Pages

Friday, March 20, 2020

CAA, NPR, NRC க்கு எதிர்ப்பு தெரிவித்து நமதுஊர் (பாபுராஜபுரம்) ஜமாத் சகோதரர்கள்

CAA, NPR, NRC க்கு எதிர்ப்பு தெரிவித்து பாபுராஜபுரம் இஸ்லாமியர்கள் கண்களில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு நூதன முறையில் போராட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

March 20, 2020. வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக நமதுஊர் (பாபுராஜபுரம்) இஸ்லாமியர்கள் கண்களில் கருப்புத் துணியை கட்டிக்கொண்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினார்

குடந்தை ஷாகின்பாக் போராட்டக்குழு சார்பாக CAA, NPR & NRC போன்ற கருப்பு சட்டத்திற்கு எதிராக 29 நாட்களாக கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகில் நடைபெற்று வந்தது கொரோனா (COVID19) போன்ற கொடிய நோய்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இப்போராட்டம் தற்பொழுது கும்பகோணம் அதன் சுற்றியுள்ள பல ஊர்களில் மக்கள் CAA-விற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள்.

அதன் தொடர்ச்சியாக நமது ஊரிலும் CAA, NPR & NRC போன்ற கருப்பு சட்டத்திற்கு எதிராக கண்களில் கருப்புத் துணியை கட்டிக்கொண்டு போராட்டம் நடந்தது இதில் நமது ஜமாத் சகோதரர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள்.

இது சம்பந்தமாக சில புகைப்படங்கள் மற்றும் காணொளி CAA, NPR, NRC க்கு எதிர்ப்பு தெரிவித்து பாபுராஜபுரம் இஸ்லாமியர்கள்










போராட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் கீழ்க்கண்ட ஆவணங்களை தயார் பண்ணி வைத்துக்கொள்ளுங்கள்.

நீதியரசர் ஜனாப் ஜீ. எம். அக்பர் அலி CAA, NPR & NRC பற்றி மிக, மிக துல்லியமாக, தெளிவாக விளக்கியுள்ளார். இந்த விளக்கத்தை நன்கு, நிதானமாக படித்து பாதுகாக்கவும்.

1955 குடியுரிமை சட்டப்படி ஒருவர் இந்தியர் என்பதைச் சட்ட ரீதியாக உறுதிபடுத்துவது எப்படி?

கீழ்கண்டவாறு ஒவ்வொருவரும் செய்யுங்கள்:

1. வீட்டிலுள்ள அனைவரின் பிறந்த தேதி எழுதி கொள்ளுங்கள்.

2. அதனை மூன்று கேட்டகரியாக பிரியுங்கள்.

அ. 1987 ஜூலை 1 ஆம் தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள்

ஆ. 1987 ஜூலை 1 க்கும் 2004 டிசம்பர் 31 க்கும் இடையில் பிறந்தவர்கள்

இ. 2004 டிசம்பர் 31 க்குப் பின்னர் பிறந்தவர்கள்

3. இதில், 1987 ஜூலை 1 க்கு முன்னர் பிறந்தவர்களுக்குப் பிறப்பு சான்று அல்லது பாஸ்போர்ட் ஆகிய இரண்டில் ஒன்று இருப்பதை உறுதிபடுத்துங்கள். எனில், இவர்கள் பிறப்பின் அடிப்படையில் நேரடியாக இந்தியர்கள். வேறு எந்தச் சான்றும் தேவையில்லை.

4. 1987 ஜூலை 1 க்குப் பின்னர் பிறந்தவர்கள் அனைவருக்கும் பிறப்புச் சான்றிதழ் இருக்கிறதா என உறுதிபடுத்துங்கள். இருக்கிறது எனில்,

அ.  1987 ஜூலைக்கும் 2004 டிசம்பருக்கும் இடையில் பிறந்தவர்கள் பெற்றோரில் யாராவது ஒருவர் இந்தியர் என்பதை உறுதிபடுத்துங்கள். அதாவது அவர்களின் பெற்றோரில் யாராவது ஒருவர் பிறப்பு சான்று அல்லது பாஸ்போர்டில் இருக்கும் பெயர் அவர்களின் பிறப்பு சான்றிதழில் இருப்பது போல் இருக்கிறதா என்பதை உறுதி படுத்துங்கள். எனில், இவர்களும் வம்சாவழி அடிப்படையில் இந்தியர். வேறு சான்று தேவையில்லை.

2004 டிசம்பருக்குப் பின்னர் பிறந்தோரின் பெற்றோர் இருவருமே இந்தியராகவும் அவர்களின் சான்றில் பெயர்கள் சரியாக ஒத்துப்போகவும் வேண்டும். எனில், இவர்களும் வம்சாவழியில் இந்தியர். வேறு சான்று தேவையில்லை.

மேற்கண்ட அடிப்படையில் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் செக் செய்து, பாஸ்போர்ட் அல்லது பிறப்புச் சான்று இல்லாதவர் லிஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.

பாஸ்போர்ட் எடுக்க, ஏதேனும் ஆதார்/ரேசன் கார்டு ஏதாவது சப்மிட் செய்து பாஸ்போர்ட் எடுங்கள். இது எளிது.

பிறப்புச் சான்று எனில்,

1. மருத்துவமனையில் பிறந்தவராக இருந்தால், அந்த மருத்துவமனை இருக்கும் ஏரியா கிராம/தாலுகா/கார்ப்பரேசன் அலுவலகத்துக்குச் சென்று விவரம் கூறி அப்ளை செய்யுங்கள். 200 ரூபாய்தான் செலவு. இலகுவாக கிடைக்கும்.

2. வீட்டில் பிறந்தவராக இருந்தால்,

பிறப்பு சான்று இல்லை என்பதற்கு ஒரு அஃபிடவிட் நோட்டரி அட்டஸ்டேசனுடன் தயார் செய்து உங்கள் கிராம/தாலுக்/கார்ப்பரேசன் அலுவலகத்தில் சப்மிட் செய்யுங்கள். அவர்கள் பிறப்பு சான்று இல்லை என்பதற்கான ஒரு சான்று தருவர். அதனைக் கொண்டு மாவட்ட நீதிமன்றத்தில் சப்மிட் செய்யுங்கள். அபராதம் கட்டச் சொல்வார்கள். ஆண்டுக்கு 200 ரூபாய். கிடைத்துவிடும்.

அவ்வளவுதான்.

இம்முறையில் அவரவர் வீட்டில் ஓகே ஆகி விட்டால், குறைந்தது ஒரு வீட்டுக்காவது இதனைச் செய்ய உதவுங்கள். அவர்களிடமும் இதையே வேறு ஒருவருக்குச் செய்ய கேளுங்கள். சமுதாயத்தில் ஒருவர்கூட விட்டுப்போகாமல் அனைவருக்கும் இந்தியர் என்பதற்கான சட்ட ஆவணம் உருவாக்கிவிடலாம் இன்ஷா அல்லாஹ்.

No comments:

Post a Comment