Pages

Showing posts with label பஷீர் அஹம்மத் பாபுராஜபுரம். Show all posts
Showing posts with label பஷீர் அஹம்மத் பாபுராஜபுரம். Show all posts

Friday, February 28, 2020

பாபுராஜபுரம் ஊராட்சி முஸ்லீம் தெருவில் நீர் தொட்டி அமைத்து திறக்கப்பட்டது

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 28, 2020. அன்று கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் சார்பாக மேற்கு ஒன்றியம்  பாபுராஜபுரம் ஊராட்சி முஸ்லீம் தெருவில் குறு மின் விசை பம்பு மூலம் நீர் தொட்டி அமைத்து திறக்கப்பட்டது 

இந்த நீர் தொட்டியானது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டது இதை திறப்பதற்காக திரு கா.அன்பழகன் எம்எல்ஏ அவர்கள் மூலம் திறக்கப்பட்டது

இதனுடைய சில புகைப்படங்கள்......












Monday, February 17, 2020

புளியஞ்சேரி TPC கொள்முதல் நிலையம் திறக்கும் வரை அப்பகுதி மக்கள் உள்ளிருப்பு போராட்டம்


அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்).


February 17,2020. பாபுராஜபுரத்தில் அமைந்துள்ள புளியஞ்சேரி TPC கொள்முதல் நிலையம் திறக்கும் வரை அப்பகுதி விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் 

பாபுராஜபுரத்தில் அமைந்துள்ள புளியஞ்சேரி TPC நெல் கொள்முதல் நிலையம் அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி திடீரென்று மூடப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

தஞ்சை மாவட்டம் பாபுராஜபுரம், புளியஞ்சேரி, சுவாமிமலை மற்றும் சுற்றுவட்டாரங்களில் மிகப்பெரிய நிலப்பரப்பில் கடந்த 20 ஆண்டுகளாக விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர் தங்கள் நிலத்தில் விளையும் நெல் மணிகளை புளியஞ்சேரி உள்ள TPC மையத்தில் தான் கொள்முதல் கொள்முதல் செய்வது குறிப்பிடத்தக்கது



Sunday, January 26, 2020

பாபுராஜபுரம் பள்ளிவாசலில் ஜனவரி 26,2020. அன்று 71வது குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


இந்தியாவின் 71வது குடியரசு தினம் ஜனவரி 26,2020. அன்று பாபுராஜபுரம் ஜமாத்தார்கள் ஒன்று கூடி நமதூர் பள்ளிவாசல் முன்பு  தேசிய கொடி ஏற்றி சிறப்புடன் கொண்டாடினாரகள்


1. குடியரசு தினம் என்றால் என்ன?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாள், குடியரசு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஜனவரி 24ம் தேதி 1950ம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்பதுலுடன் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.

2. எப்போதிருந்து குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது?

விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே மகாத்மா காந்தி ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26ம் தேதி, மக்களாட்சி மலர்ந்த நாளாகக் கொண்டாட, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி 1950ம் ஆண்டு முதல் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

3. குடியரசு தினம் கொண்டாடும் முறை?


தேசிய தலைநகர் டெல்லியில், குடியரசுத் தலைவர் மூவர்ணக் கொடியை ஏற்றி இந்திய படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். பின்னர், சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு பதக்கங்களையும் வழங்குவார். மாநிலங்களில், அந்ததந்த மாநில ஆளுநர் கொடியேற்றி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். பின்னர் வீரதீர செயல்புரிந்த காவலர்களுக்கு பதக்கங்களையும் வழங்குவார்

4. குடியரசு தினத்திற்கும் சுதந்திர தினத்திற்கும் உள்ள வேறுபாடு?

சுதந்திர தினம் என்று சொல்லும் போது, யாரிடம் இருந்தோ விடுதலை பெற்றிருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. 1947 ஆக., 15ம் தேதி நள்ளிரவில் ஆங்கிலேயர் நமக்கு வழங்கியது தான் சுதந்திரம். நமக்கு அப்போது கிடைத்த சுதந்தரம் முழுமையானது அல்ல. ஏனெனில் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது. அதன்படி பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார். இதன் பின் இந்திய அரசியலமைப்பு 1949 நவ., 26ல் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு 1950 ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது. அதுதான் குடியரசு தினம்

இதன் சிறப்பு புகைப்படம்


Monday, September 16, 2019

WISDOM நற்பணி மன்றத்தின் துவக்க நிகழ்வாக செப்டம்பர் 15,2019


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு.

WISDOM நற்பணி மன்றத்தின் துவக்க நிகழ்வாக செப்டம்பர் 15,2019 அன்று நம் "ஊர் பள்ளிவாசல் வளாகத்தில்". "இரத்த தான முகாம்" நடைபெற்றது இது அரசு இரத்த வங்கி மூலம் நோயாளிகளுக்கு உயிர் காக்க உதவியளிக்கப்படுகிறது.

இந்த முகாமில் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்க முன் வந்தவர்கள்: 43 நபர்கள்
ஆண்கள் நம் ஊர் = 20 நபர்களும்வெளியூர் 19 நபர்களும்
பெண்கள்: 4 நபர்களும்  (பெறப்படவில்லை)
உடல் கூறில் தேர்வு பெற்று இரத்தம் வழங்கியவர்கள் = 33 பேர்


இந்த இரத்த தான முகாமை சிறப்புடன் நடாத்திய நமது ஊர் Dr. Mohammed Niyamathullah அவர்களுக்கு "WISDOM" BABURAJAPURAM சார்பாக

ஜஜாக்கல்லாஹு கைரன்!

By the grace of Almighty Allah & Good work of our WISDOM YOUTHs
Campaign great Success. Alhamdulillah

அதன் சில புகைபடங்களை கீழே பகிர்ந்துள்ளேன்.









Thursday, June 6, 2019

ஜூன் 05,2019. பாபுரஜபுரத்தில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் ('ஈத்-அல் ஃபித்ர்') தொழுகை


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


அல்லாஹ்வின் நல்லருளால் பாபுரஜபுரத்தில் ஜூன் 05,2019 அன்று நோன்புப்பெருநாள் ('ஈத் அல் ஃபித்ர்') தொழுகை தவிக்க முடியாத காரணத்தால் திறந்த வெளியில் தொழ இயலவில்லை மற்றும் சிறியவர்கள் / வாலிபர்களுக்கான விளையாட்டு போட்டிகள்  மற்றும் 
அன்றைய மாலையில்  ஆண்/பெண் சிறார்களுக்கான குர்ஆன் மனனம்கிராஅத் ஓதுதல் மற்றும் பல இஸ்லாமிய நிகழ்வுகள் அனைத்தும் நமது செயல் தலைவர் சகோதரர் நாசர் பாட்ஷா அவர்களின் ஏற்பாட்டில் மிக சிறப்பாக நடைபெற்றது


மாஷா அல்லாஹ் !!!,


மிகத் திரளான ஆண்கள்பெண்கள்குழந்தைகள்முதியவர்கள் மற்றும் 

அருகிலுள்ள ஊர்களை சேர்ந்தபலர் கலந்துகொண்டனர் நமது ஊர் ஹஜ்ரத் சுல்தான் அவர்கள் ('ஈத்அல் ஃபித்ர்')  தொழுகை மற்றும் குத்பாவை சிறப்புடன்   நிறைவேற்றினார்கள் அன்று மாலை சிறியவர்கள் /வாலிபர்களுக்கான  விளையாட்டு போட்டிகள்மற்றும் அன்றைய மாலையில்  ஆண்/பெண் சிறார்களுக்கான குர்ஆன் மனனம்கிராஅத் ஓதுதல் மற்றும் பல இஸ்லாமிய நிகழ்வுகள் அனைத்தும் நமது செயல் தலைவர் சகோதரர் 
நாசர் பாட்ஷா அவர்களின் ஏற்பாட்டில் மிக சிறப்பாக நடைபெற்றது


பெருநாள் தொழுகையின் அவசியம்:


பருவமடைந்த ஆண்பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும்பள்ளிவாயல்களில் நடைபெறும் ஐவேளைத் தொழுகை  மற்றும்ஜும்ஆத் தொழுகை போன்ற கூட்டுத் தொழுகைகளில் பெண்கள் பங்கு கொள்ளாமல் தமது வீடுகளிலேயே தனியாகத் தொழுது கொள்ளலாம் என்று இஸ்லாம் பெண்களுக்கு சலுகை வழங்கியுள்ளதுஅப்படி சலுகை வழங்கிய இஸ்லாம் பெருநாள் தொழுகையில் மட்டும் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறதுதகுந்த ஆடை இல்லாவிட்டால் இரவல் ஆடை வாங்கியாவது கலந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.


திடலில் தொழுகை:


நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்)   முஸல்லா எனும் மைதானத்திற்குச் செல்பவர்களாக இருந்தார்கள்அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரீ (றழி). நூல் : புஹாரி.

கஸீர் பின் ஸல்த் (றழிஎன்ற நபித் தோழருடைய வீட்டிற்கு முன்னால் முஸல்லா என்ற மைதானம் ஒன்று இருந்தது

தொழுகையும்குத்பாவும்:

நபி (ஸல்) அவர்கள்அபூபக்ர் (றழி)உமர் (றழி)உஸ்மான் (றழி) ஆகியோருடன் நான் பெருநாள் தொழுகையில் பங்கு எடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (றழி)நூல் : புஹாரி.

இன்றைய தினத்தில் நாம் முதன் முதலில் செய்ய வேண்டியது தொழுவதாகும். என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர் : பர்ராஃ பின் ஆஸிப் (றழி)நூல் : புஹாரி.

ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்:

பெருநாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (றழி)நூல் : புஹாரி.

நபி (ஸல்) அவர்கள் ஒரு பாதையில் வருவார்கள்இன்னொரு பாதையில் திரும்புவார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (றழி)நூற்கள் : இப்னு மாஜாஅபூ தாவூத்.

சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டுமா?

நபி (ஸல்) அவர்கள் சில பேரீத்தம் பழங்களை சாப்பிட்டு விட்டு புறப்படுவார்கள். நூல் : புஹாரி.

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு முன்பு சில ஸஹாபாக்கள் சாப்பிட்டதை நபியவர்கள் அங்கீகரித்துள்ளார்கள். நூல் : புஹாரி.

நபியவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று சாப்பிடாமல் தொழுகைக்குச் செல்வார்கள் என்பது பலவீனமான அறிவிப்பாகும்.

ஆகவேமேற்கூறப்பட்ட அடிப்படையில் எமது பெருநாள் தொழுகைகளை அமைத்துக் கொள்வோமாக!
எல்லாம் வல்ல அல்லாஹ் அவனது சத்திய தீனுல் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் விளங்கி அதன்படி செயற்பட்டு ஈருலகிலும் ஈடேற்றம் பெறும் பாக்கியத்தை எம் அனைவருக்கும் வழங்குவானாக!’

நோன்புப் பெருநாள் ('ஈத் அல் ஃபித்ர்') நிகழ்வுகளின் புகைப்படங்கள் சில