Pages

Thursday, May 14, 2020

அஷ்ஷெய்க் முஜாஹித் பின் ரஸீன் உஸ்தாத் அவர்கள் ஆற்றிய பின்வரும் இஸ்லாமிய சமூகத்தின் ஆட்சி வரலாற்றுத் தொடர்களைப் பார்க்கவும்

Ibnu  Razeen: السلام عليكم ورحمة الله وبركاته

Super Muslim சகோ முஸ்தபாவின் விளக்கத் தவறுகளை புரிந்து கொள்ளள அஷ்ஷெய்க் முஜாஹித் பின் ரஸீன் உஸ்தாத் அவர்கள் ஆற்றிய பின்வரும் இஸ்லாமிய சமூகத்தின் ஆட்சி வரலாற்றுத் தொடர்களைப் பார்க்கவும்

👇👇👇👇👇👇👇👇👇👇👇

1- நபிகளாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் - தொடர் 01
https://youtu.be/TsXWvIIyou0

2- நபிகளாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் - தொடர் 02
https://youtu.be/tpkcAXomj1w

3- நபிகளாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் - தொடர் 03
https://youtu.be/dKS7IMApXBE

4- நபிகளாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் - தொடர் 04
https://youtu.be/E4hydEzIDHg

5- நபிமார்கள் எதற்காக அனுப்பப்பட்டார்கள்? - தொடர் 01
https://youtu.be/WkwVOZ_Kdxk

6- நபிமார்கள் எதற்காக அனுப்பப்பட்டார்கள்? - தொடர் 02
https://youtu.be/MVPyn8tbugs

7- கிலாஃபத்தை (இஸ்லாமிய ஆட்சியை) புரிந்து கொள்வது எவ்வாறு....
https://youtu.be/Gqpe_9JjEO4

8- இஸ்லாமிய ஆட்சியின் பெயரில் ஷீஆயிஷம் இன்று ஈரானில்
https://youtu.be/uEoSvIGAQ_c

9- இஸ்லாத்தின் பார்வையில் ஆட்சி மாற்றம்
https://youtu.be/x5h34Pc5syA

10- ஷீஆ பயங்கரவாதமும் முஸ்லிம்களின் நிலையும்
https://youtu.be/p1ZCAWWI-i0

11- இஸ்லாமிய வரலாறு ஓர் அறிமுகம்
https://youtu.be/dhKbV8O1qBk

12- அபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
https://youtu.be/X1eRwHVhqnM

13- உமர்(ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் - பாகம் 01
https://youtu.be/Eqw6hNSCC3g

14- உமர்(ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் - பாகம் 02
https://youtu.be/qWRTkyWR1Lk

15- உமர்(ரலி) அவர்களின் ஜும்ஆ குத்பா
https://youtu.be/_AHy_9KLAa0

16- உமர்(ரலி) அவர்களின் இறுதி நாட்களும் மரணமும்
https://youtu.be/9yh9RX8ulJ0

17- உஸ்மான் இப்னு அஃபான் (ரலி) அவர்கள் வாழ்வில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்
https://youtu.be/3c5Ut_6vvBM

18- உஸ்மான் (ரலி) அவர்களின் வரலாறும் விமர்சனம் பற்றிய தெளிவுகளும் - தொடர் 01
https://youtu.be/gPyH1mqgZWM

19- உஸ்மான் (ரலி) அவர்களின் வரலாறும் விமர்சனம் பற்றிய தெளிவுகளும் - தொடர் 02
https://youtu.be/QfDo0sa9LQ0

20- அலி(ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு - பாகம் 01
https://youtu.be/4uFTCekUxhk

21- அலி(ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு - பாகம் 02
https://youtu.be/XB3GzUe6zc4

22- ஹஸன் ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைப் பற்றிய அஹ்லுஸ்ஸுன்னாவின் அகீதா
https://youtu.be/M6TXZ7o-wb4

23- அஹ்லுல் பைத் நபிகளாரின் குடும்பம்
https://youtu.be/PI6FLD85q98

24- ஜமல் யுத்தம் வரலாறும் படிப்பினையும்
https://youtu.be/UyBJHIuUEo4

25- ஸிப்பீன் யுத்தம் வரலாறும் படிப்பினையும்
https://youtu.be/RdS9IyZzaaA

👇👇👇👇👇👇

26- முஆவியா இப்னு அபூ சுfப்யான் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு- தொடர் 01
https://youtu.be/7PMUunIbR-0

27- முஆவியா இப்னு அபூ சுfப்யான் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு- தொடர் 02
https://youtu.be/2CQc7gP5Weg

28- முஆவியா இப்னு அபூ சுfப்யான் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு- தொடர் 03
https://youtu.be/WL0EM9iFn1E

29- முஆவியா இப்னு அபூ சுfப்யான் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு- தொடர் 04
https://youtu.be/OdfcMDYg1ew

30- யஸீத் இப்னு முஆவியா (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு- பாகம் 01
https://youtu.be/TqbR3KuJIfI

31- யஸீத் இப்னு முஆவியா (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு- பாகம் 02
https://youtu.be/_4iELBBoavA

32- கர்பலா யுத்தம் - ஹுஸைன் (ரலி) அவர்கள் மற்றும் அஹ்லுல் பைBத்தினர் கொல்லப்பட்ட இடம்
https://youtu.be/4V8-DhchB-I

33- ஹர்ரா யுத்தம்
https://youtu.be/91G4ZVlUC0E

34- அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் - பாகம் 01
https://youtu.be/99bxoEuNQZo

35- அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் - பாகம் 02
https://youtu.be/w1QTkX7kq9k

36- அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் - பாகம் 03
https://youtu.be/Qhv4zHqzEbY

37- உஸ்மானிய கிலாஃபத் ஓர் அறிமுகம்
https://youtu.be/bjw3QZakVas

38- இஸ்லாமிய வரலாறு- ஓர் பார்வை
https://youtu.be/ZF0NMQt6FfM

39- மொங்கோலியர் தாதாரியர் பற்றிய முன்னறிவிப்பு
https://youtu.be/oWqEg33Eu5c

40- ஸஊதி அரேபியாவில் ஹவாரிஜ் சிந்தனையை விதைத்த இஹ்வான்களின் துரோக வரலாறு
https://youtu.be/iqVAVmNEBd0

41- மன்னராட்சி இஸ்லாம்  அங்கீகரிக்கும் ஆட்சியா? -ஆட்சி பேசும் இயக்கங்களின் இரட்டை நிலை-
https://youtu.be/xqqvpVA-0yA

42- ஸீராவின் ஒளியில் அகீதா
https://youtu.be/h7o4w5F4KoY

43- இஸ்லாமிய வரலாறு
https://youtu.be/HW8fh0a3r7U

44- இஸ்லாமிய எழுச்சியும் முக்கிய அடிப்படைகளும்
https://youtu.be/KfwOBZg7d84

45- ஹூதி ஷீஆக்களுக்கான ஆதரவும் ஸஊதிய ஆட்சிக்கெதிரான காழ்ப்புணர்வும்
https://youtu.be/2Vbvt_LBLk8

46- மத்திய கிழக்கின் தற்போதைய நிலை ஓர் அலசல்
https://youtu.be/-7rgsEuADyg

47- பைBத்துல் முகத்தஸ் - மஸ்ஜித் அல்-அக்ஸாவில் தற்போது நடப்பது என்ன?
https://youtu.be/sBxiSFKugis

48- சிரியா (Syria) தேசம் அழுகிறது
https://youtu.be/0aFJgA3I5-o

49- யார் இந்த யூத கிறிஸ்துவர்கள்?
https://youtu.be/vHXnuHpl44k

50- Nusayriya Tyranny in Syria
https://youtu.be/VYSVKtg5vYY

மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள் உரையாற்றிய சஹாபாக்களின் வரலாற்றுத் தொடர்களின் தொகுப்பு

மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள் உரையாற்றிய சஹாபாக்களின் வரலாற்றுத் தொடர்களின் தொகுப்பு 


0️⃣1️⃣
அபு பக்கர் சித்திக் (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
https://youtu.be/X1eRwHVhqnM

0️⃣2️⃣
உமர் (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் - பாகம் 1
https://youtu.be/Eqw6hNSCC3g

0️⃣3️⃣
உமர் (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் பாகம்-2
https://youtu.be/qWRTkyWR1Lk

0️⃣4️⃣
உமர்(ரலி) அவர்களின் ஜும்ஆ குத்பா
https://youtu.be/_AHy_9KLAa0

0️⃣5️⃣
உமர் (ரழி) அவர்களின் இறுதி நாட்களும் மரணமும்
https://youtu.be/9yh9RX8ulJ0

0️⃣6️⃣
உஸ்மான் (ரலி) அவர்களின் வரலாறும் விமர்சனம் பற்றிய தெளிவுகளும் - தொடர் 1
https://youtu.be/gPyH1mqgZWM

0️⃣7️⃣
உஸ்மான் ரலி அவர்களின் வரலாறும் விமர்சனம் பற்றிய தெளிவுகளும் தொடர் 2
https://youtu.be/QfDo0sa9LQ0

மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் உரையாற்றிய நபிகளார் (ஸல்) அவர்களின் வரலாற்று தொடர்களின் தொகுப்பு.

மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் உரையாற்றிய நபிகளார் (ஸல்) அவர்களின் வரலாற்று தொடர்களின் தொகுப்பு.

01
40 வயதுக்கு (நபித்துவத்திற்கு) முன் நபிகளார்
https://youtu.be/SaRyR1Muqtc


02
அறியாமைக் காலத்தின் அழகிய பண்புகள்
https://youtu.be/nqFAh9fzNEM

03
நபிகளாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் - தொடர் 1
https://youtu.be/TsXWvIIyou0

04
நபிகளாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் – தொடர் 2
https://youtu.be/tpkcAXomj1w

05
நபிகளாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் – தொடர் 3
https://youtu.be/dKS7IMApXBE

06
நபிகளாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் – தொடர் 4
https://youtu.be/E4hydEzIDHg

07
நபிகளாரின் பெண்மக்கள்
https://youtu.be/GwGFp6LXPzE

08
நபிகளாரின் வருமானம்!
https://youtu.be/t3rmNiZBHoY

09
நபிகளார் வீட்டில் ஒரு நாள்
https://youtu.be/J523Au7ca0Y

10
நபி (ஸல்) அவர்களின் வீட்டின் இரவு நேரங்கள்
https://youtu.be/xXiEmjRKpWg

11
நபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள்
https://youtu.be/I6NqTFOIvhw

12
அன்றாட வாழ்வில் நபிகளார் (ஸல்) அவர்கள்
https://youtu.be/MQerxtm9rI0

13
நபிகளார் (ஸல்) அவர்களின் அங்க அடையாளங்கள் மற்றும் குணங்கள்
https://youtu.be/cCaAHF2yahk

14
போர்களத்தில் நபிகளார் (ஸல்)
https://youtu.be/68cddxPNxNg

15
இஸ்லாமிய வரலாற்றின் அபீஸீனியாவிற்கான முதல் ஹிஜ்ரத்
https://youtu.be/12YFFJne9E0

16
அபீஸீனியா (Ethiopia) ஹிஜ்ரத் சுருக்கப் பார்வை!
https://youtu.be/2hEIET3MavM

17
அஸ்ரா -- மிஃராஜ் பயணங்கள்,
https://youtu.be/GxjQFkS3vwY

18
The Battle of UHUD
https://youtu.be/gjrkdjLNmOk

19
The Battle of Khandaq (Trench)
https://youtu.be/N26m_cRyJA8

20
The Battle of TABUK
https://youtu.be/-79oKiDoucE

21
The Mecca Victory
https://youtu.be/OTizkAjwe_w

22
ஹுனைன்-யுத்தம்
https://youtu.be/fHzjbG66Mbo

23
மன்னர் ஹிர்களுக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்
https://youtu.be/yPXIVsrSfCQ

24
அன்சாரிகளின் சிறப்பு
https://youtu.be/_vUzLMTYkuk

25
60 நிமிடங்களில் இஸ்லாமிய வரலாறு
https://youtu.be/HW8fh0a3r7U

26
ஸீராவின் ஒளியில் அகீதா
https://youtu.be/h7o4w5F4KoY

Saturday, March 28, 2020

நமது ஊர் இளைஞர்களின் முன்னெடுப்பில் கொரோனா தொற்று கிருமிநாசினி தெளிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

28 மார்ச் 2020  இன்றைய தினம்!!

நமது ஊர் இளைஞர்களின் முன்னெடுப்பில் அதிவேகமாக பரவிவரும் தொற்று கிருமியான கொரோனா (COVID19)-ஐ தடுக்கும் விதமாக தமிழ் பரம்பரை கிருமிநாசினியான வேப்பிலை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை கரைத்து அவற்றை அணைத்து வீடுகள் முன்பாக ,பள்ளிவாசல் தெரு , மற்றும் சிவன்கோவில் தெரு, டிவிஎஸ் காலனி,மெயின் ரோடு,சங்கம், பள்ளிவாசல் தெரு,பட்டானித்தெரு, ஆகிய அனைத்து தெருக்களிலும் தெளிக்கப்பட்டது!!

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அத்துனை உறவுகளுக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!💐💐💐

இது சம்பந்தமாக சில புகைப்படங்கள்








பொதுநல சேவையில் மாஸ் நௌசாத் அலி கொரோனா (COVID19) வைரஸ் தொற்று காரணமாக ஊறடங்கு உத்தரவு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 


கொரோனா (COVID19) வைரஸ் தொற்று காரணமாக மார்ச் 22 2020 முதல் இந்தியா முழுவதும் ஊறடங்கு உத்தரவு நடைபெற்று வருவதால். அன்றாடம் உழைக்கும் மக்கள் அனைவரும் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு   வீட்டு உபயோக பொருள்கள் மற்றும் மளிகை சாமான்கள்கூட வாங்க இயலாத நிலமையில் இருக்கிறார்கள் இதன் காரணமாக நமதூர் மாஸ் குடும்ப சகோதரர்கள்  சார்பாக அவர்களால் முடிந்த அளவுக்கு 100 நபர்களுக்கு அவர்கள் குடும்பத்திற்கு தேவையான மளிகை சாமான் பொருள்களை    அவர்கள் வீட்டிற்க்கே சென்று வழங்கி உள்ளார்கள். 


இதுபோன்ற செயல்களை ஒவ்வொருவரும் அவர்களால் முடிந்த அளவுக்கு ஏழை எளியோருக்கு வழங்கிட முயற்சி செய்து நீங்களும் அல்லாஹ்விடம் நன்மையை அதிகரிக்க வல்ல ரஹ்மான் துணை புரிவானாக ஆமின் 

இதுபோன்ற நிதி உதவிசெய்ய விரும்புவோர் மாஸ் நௌசாத் அலி அவர்களை தொடர்புகொள்ளலாம்

பொதுநல சேவையில் . மாஸ் நௌசாத் அலி.

اِنَّ الْمُصَّدِّقِيْنَ وَالْمُصَّدِّقٰتِ وَاَقْرَضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا يُّضٰعَفُ لَهُمْ وَلَهُمْ اَجْرٌ كَرِيْمٌ‏
நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் - அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் -(அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது.
(அல்குர்ஆன் : 57:18)
















Friday, March 20, 2020

CAA, NPR, NRC க்கு எதிர்ப்பு தெரிவித்து நமதுஊர் (பாபுராஜபுரம்) ஜமாத் சகோதரர்கள்

CAA, NPR, NRC க்கு எதிர்ப்பு தெரிவித்து பாபுராஜபுரம் இஸ்லாமியர்கள் கண்களில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு நூதன முறையில் போராட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

March 20, 2020. வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக நமதுஊர் (பாபுராஜபுரம்) இஸ்லாமியர்கள் கண்களில் கருப்புத் துணியை கட்டிக்கொண்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினார்

குடந்தை ஷாகின்பாக் போராட்டக்குழு சார்பாக CAA, NPR & NRC போன்ற கருப்பு சட்டத்திற்கு எதிராக 29 நாட்களாக கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகில் நடைபெற்று வந்தது கொரோனா (COVID19) போன்ற கொடிய நோய்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இப்போராட்டம் தற்பொழுது கும்பகோணம் அதன் சுற்றியுள்ள பல ஊர்களில் மக்கள் CAA-விற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள்.

அதன் தொடர்ச்சியாக நமது ஊரிலும் CAA, NPR & NRC போன்ற கருப்பு சட்டத்திற்கு எதிராக கண்களில் கருப்புத் துணியை கட்டிக்கொண்டு போராட்டம் நடந்தது இதில் நமது ஜமாத் சகோதரர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள்.

இது சம்பந்தமாக சில புகைப்படங்கள் மற்றும் காணொளி CAA, NPR, NRC க்கு எதிர்ப்பு தெரிவித்து பாபுராஜபுரம் இஸ்லாமியர்கள்










போராட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் கீழ்க்கண்ட ஆவணங்களை தயார் பண்ணி வைத்துக்கொள்ளுங்கள்.

நீதியரசர் ஜனாப் ஜீ. எம். அக்பர் அலி CAA, NPR & NRC பற்றி மிக, மிக துல்லியமாக, தெளிவாக விளக்கியுள்ளார். இந்த விளக்கத்தை நன்கு, நிதானமாக படித்து பாதுகாக்கவும்.

1955 குடியுரிமை சட்டப்படி ஒருவர் இந்தியர் என்பதைச் சட்ட ரீதியாக உறுதிபடுத்துவது எப்படி?

கீழ்கண்டவாறு ஒவ்வொருவரும் செய்யுங்கள்:

1. வீட்டிலுள்ள அனைவரின் பிறந்த தேதி எழுதி கொள்ளுங்கள்.

2. அதனை மூன்று கேட்டகரியாக பிரியுங்கள்.

அ. 1987 ஜூலை 1 ஆம் தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள்

ஆ. 1987 ஜூலை 1 க்கும் 2004 டிசம்பர் 31 க்கும் இடையில் பிறந்தவர்கள்

இ. 2004 டிசம்பர் 31 க்குப் பின்னர் பிறந்தவர்கள்

3. இதில், 1987 ஜூலை 1 க்கு முன்னர் பிறந்தவர்களுக்குப் பிறப்பு சான்று அல்லது பாஸ்போர்ட் ஆகிய இரண்டில் ஒன்று இருப்பதை உறுதிபடுத்துங்கள். எனில், இவர்கள் பிறப்பின் அடிப்படையில் நேரடியாக இந்தியர்கள். வேறு எந்தச் சான்றும் தேவையில்லை.

4. 1987 ஜூலை 1 க்குப் பின்னர் பிறந்தவர்கள் அனைவருக்கும் பிறப்புச் சான்றிதழ் இருக்கிறதா என உறுதிபடுத்துங்கள். இருக்கிறது எனில்,

அ.  1987 ஜூலைக்கும் 2004 டிசம்பருக்கும் இடையில் பிறந்தவர்கள் பெற்றோரில் யாராவது ஒருவர் இந்தியர் என்பதை உறுதிபடுத்துங்கள். அதாவது அவர்களின் பெற்றோரில் யாராவது ஒருவர் பிறப்பு சான்று அல்லது பாஸ்போர்டில் இருக்கும் பெயர் அவர்களின் பிறப்பு சான்றிதழில் இருப்பது போல் இருக்கிறதா என்பதை உறுதி படுத்துங்கள். எனில், இவர்களும் வம்சாவழி அடிப்படையில் இந்தியர். வேறு சான்று தேவையில்லை.

2004 டிசம்பருக்குப் பின்னர் பிறந்தோரின் பெற்றோர் இருவருமே இந்தியராகவும் அவர்களின் சான்றில் பெயர்கள் சரியாக ஒத்துப்போகவும் வேண்டும். எனில், இவர்களும் வம்சாவழியில் இந்தியர். வேறு சான்று தேவையில்லை.

மேற்கண்ட அடிப்படையில் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் செக் செய்து, பாஸ்போர்ட் அல்லது பிறப்புச் சான்று இல்லாதவர் லிஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.

பாஸ்போர்ட் எடுக்க, ஏதேனும் ஆதார்/ரேசன் கார்டு ஏதாவது சப்மிட் செய்து பாஸ்போர்ட் எடுங்கள். இது எளிது.

பிறப்புச் சான்று எனில்,

1. மருத்துவமனையில் பிறந்தவராக இருந்தால், அந்த மருத்துவமனை இருக்கும் ஏரியா கிராம/தாலுகா/கார்ப்பரேசன் அலுவலகத்துக்குச் சென்று விவரம் கூறி அப்ளை செய்யுங்கள். 200 ரூபாய்தான் செலவு. இலகுவாக கிடைக்கும்.

2. வீட்டில் பிறந்தவராக இருந்தால்,

பிறப்பு சான்று இல்லை என்பதற்கு ஒரு அஃபிடவிட் நோட்டரி அட்டஸ்டேசனுடன் தயார் செய்து உங்கள் கிராம/தாலுக்/கார்ப்பரேசன் அலுவலகத்தில் சப்மிட் செய்யுங்கள். அவர்கள் பிறப்பு சான்று இல்லை என்பதற்கான ஒரு சான்று தருவர். அதனைக் கொண்டு மாவட்ட நீதிமன்றத்தில் சப்மிட் செய்யுங்கள். அபராதம் கட்டச் சொல்வார்கள். ஆண்டுக்கு 200 ரூபாய். கிடைத்துவிடும்.

அவ்வளவுதான்.

இம்முறையில் அவரவர் வீட்டில் ஓகே ஆகி விட்டால், குறைந்தது ஒரு வீட்டுக்காவது இதனைச் செய்ய உதவுங்கள். அவர்களிடமும் இதையே வேறு ஒருவருக்குச் செய்ய கேளுங்கள். சமுதாயத்தில் ஒருவர்கூட விட்டுப்போகாமல் அனைவருக்கும் இந்தியர் என்பதற்கான சட்ட ஆவணம் உருவாக்கிவிடலாம் இன்ஷா அல்லாஹ்.

Tuesday, March 17, 2020

CAA, NRC, NPR ஆகிய கருப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 


March 17, 2020. செவ்வாய் கிழமை மாலை 5.00 மணிக்கு ஆவூர் மெயின் ரோட்டில் வலங்கை வட்டார ஜமாத் மற்றும் குடந்தை சுற்று வட்டார முஸ்லீம் ஜமாத் கூட்டமைப்பு, மாற்றுமத சகோதரர்கள் மற்றும் அனைத்து அரசியல் இயக்கங்கள் இனைந்து CAA, NRC, NPR ஆகிய கருப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.


இதில் பெருந்திரளான ஆண்கள் பெண்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டார்கள் இதில் பாபுராஜபுரம் ஜமாத் தலைவர் மற்றும் சகோதரர்கள் கலந்துகொண்டார்.


ஆவூரில் நடைப்பெரும் C.A.A. பொதுக்கூட்டம்




Monday, March 9, 2020

"CAA, NPR, NRC, குறித்து எந்த ஒரு ஆவணமும் தர மாட்டோம்" கும்பகோணம் அருகே ஆவூரில் ஒற்றைக் கருத்தாக தீர்மானம் நிறைவேற்றிய 27 ஊர் ஜமாத் தலைவர்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

February 02, 2020. "CAA, NPR, NRC, குறித்து எந்த ஒரு ஆவணமும் தர மாட்டோம்" கும்பகோணம் அருகே ஆவூரில் ஒற்றைக் கருத்தாக தீர்மானம் நிறைவேற்றிய 27 ஊர் ஜமாத் தலைவர்கள்.

கும்பகோணம் நகர அனைத்து வட்டார ஜமாஅத் தலைவர்கள் மற்றும் நமது பாபுராஜபுரம் ஜமாத் உறுப்பினர்கள் அனைவரும்  ஆவூர் கூட்டத்தில் கலந்து கொள்கின்றார்கள். ( 34 மஹல்லா (27 ஊர்) ஜமாஅத் தலைவர்கள் பெயர் பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது )



 

Friday, February 28, 2020

பாபுராஜபுரம் ஊராட்சி முஸ்லீம் தெருவில் நீர் தொட்டி அமைத்து திறக்கப்பட்டது

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 28, 2020. அன்று கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் சார்பாக மேற்கு ஒன்றியம்  பாபுராஜபுரம் ஊராட்சி முஸ்லீம் தெருவில் குறு மின் விசை பம்பு மூலம் நீர் தொட்டி அமைத்து திறக்கப்பட்டது 

இந்த நீர் தொட்டியானது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டது இதை திறப்பதற்காக திரு கா.அன்பழகன் எம்எல்ஏ அவர்கள் மூலம் திறக்கப்பட்டது

இதனுடைய சில புகைப்படங்கள்......












Monday, February 17, 2020

புளியஞ்சேரி TPC கொள்முதல் நிலையம் திறக்கும் வரை அப்பகுதி மக்கள் உள்ளிருப்பு போராட்டம்


அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்).


February 17,2020. பாபுராஜபுரத்தில் அமைந்துள்ள புளியஞ்சேரி TPC கொள்முதல் நிலையம் திறக்கும் வரை அப்பகுதி விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் 

பாபுராஜபுரத்தில் அமைந்துள்ள புளியஞ்சேரி TPC நெல் கொள்முதல் நிலையம் அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி திடீரென்று மூடப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

தஞ்சை மாவட்டம் பாபுராஜபுரம், புளியஞ்சேரி, சுவாமிமலை மற்றும் சுற்றுவட்டாரங்களில் மிகப்பெரிய நிலப்பரப்பில் கடந்த 20 ஆண்டுகளாக விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர் தங்கள் நிலத்தில் விளையும் நெல் மணிகளை புளியஞ்சேரி உள்ள TPC மையத்தில் தான் கொள்முதல் கொள்முதல் செய்வது குறிப்பிடத்தக்கது



Sunday, January 26, 2020

பாபுராஜபுரம் பள்ளிவாசலில் ஜனவரி 26,2020. அன்று 71வது குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


இந்தியாவின் 71வது குடியரசு தினம் ஜனவரி 26,2020. அன்று பாபுராஜபுரம் ஜமாத்தார்கள் ஒன்று கூடி நமதூர் பள்ளிவாசல் முன்பு  தேசிய கொடி ஏற்றி சிறப்புடன் கொண்டாடினாரகள்


1. குடியரசு தினம் என்றால் என்ன?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாள், குடியரசு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஜனவரி 24ம் தேதி 1950ம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்பதுலுடன் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.

2. எப்போதிருந்து குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது?

விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே மகாத்மா காந்தி ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26ம் தேதி, மக்களாட்சி மலர்ந்த நாளாகக் கொண்டாட, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி 1950ம் ஆண்டு முதல் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

3. குடியரசு தினம் கொண்டாடும் முறை?


தேசிய தலைநகர் டெல்லியில், குடியரசுத் தலைவர் மூவர்ணக் கொடியை ஏற்றி இந்திய படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். பின்னர், சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு பதக்கங்களையும் வழங்குவார். மாநிலங்களில், அந்ததந்த மாநில ஆளுநர் கொடியேற்றி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். பின்னர் வீரதீர செயல்புரிந்த காவலர்களுக்கு பதக்கங்களையும் வழங்குவார்

4. குடியரசு தினத்திற்கும் சுதந்திர தினத்திற்கும் உள்ள வேறுபாடு?

சுதந்திர தினம் என்று சொல்லும் போது, யாரிடம் இருந்தோ விடுதலை பெற்றிருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. 1947 ஆக., 15ம் தேதி நள்ளிரவில் ஆங்கிலேயர் நமக்கு வழங்கியது தான் சுதந்திரம். நமக்கு அப்போது கிடைத்த சுதந்தரம் முழுமையானது அல்ல. ஏனெனில் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது. அதன்படி பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார். இதன் பின் இந்திய அரசியலமைப்பு 1949 நவ., 26ல் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு 1950 ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது. அதுதான் குடியரசு தினம்

இதன் சிறப்பு புகைப்படம்