Pages

Thursday, June 6, 2019

ஜூன் 05,2019. பாபுரஜபுரத்தில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் ('ஈத்-அல் ஃபித்ர்') தொழுகை


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


அல்லாஹ்வின் நல்லருளால் பாபுரஜபுரத்தில் ஜூன் 05,2019 அன்று நோன்புப்பெருநாள் ('ஈத் அல் ஃபித்ர்') தொழுகை தவிக்க முடியாத காரணத்தால் திறந்த வெளியில் தொழ இயலவில்லை மற்றும் சிறியவர்கள் / வாலிபர்களுக்கான விளையாட்டு போட்டிகள்  மற்றும் 
அன்றைய மாலையில்  ஆண்/பெண் சிறார்களுக்கான குர்ஆன் மனனம், கிராஅத் ஓதுதல் மற்றும் பல இஸ்லாமிய நிகழ்வுகள் அனைத்தும் நமது செயல் தலைவர் சகோதரர் நாசர் பாட்ஷா அவர்களின் ஏற்பாட்டில் மிக சிறப்பாக நடைபெற்றது


மாஷா அல்லாஹ் !!!,


மிகத் திரளான ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் 

அருகிலுள்ள ஊர்களை சேர்ந்தபலர் கலந்துகொண்டனர் நமது ஊர் ஹஜ்ரத் சுல்தான் அவர்கள் ('ஈத்அல் ஃபித்ர்')  தொழுகை மற்றும் குத்பாவை சிறப்புடன்   நிறைவேற்றினார்கள் அன்று மாலை சிறியவர்கள் /வாலிபர்களுக்கான  விளையாட்டு போட்டிகள்மற்றும் அன்றைய மாலையில்  ஆண்/பெண் சிறார்களுக்கான குர்ஆன் மனனம், கிராஅத் ஓதுதல் மற்றும் பல இஸ்லாமிய நிகழ்வுகள் அனைத்தும் நமது செயல் தலைவர் சகோதரர் 
நாசர் பாட்ஷா அவர்களின் ஏற்பாட்டில் மிக சிறப்பாக நடைபெற்றது


பெருநாள் தொழுகையின் அவசியம்:


பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும். பள்ளிவாயல்களில் நடைபெறும் ஐவேளைத் தொழுகை  மற்றும்ஜும்ஆத் தொழுகை போன்ற கூட்டுத் தொழுகைகளில் பெண்கள் பங்கு கொள்ளாமல் தமது வீடுகளிலேயே தனியாகத் தொழுது கொள்ளலாம் என்று இஸ்லாம் பெண்களுக்கு சலுகை வழங்கியுள்ளது. அப்படி சலுகை வழங்கிய இஸ்லாம் பெருநாள் தொழுகையில் மட்டும் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தகுந்த ஆடை இல்லாவிட்டால் இரவல் ஆடை வாங்கியாவது கலந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.


திடலில் தொழுகை:


நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்)   முஸல்லா எனும் மைதானத்திற்குச் செல்பவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரீ (றழி). நூல் : புஹாரி.

கஸீர் பின் ஸல்த் (றழி) என்ற நபித் தோழருடைய வீட்டிற்கு முன்னால் முஸல்லா என்ற மைதானம் ஒன்று இருந்தது

தொழுகையும், குத்பாவும்:

நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (றழி), உமர் (றழி), உஸ்மான் (றழி) ஆகியோருடன் நான் பெருநாள் தொழுகையில் பங்கு எடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (றழி), நூல் : புஹாரி.

இன்றைய தினத்தில் நாம் முதன் முதலில் செய்ய வேண்டியது தொழுவதாகும். என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர் : பர்ராஃ பின் ஆஸிப் (றழி), நூல் : புஹாரி.

ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்:

பெருநாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (றழி), நூல் : புஹாரி.

நபி (ஸல்) அவர்கள் ஒரு பாதையில் வருவார்கள், இன்னொரு பாதையில் திரும்புவார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (றழி), நூற்கள் : இப்னு மாஜா, அபூ தாவூத்.

சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டுமா?

நபி (ஸல்) அவர்கள் சில பேரீத்தம் பழங்களை சாப்பிட்டு விட்டு புறப்படுவார்கள். நூல் : புஹாரி.

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு முன்பு சில ஸஹாபாக்கள் சாப்பிட்டதை நபியவர்கள் அங்கீகரித்துள்ளார்கள். நூல் : புஹாரி.

நபியவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று சாப்பிடாமல் தொழுகைக்குச் செல்வார்கள் என்பது பலவீனமான அறிவிப்பாகும்.

ஆகவே, மேற்கூறப்பட்ட அடிப்படையில் எமது பெருநாள் தொழுகைகளை அமைத்துக் கொள்வோமாக!
‘எல்லாம் வல்ல அல்லாஹ் அவனது சத்திய தீனுல் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் விளங்கி அதன்படி செயற்பட்டு ஈருலகிலும் ஈடேற்றம் பெறும் பாக்கியத்தை எம் அனைவருக்கும் வழங்குவானாக!’

நோன்புப் பெருநாள் ('ஈத் அல் ஃபித்ர்') நிகழ்வுகளின் புகைப்படங்கள் சில
 
 


 
 

 
 
 

 
 
 
 
 
 

Sunday, March 31, 2019

பாபுராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் "கல்விச் சீர் விழா"

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)..

நமதூரில்
 29-03-2019 அன்று பாபுராஜபுரம்  ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் "கல்விச் சீர் விழா" நடைபெற்றது.

அச்சமயம் பள்ளியில் பயிலும் மாணவர்களின்  அத்தியாவசிய  தேவைகளை பூர்த்திசெய்யும் அளவிற்கு அரசு தரும் உதவிதொகை முழுமையாக அமையாததினால்  இதை நிவர்த்தி செய்யும்  விதமாக "கல்விச் சீர் விழா" என ஏற்பாடு செய்து அதன் மூலம் பொதுமக்களின் பங்களிப்பும் உதவியும் பெறும் நோக்கில் நமது ஊர் ஜமாத் உறுப்பினர்களுக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சார்பாக  அழைப்பு விடுத்தனர்.


அந்த அழைப்பை ஏற்று நமது ஜமாத் சார்பாக ஜனாப் (MAS)நௌஷாத் (துணை முத்தவல்லி) (Panchayat Vice President), செயல் தலைவர் ஜனாப் நாசர் பாஷா அவர்களும், நமது ஊர் இமாம் மௌலவி சுல்தான் இப்ராஹீம், ஜனாப் A.ஜாகிர் உசேன் அவர்களும் மற்றும் ஜனாப் (All in all) உசேன் பாய் மற்றும பல சகோதரர்கள் இதில் கலந்து  கொண்டார்கள்.


நமது பாபுராஜபுரம்  மஹல்லா சார்பாக சில உதவிகளை செய்து சிறப்பித்தோம் அதன் விபரம் வருமாறு.



பள்ளி மாணவர்களின் உபயோகத்திற்க்காக 6 மேஜைகள் தனது சார்பாக ஜனாப் MAS.நௌஷாத் அவர்கள் வழங்கினார் 


பள்ளிக்கு அத்யாவசிய தேவையான  மின் இணைப்பு மோட்டார் மற்றும் ஸ்டீல் அலமாரியும் ஜனாப் நாசர் பாஷா அவர்களால் வழங்கப்பட்டது ,


மாணவர்களுக்கான 30 செட் புத்தகங்களும் மற்றும் நமது பள்ளி இமாம் மௌலவி சுல்தான் இப்ராஹீம் அவர்கள் தன் சார்பாக சிறு தொகையை  அளித்து சிறப்பித்தார்கள்.      
இவை அனைத்தையும்  பாபுராஜபுரம் முஹல்லா ஜமாத் சார்பாக  ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு வழங்கப்பட்டது.


இவ்வாறான செயலகளால் :


சதக்கத்துல் ஜாரியா எனும் தொடர் நன்மை 
சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்தவும் 
பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலன் கருதியும்.
பள்ளியில் பயில்விக்கும் ஆசிரியர்களின் ஆர்வத்தை பாராட்டும் விதமாகவும் இவ்வாறான செயல்கள் அமையும் 


இந் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பாபுராஜபுரம்  ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி ஜெயஸ்ரீ மற்றும் துணை ஆசிரியைகளின் முயற்சி பாராட்டுதலுக்குறியது.

நமது அன்பளிப்புகள் மட்டுமல்லாமல்  பள்ளியை  SMART SCHOOL LEVEL முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன்  LED TV மற்றும் மென்பொருள் சாதனங்கள் வழங்கியுள்ளார்கள்.

பல்வேறு தரப்பினர் பள்ளிக்கு தேவையான அத்யாவசிய  சமையல் சாதனங்கள்  போன்றவையும் வழங்கியுள்ளார்கள்.





இதுபோன்ற செயல்களில் நாமும் நமது ஊர் மக்களும் பங்கேற்று தங்களால் முயன்ற உதவிகள் செய்து நன்மையை பெற்றிட வல்ல ரஹ்மான் துணை செய்வானாக துவா செய்வோமாக ஆமீன்

Wednesday, January 30, 2019

ஜனவரி 26, 2019 பாபுராஜபுரதில் நடைப்பெற்ற திமுக-வின் ஊராட்சி சபை கூட்டதில் எடுத்துவைத்த அடிப்படை விஷயங்கள்

 பாபுராஜபுரதில் நடைப்பெற்ற திமுக-வின் ஊராட்சி சபை கூட்டதில் எடுத்துவைத்த அடிப்படை விஷயங்கள்

ஜனவரி 26, 2019 அன்று சிறப்புடன் நடந்தது 


     அதில் நம்முடைய அன்றாட பிரச்சினையான தண்ணிர் சுகாதாரம், குப்பைகளை சேகரிப்பதற்கான  தொட்டிகள் அமைப்பது, குப்பை மேடாக இருக்கும் இடங்களை சுத்தம் செய்வது மற்றும் இதர விஷயங்களை விரைவில் நிவர்த்தி செய்வதாக திரு .அன்பு அவர்கள்  நமக்கு வாக்களித்துள்ளார்கள்

          இந்த அடிப்படை விஷயங்கள் அனைத்தையும் திரு .அன்பு அவர்களிடம் எடுத்துச் சென்ற அண்ணன்  நொசாத் அலி அவர்களுக்கு பாபுராஜபுரம் மக்கள் - மன்றம் சார்பாக  جزاك الله خير


      இது போன்ற நன்மையான விஷயங்களை வரக்கூடிய காலங்களில் முயற்சி செய்து நிறைவேற்ற ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வல்ல ரஹ்மான் துணை புரிவானாக ஆமீன் 

Monday, December 31, 2018

டிசம்பர் 30,2018 நமது ஊர் பள்ளிவாசல் மற்றும் அதன் சுற்றியுள்ள தெருக்களில் CCTV

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
                    
                   நமது ஊரின் செயல் தலைவர் சகோதரர் நாசர் பாய் அவர்களின் விடாமுயற்சியால் நமது பள்ளிவாசல் மற்றும் அதன் சுற்றியுள்ள  தெருக்களில் (CCTV) கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
                   
                    இதன்  மூலம்  நமது  பள்ளிவாசல் தெரு மக்கள் பயனடையும்  நல்லெண்ணம்கொண்டு  இப்பணியை முழுமையாக   நிறைவு செய்த அன்பு சகோதரர் நாசர் பாய் அவர்களுக்கும் இதற்கான  பொருள் உதவி  செய்த  நமது  ஊர் சகோதரர்கள் மற்றும் ஒத்துழைப்பு தந்த நிர்வாகதினர் அனைவருக்கும் 


பாபுராஜபுரம் மக்கள் மன்றம் சார்பாக ஜஸாகல்லாஹ் ஹைரா

இங்கே சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக 







பிஸ்மி மளிகை மெயின் ரோடு 



பள்ளிவாசல் வெளி தோற்றம்