அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)..
நமதூரில் 29-03-2019 அன்று பாபுராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் "கல்விச் சீர் விழா" நடைபெற்றது.
அச்சமயம்
பள்ளியில் பயிலும் மாணவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்யும் அளவிற்கு அரசு தரும் உதவிதொகை
முழுமையாக அமையாததினால் இதை நிவர்த்தி செய்யும் விதமாக "கல்விச் சீர் விழா" என ஏற்பாடு செய்து அதன் மூலம் பொதுமக்களின் பங்களிப்பும்
உதவியும் பெறும் நோக்கில் நமது ஊர் ஜமாத் உறுப்பினர்களுக்கு ஊராட்சி ஒன்றிய
தொடக்கப் பள்ளியின் சார்பாக அழைப்பு
விடுத்தனர்.
அந்த அழைப்பை ஏற்று நமது ஜமாத் சார்பாக ஜனாப் (MAS)நௌஷாத் (துணை
முத்தவல்லி) (Panchayat Vice President), செயல் தலைவர் ஜனாப் நாசர் பாஷா அவர்களும், நமது ஊர் இமாம்
மௌலவி சுல்தான் இப்ராஹீம், ஜனாப் A.ஜாகிர் உசேன் அவர்களும் மற்றும் ஜனாப் (All in all) உசேன் பாய் மற்றும பல சகோதரர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.நமது பாபுராஜபுரம் மஹல்லா சார்பாக சில உதவிகளை செய்து சிறப்பித்தோம் அதன் விபரம் வருமாறு.
பள்ளி மாணவர்களின் உபயோகத்திற்க்காக 6 மேஜைகள் தனது சார்பாக ஜனாப் MAS.நௌஷாத் அவர்கள் வழங்கினார்
பள்ளிக்கு அத்யாவசிய தேவையான மின் இணைப்பு மோட்டார் மற்றும் ஸ்டீல் அலமாரியும் ஜனாப் நாசர் பாஷா அவர்களால் வழங்கப்பட்டது ,
மாணவர்களுக்கான 30 செட் புத்தகங்களும் மற்றும் நமது பள்ளி இமாம் மௌலவி சுல்தான் இப்ராஹீம் அவர்கள் தன் சார்பாக சிறு தொகையை அளித்து சிறப்பித்தார்கள்.
இவை அனைத்தையும் பாபுராஜபுரம் முஹல்லா ஜமாத் சார்பாக ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு வழங்கப்பட்டது.
இவ்வாறான செயலகளால் :
சதக்கத்துல் ஜாரியா எனும் தொடர் நன்மை
சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்தவும்
பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலன் கருதியும்.
பள்ளியில் பயில்விக்கும் ஆசிரியர்களின் ஆர்வத்தை பாராட்டும் விதமாகவும் இவ்வாறான செயல்கள் அமையும்
சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்தவும்
பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலன் கருதியும்.
பள்ளியில் பயில்விக்கும் ஆசிரியர்களின் ஆர்வத்தை பாராட்டும் விதமாகவும் இவ்வாறான செயல்கள் அமையும்

இந் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பாபுராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி ஜெயஸ்ரீ மற்றும் துணை ஆசிரியைகளின் முயற்சி பாராட்டுதலுக்குறியது.
நமது அன்பளிப்புகள் மட்டுமல்லாமல் பள்ளியை SMART SCHOOL LEVEL முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் LED TV மற்றும் மென்பொருள் சாதனங்கள் வழங்கியுள்ளார்கள்.
பல்வேறு தரப்பினர் பள்ளிக்கு தேவையான அத்யாவசிய சமையல் சாதனங்கள் போன்றவையும் வழங்கியுள்ளார்கள்.



No comments:
Post a Comment