Pages

Wednesday, September 8, 2021

MADARASATHUL AL-HIKMA துவக்க விழா (Deeniyath Makthab Madarasa)

 بسم الله الرحمن الرحيم 

நமதூர் (பாபுராஜபுரம்) தோழர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..),


நமது ஊர் முன்னேற்றம் குறித்த நோக்கத்தில் அமைக்கப்பட்ட "விஸ்டம் வெல்பேர் அஸோஸியேஷன்"   துவங்கப்பட்ட போது நம் ஊர் முன்னேற்றத்திற்கான் திட்டங்கள் குறித்து நோட்டீஸ் மூலம் மஹல்லா மக்கள் எதிர்பார்ப்பு அறிந்துகொள்ளும் நோக்கில் தெரிவித்திருந்தோம். அந்த திட்டங்கள் நிறைவேற்றுவதற்கான தொடர் முயற்சியை எங்களுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச தார்மீக ஆதரவு கொண்டு தொடர்ந்து செய்து வருகிறோம்.


விஷ்டம் வெல்பேர் அஸோஸியேஷன் - பாபுராஜபுரம் தின் ஒரு அங்கமான MADARASATHUL AL-HIKMA  (Deeniyath Makthab Madarasa) துவக்க விழா -இன்று புதன் கிழமை செப்டம்பர் 8, 2021*  மாலை அஸர் தொழுகைக்குப்பின் 5:15 மணிக்கு தொடங்கப்பட்டது.


மதரசா அல் ஹிக்மா ~

துவக்க நிகழ்ச்சி தொகுப்பு 👇

தேதி: 08 - 09- 2021

நாள்: புதன் கிழமை


நமது பள்ளி இமாம் Hazrat.சுல்தான் முஹையித்தீன் ஸலாஹிக்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் பொறுப்பை சிறப்பாக நிகழ்தினார்கள் .


நிகழ்ச்சியின் துவக்கமாக,

அரபி கிராத்: அத்: 96 (வசனம் 1 - 14) மாணவர்: K.H.அப்துல் ரிஃபாய் (S/o ஜனாப் ஹசன் கர்மா) ஓதினார்.


அதன் பொருள் வாசிப்பை - B.சுரைம் S/o ஜனாப் பஷீர் அஹ்மத் வாசித்தார்.


நமதூர் முத்தவல்லி ஹாஜி ஜனாப். ஹாஜியார் பாரூக் அவர்கள் தலைமை தாங்கினாகினார்


ஜமாத்தார்கள்  மற்றும் சிறார்கள் (Both M & F: 75 persons) சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்


மதரசா அல் ஹிக்மா நிர்வாக உப தலைவர் ஜனாப் நாசர் பாட்சா தலைமை உரை நிகழ்த்தினார்கள்.

அவர், தொடர் முயற்சியில் நம் ஆண் பிள்ளைகளின் ஈருளக வெற்றி நோக்கில் கொண்டு துவங்கப்பட்டுள்ள இந்த மதரசாவின் நோக்கம் ~ திருக் குர்ஆணை *ஓத மட்டும் செய்வதல்ல,  அதன் பொருள் *உணர்ந்து செயல்பட கற்றுத்தறுதலே என்றார் ,  மேலும் தற்போது ஆன்லைன் படிப்பு புரியாமல் படிப்பதாக உள்ளது, எனவே பள்ளி படிப்புக்கான டியூஷன் உதவி தேவைப்பட்டால் மாணவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் செய்து தரும் எண்ணம் உள்ளது  என தெரிவித்தார்.


சிறப்பு விருந்தினராக

கௌரவ அழைப்பாளர் பிஸ்மி ஹாஜி ஷம்சுதீன் அவர்கள் அருமையான ஊக்குவிப்பு உரை வழங்கினார்கள். அவர்கள் நடத்தும் மதரசா குறித்து கூறி... மதரசா நிர்வாகம், இலக்கு வெற்றிகரமாக நடைபெற அல்லாஹ்வின் மீது முழு தவக்குல் வைக்கும்படியும் இன்ஷா அல்லாஹ் ஆண் பிள்ளைகள் மதரசாவும் நடந்துகொண்டுள்ள பெண்கள் மதரசா போல் அதிக மாணர்கள் சேரந்து பயன்பெற துவா செய்தார்கள்.


சுவாமிமலை பெரிய பள்ளி இமாம் & மதரசா பொறுப்புதாரியான Hazrat. அப்துல் கனி இலாஹி B. A (Arabic) &  Arabic Phd. அவர்கள் 

*மார்க்க கல்வியின் அவசியம், முக்கியத்துவம் குறித்தும், இந்த மதரசா துவங்கப்பட்டு 3 வருடங்களில் மதரசா பிள்ளைகள் வீட்டில் ஏற்பட்டுள்ள இஸ்லாமிய வாழ்வியல் மாற்றங்கள் குறித்து கூறி ஆர்வமூட்டி பேசினார்கள்.


அதை தொடர்ந்து, நம் ஊர் Hazrat.சுல்தான் முஹையித்தீன் ஸலாஹி அவர்கள் நம் மதரசா பெயரில் உள்ள ஹிக்மா என்பதன் விளக்கம்  - "சத்தியத்தை முழுமையாக அறிதல் அதன் படி செயல் படுத்தல்" என்பதை சிலாஹித்து கூறி, அதன் சிறு விளக்கமாக லூக்காமான் (அலை) தன் பிள்ளைகளுக்கு வழங்கிய அறிவுரையை விவரிதார்கள். நம் ஊர் பிள்ளைகள் மதரசா மூலமாக சிறந்த "ஹிக்மத்"  உள்ளகார்களாக வரவேண்டும் என துவா செய்தார்கள்.


தொடர்ந்து சுவாமிமலை மதரசாவில் இருந்து சீருடையில் வந்திருந்த  நான்கு மாணவர்கள் ஓர் அறிமுகத்திற்காகவும், நம் மணவர்களின் ஆர்வம் கவன ஈர்ப்பு

தஜ்வீத்துடன் திருக்குர்ஆண் கிராத் சிறப்பாக ஓதி காட்டினார்கள் 


இடைவேளை

மக்ரிப் தொழுகை இடைவேளையில் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

மக்ரிப் தொழுகைக்கு பின் சிறப்புஉரை மௌலான முஹம்மது சல்மான் யூசுஃபி கிழக்கு மண்டல அன்வாரு ஸ்ஸுஃபா ஜோனல் முஆவின் அவர்கள் நாம் எந்த அளவுக்கு மார்க்க கல்வி கற்பதில் முக்கியத்துவம் தருகிறோம்? அதனால் எதனை பெற இயலாமல் போகிறது.  

அன்வாரு ஸ்ஸுஃபா  மக்தப் மதரசா வின் இலக்கு என்ன என்பதை விளக்கி பேசினார்கள்.


மதரசா அறிமுக உரை: அன்வருஸ் ஸுஃப்பா மௌலவி: சிராஜ்தீன் அன்வாரி ஹஜ்ரத்.குடந்தை வட்டார அன்வாருஸ் ஸுஃப்பா தீனியாத் மக்தப் மதரஸா முஆவின் அவர்கள், மதரசா படத்திட்ட சிறப்பம்சம் குறித்து விளக்கினர்கள்.


அடுத்து, துவங்கப்பட்டுள்ள நம் மதரசா அல் ஹிக்மா ஆசிரியராக பொறுப்பேற்றுள்ள Hazrat. பீர் முஹம்மது ஹசனி அவர்களை அறிமுகப்படுத்தப்பட்டது (இவர் *அன்வாருஸ் ஸுஃப்பா பாடத்திட்ட ஆசிரியர் பயிற்சி பெற்றவர் மேலும் அக்கு பஞ்சர் மருத்துவம் அறிந்தவர்).


இறுதியாக மதரசா Hazrat. பீர் முஹம்மது ஹசனி துவாவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.


எல்லா புகழும் வல்ல இறைவன் ஒருவனுக்கே! 

தவக்கல் ஆல அல்லாஹ்!

















No comments:

Post a Comment