைந்துள்ளான். உணவு, உடை, வீடு இதுதான் வாழ்க்கை இதற்கு மேல் ஒரு நோக்கமோ, இலட்சியமோ, குறிக்கோள்களோ இல்லாமல் தன்னுடைய உலக சுகத்தை மட்டும் கருத்தில் கொண்டு பிறருடைய நலன் பாதிக்கப்பட்டாலும் சரி பிறரென்ன ஒட்டு மொத்த சமுதாயம் பாதிப்படைந்தாலும் சரி, தான் மட்டும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
ஆனால் இறைவன் மனிதனை படைத்து அவன் மனிதனாக வாழ்வதற்கு தன்னுடைய இறைவசனங்கள் மற்றும் நபிவழியின் மூலமும் சொல்லி காட்டியுள்ளான். தான் எந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டுள்ளோம் என்ற நோக்கத்தையே சரிவர புரிந்து கொள்ளாமல் இன்றைய இஸ்லாமிய சமுதாய மக்களில் பலர் ஒழுக்கத்தில் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்கள் இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்-குர்ஆன் 51: 56)
இதனை நாம் ஒற்றை வரியில் கூறிவிடலாம் ஆனால் இறைவனை வணங்குவது என்றால் என்ன? என்று சரிவர புரிந்து கொள்ளவில்லை வணக்கம் என்றால் 24 மணி நேரமும் தஸ்பிஹ் மணியை உருட்டி கொண்டோ, தொழுது கொண்டோ, நோன்பு நோற்றோ அல்லது இன்ன பிற வணக்கங்கள் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று அர்த்தமா? அல்லது இந்த உலகம் என்னை கெடுத்து விடும் என்று அஞ்சி காடு, மேடு என துறவறம் போவது என்றர்த்தமா? இஸ்லாமிய வணக்கம் என்ன என்பதை நாம் முதலில் புரிந்து கொண்டால் எளிதாக இருக்கும்.
அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒருநாள் 3 சஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களுடைய இபாதத் எப்படி இருக்கும் என்று விசாரித்து, அவர்களில் முதல் சஹாபி, இனி நான் தூங்கவே மாட்டேன் இரவு முழுவதும் விழித்து தொழுவேன் என்றும், இரண்டாம் சஹாபி நான் திருமணமே செய்து கொள்ளமாட்டேன் என்றும், மூன்றாம் சஹாபி நான் நாள் முழுவதும் நோன்பு நோற்பேன் என்று பேசி முடிவெடுத்து கூறுகிறார்கள். இப்படி செய்து தீனை நிலைநாட்ட ஆசைப்பட்டார்கள். இதை கேட்ட நபி(ஸல்) அவர்கள், அந்த 3 சஹாபிகளிடமும் நான் உங்களைவிட இறைவனை அதிகம் அஞ்சுகிறேன் அப்படி இருந்தும் நான் திருமணம் செய்து இல்லறம் நடத்துகிறேன், சில நாட்கள் நோன்பு நோற்கிறேன் சில நாட்கள் விட்டு விடுகிறேன், நான் தொழவும் செய்கிறேன் உறங்கவும் செய்கிறேன் என கூறிவிட்டு யார் என்னுடைய வழிமுறைகளை புறக்கணிக்கிறார்களோ அவர்கள் என்னை சார்ந்தவர் அல்ல என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அஹமது, நஸயீ, புகாரி
மேற்கண்ட நபிமொழியிலிருந்து இறைவன் பார்த்து கொள்வான் என்று எந்நேரமும் தொழுவது, நோன்பு நோற்பதுதான் வணக்கம் என்று புரிந்து கொள்வது தவறு என அறியமுடிகிறது. இறைவன் மனிதர்களை படைத்தற்கான காரணத்தை மற்றொரு இடத்தில் கூறும்போது
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (அல்-குர்ஆன் 67: 2)
மேற்கண்ட வசனத்தில் இருந்து நம்முடைய ஒவ்வொரு செயல்களும் இறைவன் கூறியபடி இருக்க வேண்டும்.
இன்று பெரும்பாலான முஸ்லிம் சமுதாய வீட்டில் இடம்பிடித்து கொண்டு இருப்பது தொலைக்காட்சி. இது வீட்டிற்கு தேவையான சாதனம்தான் என்றாலும் அது எவ்வாறு ஒரு மனிதனின் செயலை (ஒழுக்கத்தை) வீழ்ச்சி அடையச் செய்கிறது என்று நாம் அனைவரும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இன்று இஸ்லாமிய இல்லங்களுக்குள் செல்லும் போது அழகான முறையில் ஸலாம் கூறி அதற்கான பதிலை செவியுற்று நுழைகின்ற நிலைமாறி எந்நேரமானாலும் திரைபடங்களும், பாடல்களின் ஒலியை கேட்டு கொண்டு நுழைகின்ற நிலைகள்தான் உள்ளது.
ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை யாரும் தவறாக பேசக்கூடாது என்று பல கட்டுப்பாடுகளை அவர்களுக்கு சொல்லி அதன்படி வெளியிலும் நடந்து கொள்ளும்படி கூறுகிறார்கள் ஆனால் சிறு குழந்தைகளின் மனதை மயக்கும் தொலைக்காட்சிகளை வீட்டினுன் வைத்து கண்டதையும் பார்த்து ரசிக்க அனுமதியளிக்கிறார்கள் இதனால் அவர்கள் பல தீயவழிகளுக்கு செல்லும் வாய்ப்புக்கள் அதிகமாகின்றன.
அபுஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எந்த தடையும் இல்லாமல் ஆதமுடைய மகன் விபச்சாரத்தின் ஒரு பங்கை அடைகிறான் அவனின் கண்கள் தீயவற்றை பார்ப்பதின் மூலமாகவும், தீயவற்றை அவனின் காதுகள் கேட்பதின் மூலமாக அவனின் மனம் அதை விரும்புகிறது அதனை உண்மைப்படுத்தும் விதமாக நடக்கின்றது. ஆதாரம்: அஹமது
ஆம்! சின்னத்திரைகளை பார்ப்பதோடு நம் மனது நின்றுவிடாது அதில் வரக்கூடிய நடிகைகளின் உள்ளங்காலில் தொடங்கி உடையலங்காரம் முதல் தலையலங்காரம் வரை பார்த்து தானும் அது போல் அலங்கரித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக பல வரம்புகளை மீறி அன்னிய ஆடவர்கள் முன் சென்று கொண்டு இருக்கின்றனர்.
இஸ்லாம் கூறியபடி இன்று நாங்கள் பர்தாவை கடைபிடிக்கின்றோம் என்று சிலர் அணிந்து கொண்டுதான் செல்கின்றனர் ஆனால் சத்தம் கேட்கும் கண்ணாடி வளையல், கொலுசு, நறுமணப் பொருட்களை மற்றும் மணம்மிக்க பூக்களை உபயோகித்து செல்கின்றனர். வீட்டிற்குள் கணவனின் முன் எவ்விதமான அலங்காரத்தையும் அனுமதிக்கும் இஸ்லாம் வெளியில் செல்லும் போது அவள் வைத்திருக்கும் பூவின் வாடையைகூட அன்னிய ஆடவர்களை கவரகூடாது என்கிறது. அறிவிப்பாளர்: அபுமூஸா(ரலி) அவர்கள்.
மேலும் ஒரு ஹதீஸில், நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு கூட்டத்தை கடந்து ஒரு பெண்மனி செல்கிறாள், அவளின் நறுமணம் அவர்களை கவரும் அதனால் அவள் விபச்சாரிக்கு சமமாவாள். ஆதாரம்: அஹமது
இன்னும் நம் பெண்கள் பர்தாவை அணிந்து தலைமுடிகள் பாதி தெரிய வெளியில் செல்கின்றனர். ஒரு முடிகூட வெளியில் தெரிய கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.
இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான் முஃமினான பெண்களுக்கு நீர்; கூறுவீராக, அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும் தங்கள் அழகலங்காரத்தில் (சாதரணமாக) வெளியில் தெரியக்கூடியதைத் தவிர வேறு எதையும் வெளிக் காட்டலாகாது (அல்-குர்ஆன் 24: 31)
மேற்கண்ட நபிமொழிகளையும், இறைவசனங்களையும் வைத்து பார்க்கும் போது நம் எண்ணஓட்டத்தில் நேரடியாக எந்த தவறுகளை செய்யாமல் இருந்தாலும் சிறு சிறு செயல்களில் வரம்பு மீறுவதால் மறுமையில் பெரும்பாவங்களுக்கு சமமான நிலைக்கு நிற்க நேரிடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவேளை இந்த செயல்கள் அனைத்தும் இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாத பெயர்தாங்கி இஸ்லாமியர்களிடம் இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை ஆனால், இஸ்லாத்தை பற்றி தெரிந்து ஐந்து நேர தொழுகை போன்ற இன்னபிற கடமைகளை செய்து கொண்டே அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் கைவிட்டு விடுகின்றனர். (1)
தன் மனதை பின்பற்றுபவனை பார்த்து இறைவன் கூறுகிறான் நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது – இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும் – ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக. (அல்-குர்ஆன் 7: 176)
இறைவன் கொடுத்த அருட்கொடையான நேரங்களில் அவன் கூறியபடி அனுமதிக்கப்பட்ட வழியில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அதாவது வணக்கம், கொடுக்கல்-வாங்கல் இன்னபிற காரியங்கள் என்று 24 மணி நேரமும் அல்லாஹ்வும், அவன் தூதரும் சொன்ன முறையில் செலவிட்டால்தான் இறைவன் கூறிய வணக்கம் மற்றும் அவன் படைத்ததின் நோக்கத்தை நம்மால் நிறைவேற்ற முடியும். ஐந்து நேர தொழுகையில் ஒரு நேரத்திற்காக ஒதுக்கும் அரை மணி நேரம் மட்டும் இறைவனை வணங்கிவிட்டு மற்ற நேரங்களில் ஒழுக்கம் இல்லாமல் தன் மனம் போன போக்கில் வாழ்ந்தால் அவன் இறை நம்பிக்கையாளனாக ஒரு போதும் ஆக முடியாது.
பனீஇஸ்ராயீல் காலத்தில் நடந்த ஒரு சம்பவம். 3 பேர் பிரயாணம் செய்கிறார்கள் போகும் வழியில் மழை பொழிகிறது ஒரு குகையில் ஒதுங்குகின்றார்கள் ஒரு பெரிய (பாறாங்) கல் குகையின் வாயிலை அடைத்து விடுகிறது. மூன்று பேரும் இறைவனிடம் முறையிட்டார்கள் ஒருவர் கூறினார், இறைவா! நிறைய செல்வத்தை நீ கொடுத்தாய் அச்சமயம் பார்த்து பக்கத்து வீட்டு பெண் ஏழ்மையாக இருந்தால் நான் அந்த ஏழ்மையை பயன்படுத்தி என் ஆசைக்கு இணங்க கேட்டேன் ஒரு சமயம் அவளுக்கு இக்கட்டான கஷ்டம் வந்தபோது (பணத் தேவைக்கு) அவளே என்னிடம் வந்தாள் நான் அவளை நெருங்கும் போது நீ இறைவனை அஞ்சிக்கொள் என்று கூறினால் உடனே விலகினேன் என்று அவர் செய்த நற்செயலை கூறி பிராத்தனை செய்தார் பாறை கொஞ்சம் விலகியது.
இரண்டாமவர், இறைவா! என்னிடம் ஒரு நபர் வேலைக்கு வந்தார் சில காலம் வேலை செய்துவிட்டு கூலி வாங்காமல் போய்விட்டார், அந்த கூலி தொகையை மூலதனமாக கொண்டு ஆட்டு மந்தை உருவானது, பிறகு அந்த நபர் வந்து கூலி கேட்டார் நான் அந்த ஆட்டு மந்தையை அவருக்கு கொடுத்தேன் என்று கூறி பிராத்தனை செய்தார் அப்போது கல் கொஞ்சம் விலகியது, முன்றாமவர், என் இறைவா! எனக்கு வயதான பெற்றோர் இருந்தார்கள் அவர்களுக்கு உணவு கொடுத்துதான் நான் சாப்பிடுவது என் வழக்கம் ஒரு நாள் நான் பால் கறந்து வருவதற்குள் அவர்கள் இருவரும் தூங்கிவிட்டார்கள் அவர்கள் விடிந்து விழிக்கும் வரை அவர்கள் பக்கத்தில் அமர்ந்து இருந்து அப்பாலை கொடுத்து பிறகு நான் பருகினேன் என்று கூறி பிராத்தித்தார் அப்பொழுது அப்பாறை முழுமையாக விலகியது.
மேற்கண்ட சம்பவத்திலிருந்து நாம் படிப்பினை பெறுவது என்னவென்றால் அவரவர்கள் செய்த ஒவ்வொரு நற்செயலையும் அல்லாஹ்விடம் பிராத்தனை செய்து சிக்கலில் இருந்து விடுதலை பெற்றார்கள். அவ்வாறாக நாமும் நமக்கு பிரச்சினைகளை ஏற்படுகின்ற நேரத்தில் நம்முடைய நல்லமல்களை எடுத்துச் சொல்லி அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ் நிச்சயம் உதவி செய்வான். ஆனால் நம் சமுதாய மக்களோ, ஒரு பக்கம் ஒழுக்கம் இல்லாமல் அலைகின்றனர், மறுபக்கம் மூடநம்பிக்கையில் விழுந்து தன்னைத்தானே அழித்துக் கொள்கின்றனர்
உனக்கே நாங்கள் அடிபணிகிறோம் உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம் என்று தினமும் 5 வேளை தொழுகையில் ஓதி கொண்டு தனக்கு ஏதாவது கஷ்டமோ, நோயோ வந்தாலும் மற்றும் சந்தோஷம் தரக்கூடிய நிகழ்வுகள் அதாவது திருமணம் இதுபோன்றவை நடந்தால் பால்கிதாப் மற்றும் ஜோஸியம் பார்க்கக் கூடியவர்கள் நம் சமுதாயதிலும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதை எண்ணும்பொழுது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. நறுமணத்திற்காக பத்தி பற்ற வைக்கக்கூடிய வழக்கம் மாறி, இந்த பத்தி பற்ற வைப்பதுகூட ஒரு வணக்கம் என்ற நிலைக்கு தள்ளிவிட்டார்கள், இந்த பலகீனத்தை பயன்படுத்தி சில மனிதர்கள் தங்களிடம் வந்தால் செய்வினை எடுத்துத் தரப்படும் என்றும் நோய் தீர்க்கப்படும் என்றும் நள்ளிரவுகளில் பெண்களோடு இருந்து கூத்தடித்துக் கொண்டிருப்பதை நம் சமுதாயத்திலும் மெல்ல தலைகாட்டுவதை பத்திரிக்கைகள் மூலமாக அறிய முடிகிறது.
மூடநம்பிக்கையில் மூழ்கியவர்களோ அம்மனிதர்கள் தங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்கள் என்று தங்கள் செல்வத்தை அவர்களிடம் வாரி வழங்கி ஏழ்மையாகின்றனர் மற்றொருபுரம் தங்கள் மன அமைதியை இழந்து மனநோய்க்கு ஆளாகின்றான் இறுதியில் அவனுக்கு பேய் பிடித்து விட்டது என்று இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை கூறி அவனை அழித்து விடுகின்றனர் மூட நம்பிக்கையுள்ளவர்களை பார்த்து இறைவன் கூறுகிறான்.
எவர்கள் அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தனது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டி அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக்கொண்டோரும் நஷ்டம் அடைந்தனர், வழி கெட்டனர், நேர் வழி பெறவில்லை (அல்-குர்அன் 6: 140)
உலகில் மற்ற மதங்களில் சொல்லும் கலாச்சாரங்களை விட இஸ்லாம் ஒரு மனிதனுக்கு உயர்ந்த கலாச்சாரங்களை கூறி நீ அதன்படி வாழ வேண்டும் இல்லையென்றால் உனக்கு இரண்டு உலகிலும் அதற்கான தண்டனையுண்டு என்று கண்டித்து கூறுகிறது ஒவ்வொரு மனிதனும் ஒழுக்கத்துடன் வாழத்தான் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையை திறந்த புத்தகமாக உள்ளது.
நபி(ஸல்) அவர்களை பார்த்து இறைவன் தன் திருமறையில் கூறுகிறான். இன்னும் (நபியே) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமேயன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை, ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் (அல்-குர்ஆன் 34: 28)
மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின்பால் நீர் கொண்டு வருவதற்காக இவ்வேதத்தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம் (அல்-குர்ஆன் 14: 1)
ஆகவே! என் இஸ்லாமிய சமுதாய சகோதர, சகோதரிகளே ஒரு மனிதனுக்கு தொழுகை அவசியம், நோன்பு அவசியம், ஜக்காத் அவசியம் இதை மட்டும் செய்தால் இறைவனிடம் ஈடேற்றம் பெற்றிட முடியாது ஒரு மனிதனின் வாழ்வில் இறைவன் வகுத்து கொடுத்தளவு அவனுக்கு பயந்து ஒவ்வொரு விஷயத்திலும் மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்து அற்பமான விஷயங்களால் கவர்ந்து இழுக்கும் தன் மனதை அவற்றிக்கு மயங்கவிடாமல் ஒழுக்கத்தில் உயர்வாய் வாழ்ந்து நாமும் சுவர்க்கம் செல்ல வேண்டும், பிறரையும் அழைத்து செல்ல வேண்டும் என்ற இலட்சியத்தோடு இருங்கள்.
இறைவன் கூறுகிறான். மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;. இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்;. வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்;. எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். (அல்-குர்ஆன் 3: 110)
இவ்வசனத்தின்படி நாம் நம்முடைய செயல்களில் அழகானவர்களாக இருந்தால் இந்த உலகமே நம்மை திரும்பி பார்க்கும் அதில் ஒவ்வொரு மனிதனும் ஒழுக்கத்தோடு வாழ நம்மிடையே அழகிய முன்னோடிகளை இறைவன் காட்டி தருவான் இறைவன் நம்மை படைத்த நோக்கத்தை நாம் சரியாக புரிந்து அதன்படி வாழ்ந்து சுவர்க்கத்தை நாம் அடைய இறைவன் வழிகாட்டுவானாக!

குழந்தைகள் நன்றாக படிக்கவில்லையா?


- இறைநேசன் :
குழந்தைகளின் அறிவு மதிப்பெண்களால் நிச்சயிக்க படுகிறது என்பதில் ஓரளவாயினும் உண்மை இருக்கிறது. அந்த பெண்ணைவிட உனக்கு எல்லா வசதிகளும் இருக்கு, அதே வகுப்புதான், ஒரே ஆசிரியர்தான், ஏன் உன்னால் மதிப்பெண் வாங்க முடியவில்லை  என்பதில் தொடங்கி வீட்டுக்குள்ளேயே சகோதர, சகோதரிகளிடையே வெறுப்பு வரும் வரை இந்த ஒற்று நோக்குதலும் நடக்கிறது. உண்மையில் இது ஒரு உடல் தன்மையாக கூட இருக்கக்கூடும்.
டிஸ்லெக்ஸியா என்பது ஒரு நரம்புமண்டலத்தை சார்ந்த ஒருவகை மாற்றம். இதனை நோய் என்று சொல்வதைவிட நேர்முறைக்கு மாறான ஓட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இதன் அடிப்படை அறிகுறி ஒருவருக்கு படிப்பதில் அல்லது எழுதுவதில் உள்ள தடுமாற்றமே ஆகும். இது சில உயிர்வேதியியல் மற்றும் மரபணுக்களின் குறியீடு மாற்றத்தால் வரும் ஒரு மாறுபட்ட சிந்தனை ஆகும். ஆனால் சிலர் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கபட்டிருந்தாலும் நன்றாக, சரளமாக படிக்க கூடும். இவர்களின் சிந்தனை ஓட்டம் சற்றே தடைப்பட்டிருக்கும்.
1887-ல் முதன் முதலாக இம்மாதிரி மாற்றங்களுக்கு டிஸ்லெக்ஸிக் என்ற பெயர் சூட்டப்பட்டது. இப்படிபட்ட மாற்றங்கள் உள்ளவர் அவரை ஒத்த, மற்றவரைவிட எழுத, படிக்க, யோசிப்பதில் என்று ஒரு தரம் தாழ்ந்திருப்பதாக அறியப்படுகிறது.
கண் பார்வை சரியில்லாமல் போனால் இத்தகு மாற்றம் ஏற்படுமா? அல்லது வேறு ஏதாவது நுண்ணிய நரம்பு மண்டல மாற்றங்களால் ஏற்படுகிறதா? என்று ஆராய்ந்ததில், மூளையின் அமைப்பில் வெளி தோற்றத்தில் சில மாறுதல்கள் இருப்பது தெரியவந்தது. டிஸ்லெக்ஸியா இருப்பவர்கள் சரியாக உச்சரிக்ககூடிய சக்தியை குறைவாக பெற்றிருப்பார்கள். டிஸ்லெக்ஸிக் உள்ளவர்கள் கீழே உள்ள பட்டியலில் ஏதேனும் சில அறிகுறிகளை கொண்டிருப்பார்கள். இவை நிமிடத்திற்கு நிமிடம் மாறக்கூடும், அல்லது நாளாக நாளாக இன்னும் குழப்பமும் தெளிவின்மையும் அதிகரிக்கக்கூடும்.
பொது அறிகுறிகள்:
• பார்க்க நல்ல புத்திசாலி போலவும், நல்ல ஆற்றொழுக்கு பேச்சும் உடையவராக இருக்க கூடும். ஆனால் அவரின் வகுப்பு மாணவர்களை போல எழுத-படிக்க முடியாமல் தடுமாறுவார்கள்.
• சோம்பேறி என்றோ அல்லது அதிகமாக உன்னால் உழைக்க முடியும் ஆனால், நீ உழைப்பதில்லை என்று சொல்லும் வண்ணம் இருப்பார்கள்.
• சில சமயம் நல்ல பொது ஞானம், அறிவு உள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் எந்த தேர்வும் நன்றாக எழுத மாட்டார்கள். அதே சமயம் கேள்விகள் கேட்டால் நன்றாக பதில் சொல்வார்கள்.
• முட்டாளைப் போல தோற்றமும், தாழ்வு மனப்பான்மை கொண்டவராகவும், தனியே இருப்பதை விரும்புவராகவும் இருப்பார்கள்
• நல்ல தொழில் திறமை கொண்டிருப்பார்கள். பாடுவது, ஓவியம் வரைவது போன்ற கலைகளில் அல்லது நல்ல கருவிகளில் (Mechanics) தேர்ச்சி உடையவராக இருப்பார்கள்.
• பகற்கனவு காண்பவராக இருக்க கூடும்
• நல்ல படங்களுடன் கூடிய பாடங்கள், தானாகவே செய்யும் சோதனைகள் மூலம் கற்றல் இவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களின் சிந்தனை படங்களையும் பார்க்கக்கூடிய விளக்கங்களாலும் மேலும் நுணுக்கம் பெறுகிறது.
பார்வை, படித்தல், மற்றும் எழுத்துப்பிழைகள்:
• படிக்கும் போது தலை வலிப்பதாகவும் தலை சுற்றுவதாகவும் சொல்வார்கள்.
• எழுத்துக்கள், எண்கள், சொற்கள் இவற்றில் பல குழப்பங்கள் இருக்கும்
• திரும்பத் திரும்ப வரும் சொற்களில் குழப்பம், மாறிவரும் எழுத்துக்களின் தடுமாற்றம், எழுத்துக்களை மாற்றி படித்தல் இவை சாதாரண நிகழ்வுகள்.
• கண்களில் குறை இருப்பதாக சொல்வார்கள். ஆனால் கண்களிலோ பார்வையில் ஒரு குறையும் இருக்காது
கேட்டல், பேசுதல்:
* அதிக நேரம் கேட்பதுபோல உணர்வார்கள், சொல்லாததை சொன்னதாகவோ சின்ன சின்ன சப்தங்கள் கூட கவனத்தை சிதைக்க கூடியதாக உணர்வார்கள். அதிக மனஅழுத்தம் இருப்பின் தவறுகள் அதிகம் செய்வார்கள். மேலும் முழுமையான வாக்கியங்கள் அமைக்க மிகவும் கஷ்டப்படுவார்கள்.
எழுதுதல் மற்றும் இயக்க திறமைகள் (Motor skills):
* பென்சிலை பிடித்து கொள்வதில் மாற்றம் இருக்கும். கை எழுத்து நன்றாக இருக்காது. புரிந்து கொள்வது மிகவும் கடினம்.
* இடமிருந்து வலமாக எழுதுவதோ அல்லது இடது கை பழக்கம் உள்ளவராக இருக்க கூடும்.
நேரம் தவறாமை அல்லது நேர நிர்வாகம்:
* இவர்களுக்கு நேரம் சொல்வது கடினம். ஒரு வரிசை கிரமத்தில் வேலைகள் செய்வதும் நினைவில் வைத்து கொள்வதும் கடினம்.
* பண விஷயத்தில் கவனம் போதாது. எண்னுதல் மிகவும் கடினமான செயல்.
* கணக்கில் விவரங்களுடன் கூடிய கணக்குகளை போட சிரமப்படுவார்கள்.
நினைவுத்திறனும், புரிந்து கொள்ளும் திறனும்:
* நீண்ட நாட்களுக்கு முன் நடந்ததை எல்லா விவரங்களுடனும் நினைவு வைத்திருப்பார்கள். மனித முகங்கள், நிகழ்வுகளை நினைவு கொள்ளும் இவர்களால் பெயர்களையோ அல்லது சற்றே எண்களுடன் கூடிய விவரங்களையோ நினைவு படுத்த முடியாது.
சில உண்மைகளும், புள்ளிவிவரங்களும்
ஐந்திலிருந்து 15 சதவிகிதம் மக்கள் டிஸ்லெக்ஸியாவினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்பட்டாலும் நல்ல மருந்துகள் மூலம் இதனை குணப்படுத்த முடியும்.
ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகள் நன்றாக வாய்விட்டு படிக்க தடுமாறும் போது டிஸ்லெக்ஸியா இருப்பது பெரும்பாலும் கண்டுபிடிக்கப்படுகிறது. இது கண் பார்க்கும் எழுத்து வடிவத்தையும், மனதில் பதிந்துள்ள ஒலி வடிவத்தையும் பொருத்தி பார்க்க தாமதமாவதால் ஏற்படும் தடுமாற்றமும் ஒரு காரணம். இதற்கு பெரும்பாலும் பிறக்கும் போதே நடக்கக்கூடிய நிகழ்வுதான் காரணம் என்பதால், சுற்று புற சூழலோ மற்ற வேதி பொருட்களின் தன்மையோ இதற்கு காரணம் இல்லை. இவர்களின் இடது பக்க மூளையில் நடக்கும் செயல்கள் சற்றே தாமதமாக செயல்படுவது காரணமாக சொல்லப்படுகிறது.
எப்படி குணப்படுத்த முடியும்?
இப்படிப்பட்ட குறையுள்ள குழந்தைகளுக்கு வார்த்தைகளை பிரித்து பொருள் சொல்லி தருவதை வழக்கமாக கொள்ள வேண்டும். வார்த்தைகளை பிரிக்கும் போது ஒலியில் வரும் சிறிய மாற்றங்களை உணரும் வண்ணம் சொல்லித் தந்தால் படிப்படியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.
இடது பக்க மூளை வடிவங்கள் அவற்றின் அமைப்புகள் இவற்றில் திறன் கொண்டது. இது இடது டெம்ப்போ பெரைடல் மூளைக்கு அருகில் உள்ளது. எனவே படங்களுடன் கூடிய வார்த்தைகளை அவற்றின் ஒலியைப் புரிந்து கொள்ளுதல் எளிதாக வரும். மிக இளைய வயதிலேயே கண்டறியப்பட்டால் இன்ஷாஅல்லாஹ் இது பூரணமாக குணமடைய வாய்ப்பிருக்கிறது. குழந்தைகளுக்கு வயதுக்கேற்ப சில வேலைகளை சொல்லிக்கொடுங்கள். அவற்றைச் செய்யும் போது அவற்றுடன் அதிக நேரம், அவற்றின் வடிவம் இவற்றையும் பதிய வைக்க முயற்சி செய்யுங்கள். ஒரு அறையில் உள்ள தொலைகாட்சி பெட்டியை சுத்தம் செய்தால் அதன் வடிவத்தை மனதில் பதிய வைக்க முடியும். துடைக்கும் போது கைகளால் அதன் வடிவத்தை ஒற்று நோக்குவதால் வடிவம் புலப்படும். மேலும் இது போன்ற சின்ன செய்கைகள் அவர்களின் தாழ்வு மனப்பான்மையைப் போக்குவதோடு, அவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவுகிறது.
ஒரு முக்கிய குறை இரு கண்களையும் ஒரு நேரத்தில் ஒரு சொல்லில் குவிப்பது. இது பலநேரங்களில் டிஸ்லெக்ஸிஸ் மாணவர்கள் எழுத்துக்கள், எண்கள் இவற்றின் வரிசை கிரமத்தில் குழப்பம் அடைவதை விளக்குகிறது. வலது கண் சொல்லின் ஆரம்பத்திலும் இடது கண் சொல்லின் முடிவிலும் ஆரம்பித்து இரண்டையும் ஒன்றாக பார்க்கிறார்கள். இதற்கு கண்ணில் ஒருவித கறுப்பு patch அணிந்து கொண்டு படித்தால் சரியாவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
மேலும் கண்கள் தொடர்பான சில நியூரான்கள் குவிக்கப்படுவதால் மூளையில் உள்ள பார்வை மையத்தில் தொடர்பு ஏற்பட தாமதம் ஆகிறது. அதேபோல குரோமோசோம் 1, 6 இவற்றில் உள்ள மூலக்கூறுகளின் அமைப்பிற்கும் டிஸ்லெக்ஸிற்கும் தொடர்பு இருக்கக்கூடும்.
இது போல சில குறைபாடுகளால் குழந்தைகள் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.அடிப்படை குறைபாடுகளைப் புரிந்து கொள்ளாமல் நன்றாக பழகுவதில்லை, படிப்பதில்லை, கவனம் போதாது என்று குறை கூறாமல், குறைகளைக்களைய அறிவியல் ரீதியில் முயன்றால் நிச்சயம் குழந்தைகள் நன்றி உடையவர்களாக இருப்பார்கள்.

ஹிஜாப் உள்ளும் புறமும்


ண்ணுக்கு இமை போல் பெண்ணுக்கு ஹிஜாப்.
இமைகளை இறைவன் படைத்திருப்பது கண்-களைச் சிறைப் படுத்தவோ சிதைக்கவோ அல்ல. கண்களின் பாதுகாப்புக்குத்தான்.
அதுபோல பெண்களுக்கு  ஹிஜாபை இறைவன் கடமையாக்கியது  அவளை அடிமைப்படுத்தவோ   சிறுமைப்படுத்தவோ அல்ல. அவளுடைய கண்ணியத்தைக்  காப்பதற்குத்தான்.
இன்று நம் நாட்டில் மட்டுமல்லஉலகம் முழுவதும் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைத் தாக்குதல்கள் பெருகி வருகின்றன. இதற்குப் பெரும்பாலும் காரணமாக இருப்பது பெண்களின் அலங்கோல அரைகுறை ஆடைகள்தான்.
ஆள் பாதி ஆடை பாதி’ என்னும் பழமொழியைப் பலர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்களோ என்று பயமாக இருக்கிறது. ஒருவர்  வாழ்வில்  முன்னேற நல்ல ஆளுமைப் பண்புக்கு எந்த அளவுக்கு  முக்கியத்துவம் உண்டோ அதே அளவு முக்கியத்துவம் அவர் உடுத்தும்  கண்ணியமான  ஆடைக்கும்  உண்டு என்பதுதான் அதன் பொருள்.
ஆனால் இன்றைக்குப் பாதி ஆடை போதும்’ என்று நவநாகரிக நங்கையர் நினைத்துவிட்டார்களோ என்னவோஅரைகுறை ஆடைகள் உடுத்தி ஆபத்துகளில் சிக்கிக்கொள்கிறார்கள்.
பெண்கள் எந்தத் தொல்லைக்கும் ஆளாகக்கூடாது எனும் உயர்நோக்கத்துடன் இஸ்லாமியத் திருநெறி பெண்களுக்குப் பர்தாவைக் கடமையாக்கியுள்ளது. அதையொட்டிய  அருமையான வழிகாட்டுதல்கள் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
ஹிஜாப் என்பது என்னஉடையில் மட்டும்தான் ஹிஜாபாஅதன் சட்ட திட்டங்கள் என்னநபித்தோழியர்கள் ஹிஜாபுக்குத் தந்த முக்கியத்துவம் என்ன,  முகத்திரை அவசியமா,  நபிகளாரின் காலத்தில் பெண்கள் முகத்தை மறைத்தார்களா முதலிய பலவகையான வினாக்களுக்கு இந்தச் சிறுநூல் மிகத் தெளிவாக விடை அளிக்கிறது.
பர்தா பற்றி அலட்சியமாக இருக்கும்   சகோதரிகள்கூட இந்த நூலைப் படித்தால் நிச்சயம் ஹிஜாபைப் பேணத் தொடங்கிவிடுவர். மறுமையில் நபிகளாரின் பரிந்துரை கிடைக்க வேண்டும் எனில் பர்தா எந்த அளவுக்கு இன்றியமையாதது என்பதைப் படிக்கும்போது உடல் சிலிர்க்கிறது. இதுபோன்ற பல நிகழ்வுகளை இதயத்தைத் தொடும் வகையில் மௌலவி நூஹ் மஹ்ழரி அவர்கள் இந்த நூலில் தொகுத்தளித்துள்ளார்.
 முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றிதமிழ் அறிந்த ஒவ்வொரு பெண்ணும் இதைப் படிக்கவேண்டும். அதுமட்டுமன்று,  பாலியல் கொடுமைகளையும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும்   எதிர்த்துப் போராடும் மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரின் கைகளிலும்  இந்த நூல் சென்று சேரவேண்டும் என்பது எங்கள் பேரவா.