அஸ்ஸலாமு
அலைக்கும் (வரஹ்)
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அல்லாஹ்வின் நல்லருளால் பாபுரஜபுரத்தில் ஜூன் 05,2019 அன்று நோன்புப்பெருநாள் ('ஈத் அல் ஃபித்ர்') தொழுகை தவிக்க முடியாத காரணத்தால் திறந்த வெளியில் தொழ இயலவில்லை மற்றும் சிறியவர்கள் / வாலிபர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும்
அன்றைய மாலையில் ஆண்/பெண் சிறார்களுக்கான குர்ஆன் மனனம், கிராஅத் ஓதுதல் மற்றும் பல இஸ்லாமிய நிகழ்வுகள் அனைத்தும் நமது செயல் தலைவர் சகோதரர் நாசர் பாட்ஷா அவர்களின் ஏற்பாட்டில் மிக சிறப்பாக நடைபெற்றது
மாஷா அல்லாஹ் !!!,
மிகத் திரளான ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும்
அருகிலுள்ள ஊர்களை சேர்ந்தபலர் கலந்துகொண்டனர் நமது ஊர் ஹஜ்ரத் சுல்தான் அவர்கள் ('ஈத்அல் ஃபித்ர்')
தொழுகை மற்றும் குத்பாவை சிறப்புடன் நிறைவேற்றினார்கள் அன்று மாலை சிறியவர்கள் /வாலிபர்களுக்கான விளையாட்டு போட்டிகள்மற்றும் அன்றைய மாலையில் ஆண்/பெண் சிறார்களுக்கான குர்ஆன் மனனம், கிராஅத் ஓதுதல் மற்றும் பல இஸ்லாமிய நிகழ்வுகள் அனைத்தும் நமது செயல் தலைவர் சகோதரர்
நாசர் பாட்ஷா அவர்களின் ஏற்பாட்டில் மிக சிறப்பாக நடைபெற்றது
பெருநாள் தொழுகையின் அவசியம்:
பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும். பள்ளிவாயல்களில் நடைபெறும் ஐவேளைத் தொழுகை மற்றும்ஜும்ஆத் தொழுகை போன்ற கூட்டுத் தொழுகைகளில் பெண்கள் பங்கு கொள்ளாமல் தமது வீடுகளிலேயே தனியாகத் தொழுது கொள்ளலாம் என்று இஸ்லாம் பெண்களுக்கு சலுகை வழங்கியுள்ளது. அப்படி சலுகை வழங்கிய இஸ்லாம் பெருநாள் தொழுகையில் மட்டும் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தகுந்த ஆடை இல்லாவிட்டால் இரவல் ஆடை வாங்கியாவது கலந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
திடலில் தொழுகை:
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்குச் செல்பவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரீ (றழி). நூல் : புஹாரி.
கஸீர் பின் ஸல்த் (றழி) என்ற நபித் தோழருடைய வீட்டிற்கு முன்னால் முஸல்லா என்ற மைதானம் ஒன்று இருந்தது
தொழுகையும், குத்பாவும்:
நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (றழி), உமர் (றழி), உஸ்மான் (றழி) ஆகியோருடன் நான் பெருநாள் தொழுகையில் பங்கு எடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (றழி), நூல் : புஹாரி.
இன்றைய தினத்தில் நாம் முதன் முதலில் செய்ய வேண்டியது தொழுவதாகும். என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர் : பர்ராஃ பின் ஆஸிப் (றழி), நூல் : புஹாரி.
ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்:
பெருநாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (றழி), நூல் : புஹாரி.
நபி (ஸல்) அவர்கள் ஒரு பாதையில் வருவார்கள், இன்னொரு பாதையில் திரும்புவார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (றழி), நூற்கள் : இப்னு மாஜா, அபூ தாவூத்.
சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டுமா?
நபி (ஸல்) அவர்கள் சில பேரீத்தம் பழங்களை சாப்பிட்டு விட்டு புறப்படுவார்கள். நூல் : புஹாரி.
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு முன்பு சில ஸஹாபாக்கள் சாப்பிட்டதை நபியவர்கள் அங்கீகரித்துள்ளார்கள். நூல் : புஹாரி.
நபியவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று சாப்பிடாமல் தொழுகைக்குச் செல்வார்கள் என்பது பலவீனமான அறிவிப்பாகும்.
ஆகவே, மேற்கூறப்பட்ட அடிப்படையில் எமது பெருநாள் தொழுகைகளை அமைத்துக் கொள்வோமாக!
‘எல்லாம் வல்ல அல்லாஹ் அவனது சத்திய தீனுல் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் விளங்கி அதன்படி செயற்பட்டு ஈருலகிலும் ஈடேற்றம் பெறும் பாக்கியத்தை எம் அனைவருக்கும் வழங்குவானாக!’
நோன்புப் பெருநாள் ('ஈத் அல் ஃபித்ர்') நிகழ்வுகளின் புகைப்படங்கள் சில



























No comments:
Post a Comment