Pages

Showing posts with label பாபுராஜபுரம். Show all posts
Showing posts with label பாபுராஜபுரம். Show all posts

Tuesday, March 17, 2020

CAA, NRC, NPR ஆகிய கருப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 


March 17, 2020. செவ்வாய் கிழமை மாலை 5.00 மணிக்கு ஆவூர் மெயின் ரோட்டில் வலங்கை வட்டார ஜமாத் மற்றும் குடந்தை சுற்று வட்டார முஸ்லீம் ஜமாத் கூட்டமைப்பு, மாற்றுமத சகோதரர்கள் மற்றும் அனைத்து அரசியல் இயக்கங்கள் இனைந்து CAA, NRC, NPR ஆகிய கருப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.


இதில் பெருந்திரளான ஆண்கள் பெண்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டார்கள் இதில் பாபுராஜபுரம் ஜமாத் தலைவர் மற்றும் சகோதரர்கள் கலந்துகொண்டார்.


ஆவூரில் நடைப்பெரும் C.A.A. பொதுக்கூட்டம்




Monday, March 9, 2020

"CAA, NPR, NRC, குறித்து எந்த ஒரு ஆவணமும் தர மாட்டோம்" கும்பகோணம் அருகே ஆவூரில் ஒற்றைக் கருத்தாக தீர்மானம் நிறைவேற்றிய 27 ஊர் ஜமாத் தலைவர்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

February 02, 2020. "CAA, NPR, NRC, குறித்து எந்த ஒரு ஆவணமும் தர மாட்டோம்" கும்பகோணம் அருகே ஆவூரில் ஒற்றைக் கருத்தாக தீர்மானம் நிறைவேற்றிய 27 ஊர் ஜமாத் தலைவர்கள்.

கும்பகோணம் நகர அனைத்து வட்டார ஜமாஅத் தலைவர்கள் மற்றும் நமது பாபுராஜபுரம் ஜமாத் உறுப்பினர்கள் அனைவரும்  ஆவூர் கூட்டத்தில் கலந்து கொள்கின்றார்கள். ( 34 மஹல்லா (27 ஊர்) ஜமாஅத் தலைவர்கள் பெயர் பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது )



 

Sunday, September 8, 2019

நற்பணி அமைப்பு ~ "WISDOM" BABURAJAPURAM WELFARE ASSOCIATION

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு.

அல்லாஹ்வின் நற்கிருபையால், எமது நீண்ட நாள் இலட்சியமாகவும், கனவாகவும், நம் நமது ஊரில் வசிக்கும் அனைவர்களின் எதிர்பார்பாகவும் இருந்து வந்த இளைஞர்கள் ஒன்றிணைந்த நற்பணி அமைப்பு ~   "WISDOM" BABURAJAPURAM WELFARE ASSOCIATION என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ளது என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெறிவித்துக்கொள்கிறேன் அல்ஹம்துலில்லாஹ் .

இதற்கான முன் வரைவு (பிளான்), இதன் இலக்கு (தொலைநோக்கு பார்வை ) குறித்து நம் ஊர் ஜமாத் நிற்வாகத்தினரிடம் ஆலோசித்தே துவங்கப்பட்டது.

இந்த"WISDOM நற்பணி மன்றம்"
தொடர்ந்து சிறந்த முறையில் செயல்படுவதற்கு அமைப்பு ரீதியான ஏற்பாடுகள் செய்யவேண்டி உள்ளது.

இந்த நல சங்கத்தின் மூலம் செயல்படுத்த உள்ள விஷயங்களை அறிவிப்பாக அச்சிட்டு நம் மஹல்லாஹ்வின் அனைத்து வீடுகளுக்கும் கொடுத்துள்ளோம் மற்றும் அவர்களின் ஒத்துழைப்பும்  கேட்டுள்ளோம் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் இதன் மூலம் தங்கள் அனைவரின் துவா & பங்களிப்பை தரும்படி கூறுகிறேன்.

ஜஜாக்கல்லாஹு கைரன்!
அன்புடன் நாசர் பாட்ஷா