Pages

Wednesday, September 8, 2021

MADARASATHUL AL-HIKMA துவக்க விழா (Deeniyath Makthab Madarasa)

 بسم الله الرحمن الرحيم 

நமதூர் (பாபுராஜபுரம்) தோழர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..),


நமது ஊர் முன்னேற்றம் குறித்த நோக்கத்தில் அமைக்கப்பட்ட "விஸ்டம் வெல்பேர் அஸோஸியேஷன்"   துவங்கப்பட்ட போது நம் ஊர் முன்னேற்றத்திற்கான் திட்டங்கள் குறித்து நோட்டீஸ் மூலம் மஹல்லா மக்கள் எதிர்பார்ப்பு அறிந்துகொள்ளும் நோக்கில் தெரிவித்திருந்தோம். அந்த திட்டங்கள் நிறைவேற்றுவதற்கான தொடர் முயற்சியை எங்களுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச தார்மீக ஆதரவு கொண்டு தொடர்ந்து செய்து வருகிறோம்.


விஷ்டம் வெல்பேர் அஸோஸியேஷன் - பாபுராஜபுரம் தின் ஒரு அங்கமான MADARASATHUL AL-HIKMA  (Deeniyath Makthab Madarasa) துவக்க விழா -இன்று புதன் கிழமை செப்டம்பர் 8, 2021*  மாலை அஸர் தொழுகைக்குப்பின் 5:15 மணிக்கு தொடங்கப்பட்டது.


மதரசா அல் ஹிக்மா ~

துவக்க நிகழ்ச்சி தொகுப்பு 👇

தேதி: 08 - 09- 2021

நாள்: புதன் கிழமை


நமது பள்ளி இமாம் Hazrat.சுல்தான் முஹையித்தீன் ஸலாஹிக்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் பொறுப்பை சிறப்பாக நிகழ்தினார்கள் .


நிகழ்ச்சியின் துவக்கமாக,

அரபி கிராத்: அத்: 96 (வசனம் 1 - 14) மாணவர்: K.H.அப்துல் ரிஃபாய் (S/o ஜனாப் ஹசன் கர்மா) ஓதினார்.


அதன் பொருள் வாசிப்பை - B.சுரைம் S/o ஜனாப் பஷீர் அஹ்மத் வாசித்தார்.


நமதூர் முத்தவல்லி ஹாஜி ஜனாப். ஹாஜியார் பாரூக் அவர்கள் தலைமை தாங்கினாகினார்


ஜமாத்தார்கள்  மற்றும் சிறார்கள் (Both M & F: 75 persons) சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்


மதரசா அல் ஹிக்மா நிர்வாக உப தலைவர் ஜனாப் நாசர் பாட்சா தலைமை உரை நிகழ்த்தினார்கள்.

அவர், தொடர் முயற்சியில் நம் ஆண் பிள்ளைகளின் ஈருளக வெற்றி நோக்கில் கொண்டு துவங்கப்பட்டுள்ள இந்த மதரசாவின் நோக்கம் ~ திருக் குர்ஆணை *ஓத மட்டும் செய்வதல்ல,  அதன் பொருள் *உணர்ந்து செயல்பட கற்றுத்தறுதலே என்றார் ,  மேலும் தற்போது ஆன்லைன் படிப்பு புரியாமல் படிப்பதாக உள்ளது, எனவே பள்ளி படிப்புக்கான டியூஷன் உதவி தேவைப்பட்டால் மாணவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் செய்து தரும் எண்ணம் உள்ளது  என தெரிவித்தார்.


சிறப்பு விருந்தினராக

கௌரவ அழைப்பாளர் பிஸ்மி ஹாஜி ஷம்சுதீன் அவர்கள் அருமையான ஊக்குவிப்பு உரை வழங்கினார்கள். அவர்கள் நடத்தும் மதரசா குறித்து கூறி... மதரசா நிர்வாகம், இலக்கு வெற்றிகரமாக நடைபெற அல்லாஹ்வின் மீது முழு தவக்குல் வைக்கும்படியும் இன்ஷா அல்லாஹ் ஆண் பிள்ளைகள் மதரசாவும் நடந்துகொண்டுள்ள பெண்கள் மதரசா போல் அதிக மாணவர்கள் சேரந்து பயன்பெற துவா செய்தார்கள்.


சுவாமிமலை பெரிய பள்ளி இமாம் & மதரசா பொறுப்புதாரியான Hazrat. அப்துல் கனி இலாஹி B. A (Arabic) &  Arabic Phd. அவர்கள் 

*மார்க்க கல்வியின் அவசியம், முக்கியத்துவம் குறித்தும், இந்த மதரசா துவங்கப்பட்டு 3 வருடங்களில் மதரசா பிள்ளைகள் வீட்டில் ஏற்பட்டுள்ள இஸ்லாமிய வாழ்வியல் மாற்றங்கள் குறித்து கூறி ஆர்வமூட்டி பேசினார்கள்.


அதை தொடர்ந்து, நம் ஊர் Hazrat.சுல்தான் முஹையித்தீன் ஸலாஹி அவர்கள் நம் மதரசா பெயரில் உள்ள ஹிக்மா என்பதன் விளக்கம்  - "சத்தியத்தை முழுமையாக அறிதல் அதன் படி செயல் படுத்தல்" என்பதை சிலாஹித்து கூறி, அதன் சிறு விளக்கமாக லூக்காமான் (அலை) தன் பிள்ளைகளுக்கு வழங்கிய அறிவுரையை விவரிதார்கள். நம் ஊர் பிள்ளைகள் மதரசா மூலமாக சிறந்த "ஹிக்மத்"  உள்ளகார்களாக வரவேண்டும் என துவா செய்தார்கள்.


தொடர்ந்து சுவாமிமலை மதரசாவில் இருந்து சீருடையில் வந்திருந்த  நான்கு மாணவர்கள் ஓர் அறிமுகத்திற்காகவும், நம் மணவர்களின் ஆர்வம் கவன ஈர்ப்பு

தஜ்வீத்துடன் திருக்குர்ஆண் கிராத் சிறப்பாக ஓதி காட்டினார்கள் 


இடைவேளை

மக்ரிப் தொழுகை இடைவேளையில் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

மக்ரிப் தொழுகைக்கு பின் சிறப்புஉரை மௌலான முஹம்மது சல்மான் யூசுஃபி கிழக்கு மண்டல அன்வாரு ஸ்ஸுஃபா ஜோனல் முஆவின் அவர்கள் நாம் எந்த அளவுக்கு மார்க்க கல்வி கற்பதில் முக்கியத்துவம் தருகிறோம்? அதனால் எதனை பெற இயலாமல் போகிறது.  

அன்வாரு ஸ்ஸுஃபா  மக்தப் மதரசா வின் இலக்கு என்ன என்பதை விளக்கி பேசினார்கள்.


மதரசா அறிமுக உரை: அன்வருஸ் ஸுஃப்பா மௌலவி: சிராஜ்தீன் அன்வாரி ஹஜ்ரத்.குடந்தை வட்டார அன்வாருஸ் ஸுஃப்பா தீனியாத் மக்தப் மதரஸா முஆவின் அவர்கள், மதரசா படத்திட்ட சிறப்பம்சம் குறித்து விளக்கினர்கள்.


அடுத்து, துவங்கப்பட்டுள்ள நம் மதரசா அல் ஹிக்மா ஆசிரியராக பொறுப்பேற்றுள்ள Hazrat. பீர் முஹம்மது ஹசனி அவர்களை அறிமுகப்படுத்தப்பட்டது (இவர் *அன்வாருஸ் ஸுஃப்பா பாடத்திட்ட ஆசிரியர் பயிற்சி பெற்றவர் மேலும் அக்கு பஞ்சர் மருத்துவம் அறிந்தவர்).


இறுதியாக மதரசா Hazrat. பீர் முஹம்மது ஹசனி துவாவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.


எல்லா புகழும் வல்ல இறைவன் ஒருவனுக்கே! 

தவக்கல் ஆல அல்லாஹ்!

















Wednesday, September 1, 2021

MADARASATHUL AL-HIKMA (Deeniyath Makthab Madarasa)

 بسم الله الرحمن الرحيم 

நமதூர் (பாபுராஜபுரம்) தோழர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..),


நமதுஊர் முன்னேற்றம் குறித்த எண்ணத்தில் அமைக்கப்பட்டதே "விஸ்டம் வெல்பேர் அஸோஸியேஷன்" என்பதை தாங்கள் அறிவீர்கள்.


அதன் நோக்கங்களில் ஒன்றான நம் ஊர் மாணவ மாணவிகள் முன்னேற்றம் & சீர்திருத்த விஷயத்திற்கு தேவையான செயல்பாடுகளின் ஒரு முக்கிய பகுதியான தீனியாத் மத்ரசா உள்ளது.  இதில் பெண்களுகள் & சிறார்கள் (below 10 year age) மதரசா சில "துபாய் வாழ் சகோதர்கள்" முயற்சியில் பல ஆண்டுகளாக சிறப்பாக நடை பெற்று வருகிறது.


ஆனால்  இதில் பயிலும் மாணவர்கள் 10 வயதுக்கு மேல் தொடர்பு விடுபட்டு விடுகிறது, மேலும் திருக்குர்ஆனை ஓதும் திறனை மேம்படுத்திகொள்ள விரும்பும் இளைஞர்கள் நலனை கருத்தில்கொண்டு ஆண்களுக்கானா அரபி மதரசா, இன்ஷா அல்லாஹ் வரும் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்க முடிவு செய்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.


நமது நோக்கம் அரபி ஒதுதல் மட்டும் கற்றுதருவது அல்ல, இன்ஷா அல்லாஹ் இலகுவான முறையில் அதன் புரிதல்,  ஏகத்துவம் மற்றும் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளையும் புரிய வைப்பதும் ஆகும்.


மத்ரசாபெயர்:

MADARASATHUL AL-HIKMA

 (Deeniyath Makthab Madarasa). المدرسة  الحكمة (دينيات مكتب مدرسة)

என தேர்ந்தெடுத்துள்ளோம்.

மதரசா நம் பள்ளிவாசலில் வளாகதில் நடத்த பள்ளி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளார்கள். இன்ஷா அல்லாஹ், சிறப்பாக நடைபெற துவா செய்யவும்.

பாட திட்ட வழிகாட்டல்:

அன்வாரு ஸ்ஸுபா மக்தப் மதரசா,

Office in KMU

Noor Masjid, Srinagar Colony.

(Regional Off: Chennai)

இதன் நிர்வாக செலவு மனமுவந்து தரும் நன்கொடைகள் , "சதக்கத்துல் ஜாரிய" கொடைகள் என ஆதரவு தரும் சகோதர்களிடமிருந்து பெற்று நடத்தும் எண்ணத்தில் துவங்க பட்டுள்ளது.  இதில் இறைவுவப்பை நாடி பங்குபெற விரும்புப்பவர்கள் தங்கள் பங்களிப்பை மனமுவந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


நம்மை படைத்து பரிபாளைக்கும் ரப்பில் ஆலமீன்  இதில் பயிலும் மாணவர்களுக்கும், இதற்க்கான ஒத்துழைப்பு வழங்குபவர்களுக்கும் நல் அறிவையும், ஞானதையும், ஆரோக்கியத்தையும் ,  பரக்கத்தையும், ஈருளாக வேற்றியையும் வழங்கிட துவா செய்தவனாய்,

தங்கள் நலம் விரும்பும்,

நாசர் பாய்.

ADMINISTRATION தல செயல் நிர்வாகிகள்:

தலைவர்:

ஜனாப் கே. ரஷீத்,


உப தலைவா & செயலாளர்:

ஜனாப் மு. நாசர் பாட்சா,

பொருளாளர்

ஜனாப் ஷா.ஸலாவுதீன்

செயல் உறுப்பினர்கள்:

ஜனாப் உஸ்மான்(Nettal Rawuther)

ஜனாப் I. ஜலாலுதீன்,

ஜனாப் Eng J.அனீஸ் அஹமத்

ஜனாப் U. ஹிக்மத்,

ஜனாப் M.அப்துல் முஹம்மது,

ஜனாப் S. கபூர் (சசி),


Inspiration & Main Supporters for formation: 

Janab S. Idrees,

Janab A. Abdul Khader

Janab J.Basheer Ahmed

Janab K.Umar Sellappa,

Janab R. Nowsath Ali

&, Janab K. Raseeth.


இதில் பயிலும் மாணவர்கள்  நலம் கருத்தில் கொண்டு, அவர்களின் பெற்றோர்கள் கோரிக்கையின் அடிப்படையில், இன்ஷா அல்லாஹ் பள்ளி கல்வி (academic) அறிவுக்கு தேவையான உதவி செய்யும் நோக்கமும் உள்ளது.

துவா செய்யவும்.

Monday, July 26, 2021

BPM மஹல்லா நல ஆலோசனை கூட்ட நிகழ்வு விவரம்.

WISDOM WELFARE ASSOCIATION ன் ஒரு தனி குழு ஏற்படுத்தப்பட்டு அதன் செயல்பட்டார்கள் பிரிவாக இந்த  BPM DEENIYAATH COMMITTEE ஏற்படுத்தப்பட்டுள்ளது.

بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும்


BPM மஹல்லா நல ஆலோசனை கூட்ட நிகழ்வு விவரம்.


நாள்: திங்கள் கிழமை தேதி: 26 -07 - 3021

நேரம்: 7:30 AM

இடம்:

S. இத்ரீஸ் பங்களா (மாஸ் கார்டன்)


"நமது ஊர் பாபுராஜபுரம் முஸ்லீம் மஹல்லா மக்கள் முன்னேற்றம் குறித்து சிந்தித்து அதற்கு தேவையான திட்டங்களை படிப்படியாக செயல்படுத்த ஒரு குழு ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.


கூட்ட துவக்கத்தில் திருக்குர்ஆன் வசனம்  சகோதரர் இத்ரீஸ் அவர்கள் வாசித்தார்.

(அத்.: 2  வசனம் 110) 

தொடர்ந்து  இரண்டு ஹதீஸ் விளக்கம் தரப்பட்டது.


அமர்வில் கீழ் கண்ட உறுப்பினர்கள் பங்கு கொண்டு ஆலோசனை கூறினர்.


1. ஹாஜியார் பாரூக் (முத்தவல்லி)

2. MAS நௌஷாத் அலி

3. M. நாசர் பாட்சா 

4. K.ரஷீத் (Anwar Bahai Son in Law)

5. R. யூனுஸ் அலி 

6. S. சலாஹுதீன்

7. தாஜிதீன் (Qtr.)


முதல் கட்டமாக மிக அவசியமான நம் 

குழந்தைகளின் கல்விக்கான (இம்மை மற்றும் மறுமை கல்வி) திறமை வளப்பதற்கு தேவையான ஆதரவு தளம் ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது 


குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக  சில முடிவுகள் எடுக்கப்பட்டன.


குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள்:


1) தற்போது நடந்துவரும் பெண்கள் மதரசாவில் பெண்கள் (80) பயணடைந்து வருகின்றனர்.  Covid-19 அச்சத்தில் மதரசா நடைபெறவில்லை  - தற்போது அச்சம் குறைந்துள்ளது எனவே தேவையான தற்காப்பு ஏற்பாடுகளுடன் திரும்ப ஆரம்பிகிக்க மாணவர்கள் & ஆலிமா கேட்டதன் பேரில் -  சகோதரர் A. அப்துல் காதருடன் ஆலோசித்து ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது.


[குறிப்பு: தற்போது பெண் பிள்ளைகள்  எண்ணிக்கை அதிகம் உள்ளது, அதனை 

தற்போது உள்ள "ஒரு ஆலிம்சாவால் சமாளிப்பது சிரமம்", எனவே மேலும் ஒரு துணை (part time) ஆலிம்சா தேவையாக உள்ளது. (Present strength 90 students including 9 boys of below 10 years). அது குறித்து அடுத்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

2) நம் சமுதாய குழந்தைகளின் கல்வி (இம்மை மற்றும் மறுமை) மேம்பாட்டிற்காக "இன்ஷா அல்லாஹ்" ஒரு குழு அமைக்கப்பட்டு அதற்காக  கீழ்கண்ட பொறுப்புதாரர்கள் நியமனம் செய்யப்பட்டது.


இந்த *குழுவின் 

தலைவராக: K. ரஷீத்* (Late அன்வர் பாய் அவர்கள் மருமகன்),

துணை தலைவர் & செயலாளராக: M. நாசர் பாச்சா (நாசர் பாய்),

பொருளாளராக:  S. சலாஹுதீன் (MAS)

இவர்கள் இங்கு தலத்திலன் முக்கிய செயல்பாட்டாளர்களாக  தேர்தெடுக்கப் பட்டுள்ளனர்.

இதன் செயல்பாட்டு 

ஆலோசகர் குழுவினாராக (உள்ளூர் உள்ள சகோதரர்கள்):

1) MAS நௌஷாத் அலி 

2) Eng. J.அனீஸ் அஹமத்,

3) U.ஹிக்மத் (யூனுஸ்)

4) N.நியமதுல்லாஹ் (நாசர் பாய்)

5) ஆசாத் அலி (ஆசிரியர்)

6) H. ஹசன் (ஹாஜா மைதீன்)

7) J. அப்பாஸ் (ஜலீல்)

8) H. ஜாஹிர் (ஹபீப் ராவுத்தர்)

9) A. ஜாஹிர் (s/o அன்வர் பாய்)

10) B. முஜீப் (மில்)

11) அப்துல் முஹம்மது 

12) S. கபூர் (சசி) 

13) மைதீன் பாட்சா (ஹாஜா மைதீன் சகோதரர்)

14) உமர் (s/o பக்கர்)

15) நிசார் (மில்)


BPM- வெளி நாட்டு வாழ்

ஆலோசகர் & ஒருங்கினைப்பு குழுவினராக

UAE, KSA, QTR, SIA., ஆகிய நாட்டிலிலிருந்து 2 / 3 நபர் செயல்படுவர்:


 UAE:

1) A. அப்துல் காதர்

2) B. முபாரக் அலி

3)சஃப்ரஸ் நவாஸ் (UAE)


KSA:

4) S. இதிரிஸ்

5) J. பஷீர் அஹ்மத்


QTR:

6) சிராஜ்

7) தாஜூதீன்


SIA:

8) செல்லப்பா  (உஸ்மான் சகோதரர்)


Coordinators:

9) R.நௌசாத் (Seematty)

10) R. யூனுஸ்

11) இலியாஸ் 

12) பெரோஸ்

13) பக்ரு

முதலானோர் இருப்பார் என தற்போது ஆலோசிக்கபட்டது.


Tasks to be fulfilled

 (listed on Priority basis)


1) Setup of "Anwarul Sufa" Madarasa for Boys & same method to be adopted for Girls.

2) Tuition centre for Academic subject for selected subjects (with part-time teachers)

3) Proper Arabic Linguistics teaching for Adults (only those interested to improve their Arabic & wish to learn to understand Arabic. (Visual & PowerPoint presentation)

4) Setup of Baithulmaal...

இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் இவை ஒவொன்றிர்காண திட்ட வரைவு (Project plan) தயார் செய்து ஆலோசித்து செயல்படுத்தப்படும்.

Wednesday, April 14, 2021

பாபுராஜபுரம் ஜமாஅத்தார்களுக்கு முதவ்வல்லி அவர்களின் இந்த ரமலான் குறித்த அறிவிப்பு

Hijri:1441 Ramadan // April 2020

அஸ்ஸலாமு அலைக்கும்

நமதுஊர், பாபுராஜபுரம் ஜமாஅத்தார்களுக்கு முதவ்வல்லி அவர்களின் இந்த  ரமலான் குறித்த அறிவிப்பு

பாபுராஜபுரம் ஜமாஅத்தார்களுக்கு 2020 ரமலான் மாத அறிவிப்பு

அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்த வருடம் புனித ரமலானை ஒரு வித்யாசமான வகையில் கழிக்க உள்ளோம்.

A) பள்ளிவாசல் தொழுகை இல்லாவிட்டாலும் வழக்கம்போல் ரமலானின் வெகுமதி பெற  அதிகப்படியான நபீல் அவசியம்  தொழவேண்டும்!

B) வீட்டில் உட்கார்ந்து திருக்குரான் அதிகம் ஓத வேண்டும்.

C) லைலத்துல் கத்ர் இரவின் நன்மையை பெற வழக்கத்திற்கும் அதிகமாக கவனம் செழுத்தி இபாதத் திக்ர்  செய்யவேண்டும்.

D) ஸதகா வாங்க எளியவர்கள் வராவிட்டாலும், வர வாய்யப்பு இல்லாவிட்டாலும்  நாம் தேடி போய் தரவேண்டிய நிலை - காரணம் ரமளானின் பன்மடங்கு நன்மையை கொள்ளையடிக்க வேண்டுமே!

இதெல்லாம் இந்த "லாக் டோவ்னில்"? !? !! எப்படி செய்ய போகிறோம்? !

இன்ஷா அல்லாஹ் இந்த சோதனை காலத்திலும்  சிறப்பாக இபாதத் செய்து  நாம்  வெற்றி பெறுவோம்! ரமலானில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ள நன்மைகளை முழுவதும் பெறுவோம்  என உறுதியாக நிய்யத் செய்துகொள்வோம்.


நாம் வழமையாக செய்த வழிபாடுகளின் வெளித்தோற்றத்தில்  தான் வித்யாசம் இருக்க போகிறதே தவிர,  உண்மையானா இறை விசுவாசிகளுக்கு இபாதத்தில்  வித்யாசம் இருக்காது - ஆனால் ஏக்கம் இருக்கும் - பள்ளிவாசலில் இமாம் ஜமாத் கிடைக்கவில்லை என்பதே.

அதே சமயம் "நம் உள் அச்சத்தை நன்கு அறியக்கூடிய  ரஹ்மானுர் ரஹீமாகிய எல்லாம் வல்ல  அல்லாஹ் நோன்பாளிகளுக்கும்,  உள் அச்ச வணக்க வழிபட்டாளர்களுக்கும்  வழங்கும் வழமையான,   நிலையான,  வெகுமதியிலோ,  ஒரு இம்மியாளவும் குறை இருக்காது.


இன்னும் உற்று நோக்கினால் நமது ஈமானின் ஆழத்தை புடம் போடும் காலமிது.
மேலதிக நன்மையை பெற வாய்ப்புள்ள காலமிது!

1) பள்ளிவாசல் கூட்டு  தொழுகை இல்லாவிட்டாலும் எந்தவொரு ஈமானிய முஸ்லீமும் ரமலானில் மேலதிகமாக தொழுவதை நிறுத்த மாட்டோம்.
ஆனால் ஒரு ஹபிள் நீண்ட கிராத் ஓத அவருக்கு பின் நின்று மன ஒருமைப்பாட்டுடன்  தொழுவது முடியாதே  (அந்த அளவுக்கு ஒத தெரியாதே)  என்கிற  வருத்தம் நிச்சயம் இருக்கும்.

இந்த சோதனையை ஏற்படுத்திய அல்லாஹ்,  நம் உள்ளத்தில் இந்த வருத்தம் ஏற்பட்டாலேயே  - நிச்சயம் அவன் நம் வணக்கத்திற்கு நிறைவாக நம்மை தருவான்.

2) நம் பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு வ அலைஹி வஸல்லம் அவர்கள் - அதிகம் அதிகம் உபரி தொழுகை (பரல் தவிர) வீட்டில்தான் தொழுததாக நிறைய ஆதாரங்கள் உள்ளன.

எனவே,  ஒருவேளை அல்லாஹ் நமக்கும் அதுபோல நிகழ்த்த ஒரு கட்டாயமான இந்த  சூழ்நிலை ஏற்படுத்தியிருக்கலாமே எனவும் நினைக்க தோன்றுகிறது.

நிச்சயமாக இதன் மறைபொருளான நன்மைகள் ஏராளம் நாம் அடைய உள்ளோம்.

3) சிரர்களுக்குகோ ஒருவிதமான ஏமாற்றம்,  இன்ஷா அல்லாஹ் அவைகளுக்கு,  இந்த சூழ்நிலையில் செய்யும் வணக்கத்திற்கு  இன்னும் அதிக நன்மையை அல்லாஹ் வழங்குவான்.

4) நம்மை தேடி வரும் யாசகத்தை வழமையாக்கி கொண்டுள்ளவர்களுக்கு  கொடுப்பதைவிட   உன்மையாக தேவை உள்ளவர்களை அடையாளம் கண்டு தேடி சென்று கொடுப்பது சிறந்தது,  அதை செய்யவேண்டிய சூழ்நிலை இது.

5) நோன்பு கஞ்சி செய்து நாமும் அனுபவித்து மகிழ்வதுடன்,  நம்மை சார்ந்துள்ள மாற்றுமதத்தினருக்கும் வழங்கி மன திருப்தி  அடைவோம்.  இந்த வருடம் கூட்டு கஞ்சி செய்யும் வாய்ப்பு இந்த வருடம் இல்லை. 

அரிசி ஓவ்வொரு வீட்டுக்கும் பகிர்ந்து வழங்கப்படும். எனவே வசதி வாய்ப்பு உள்ளவர்கள் வேறு வகையில் அவர்களுக்கு கொடுத்து நன்மை அடையலாம்.
வழக்கமாக நாம் நம் பள்ளிவாசல் இமாம்,   பிலால்  மற்றும் பள்ளியில் கஞ்சி காய்ச்சும் வேலை செய்பவர் மீது அதிக அக்கறை காட்டி பொருளுதவி வழங்கும்  காலமிது.

இவர்களை நாம் இந்த வருடம் மறக்கலாமா?

7) கூட்டு தொழுகையில் மனம் ஒன்ற,  முழு குர்ஹான் ஓதிய நன்மை கிட்ட - ஒரு   ஹபிள் உதவியை தேடும் காலமிது.

இவரால் நாம்  சென்ற வருடம் பெற்ற பலனை    இந்த வருடம் மறக்கலாமா? !!

எனவே சென்ற வருடம் அவர்களுக்கு செய்த பிரதிபலனை (இந்த வருடம் "அவர்கள் சேவை செய்ய இயலாது என்பதால் நிறுத்தம்மல்  கொடுத்து உதவுவதே சிறந்தது.

7) அதே சமயம் இந்த கரோனாவினால்  எல்லோருக்கும்,  குறிப்பாக மாத நிரந்தர வருமானம் இல்லாத   நம்மில் பலருக்கு ஏற்படுத்தியுள்ள பொருளாதார சிக்கல்களையும், கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

8) கரோனா பிரச்னை தீரும் வரை பள்ளிவாசலுக்கு கிடைத்து வந்த கடை வாடகையும் கிடைக்காது.

எனவே மேற்கூரியவைகளை கருதத்தில் கொண்டு நமதுஊர் ஜமாத் கீழ் குறிப்பிட்டுள்ள முடிவு எடுத்துள்ளது:

இந்த ரமலான் மாத செலவு ஈடு செய்யும் வகையில்,  முறை கஞ்சி காய்ச்சும் 30 வீட்டாரிடம் ரூ. 3,000  நன்கொடையாக பெற்று,  அதனை கீழ் குறிப்பிட்டுள்ள வகையிளான செலவுகளை ஈடு செய்ய நாடியுள்ளோம்.

ரமலான் மாத வரி ரூ.1,000 இந்த ரமலானில் வசூல் செய்யதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

A)  அரசு வழங்கும் பச்ச அரிசி பெற்று இங்கு கோண்டு வருவதற்கான மற்றும் வீடுவாரியாக  விநியோகம்  செலவு..

B) பள்ளிவாசல் இமாம் &  பிலால் சம்பளம் + வருட  ஊக்கத்தொகை தர வேண்டியுள்ள செலவு..

C) வழக்கம்போல் ஹஜரத்க்கு தரும் ஹாபிஜா வூக்க துகையை & பிலாலுக்கு,  இவ்வருடமும்  வீட்டுக்கு அவரவர் விருப்பமாக  வசூல் செய்து தந்துவிடுவது எனவும்...

D) மேலதிகமாக இவ்வருடம் நம் ஊரில் உள்ள சுமார் 20 எளியவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு அரசு வழங்கும் அரிசியுடன் கஞ்சி காய்ச்சுவதற்கான மளிகை பொருட்கள் ரூ 500 மதிப்பிலும்,  பணமாக ரூ1,000மும் தரலாம் (இதற்கான நன்மை அல்லாஹ் அதற்காக பணம் கொடுத்த உங்களுக்கே வழங்குவான்) என்பதாகவும் முடிவு செய்துள்ளோம்.

E) இவை அனைத்திற்கும் ஆகும் உபதேச பட்ஜெட்: சுமார் 1,00,000+.

நாம் 30 கஞ்சி நன்கொடை யாளர்கள் மூலம் பெறும் கூடுதல் துகை ரூ. 90,000  மட்டுமே.

எனவே ரமலானில்  அதிகம் நன்மையை நாடுபவர்கள் தாங்கள் நாட்டத்திற்கு ஏற்ப மனமுவந்து ரூ. 3,000மேலும் கூடுதலாக வழங்கலாம்.

இந்த வருட ரமலான் வரவு செலவு தனியாக கையாளப்படும்.

தாங்கள் அனைவரின் ஒத்துழைப்பிற்கு ஜசாக்கல்லாஹு  கைரன்!

இப்படிக்கு
முத்தவல்லி
முஸ்லீம் ஜமாஅத்,
பாபுராஜபுரம்.



ரமளான் உதவி பெற்றவர்கள்

29 குடும்பங் களுக்கு
(ரூ 1,500 value) Grocery kits)ம்,  25 நபர்களுக்கு ரூ.2000 வீதம் (தங்கள்) ஜக்காத்தும்  வழங்கப்பட்டது
~~~~~~
இதில் 24 Grocery Kit நம் பள்ளிவாசல் கணக்கிலும்,

 அதிகப்படியான
 5 grocery kits
 spl. Dooners சார்பாக  "WISDOM WELFARE ASSOCIATION" பேரிலும்    வழங்கப்பட்டது*
(Accts in WISDOM File)
 ~~~

Grocery & 2000 given to:

~~~~~
Total Expenses:
Zakaath = 48,000
For 5
Grocery kits = 7,250
=================
Total Spent = 55,250
Balance avl = 14,750*
*See the next page.


Local Donations received towards WISDOM BWA"

Nasar = 5,000(For G. Kits)
அசார் = 2,000
AbuThahir=5000(Noor st)
Ziavudeen = 2000
Sasikafoor= 2000
================
Total Rps.    = 16,000
BPM friends =70,000
-----------------------------------
Gr. Total      = 86,000
Less Amt spent = 55,250
Actual Balance= 30,750
~~~~~~
Good Cause Expenditure proposal:

Rps.:5,000
To Mohammadiya Arakattali (Food supply to Hospital needs & Free Sahar food to fasting poor)

Rps.:5,000
To Vellore Islamic Center
(Islamic teaching centre especially newly Reverted Muslims  & poor)

Rps.:5,000
For Medicine & Emergency Medical Support thru WISDOM
(For Really helps poor dependent persons are identified thru' friends & jamaat - we get their proscription to get doctor opinion about getting those medicine free from Govt. Hospital if still need to be purchased from outside Medical we support them to get maximum discount & for some selected we  provide one month medicine based on its cost.. Similarly emergency operations for really poor are made at very cheap cost *some doctors do not take their fees)

Rps.:5,000
Ramadan competition (stay home write & submit கட்டுரை  total 3 +2 prizes

Rps.:15,000
For Non-Muslims
This is my proposal.
Usually, on Eid day after Namaaz,  poor children use to gather us begging coins.

This year this not going to happen. What thought is to distribute a gift pack cost 60 each to all poor non-muslim families in Harijan St & Kudiyan St only in Baburajapuram (As per statistics 220 families)
We can issue tokens to each house & tell them to collect from Masjid batch by batch as per the date.
Nagaraj & Bilal to supervise.

Gift Items:
Rava pack or
Semiya pack
Kalla mittai =20 rupees
Milk bikkies = 20rupees
Toffees = 20 rupees


Nasir Bhai B: وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ‏
நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யுங்கள், உங்களில் எவருக்கேனும் மரண நேரம் வருவதற்கு முன்பாக! மேலும், அந்த நேரத்தில் அவர் கூறுவார்: “என் அதிபதியே! நீ எனக்கு இன்னும் சிறிதுகாலம் அவகாசம் அளிக்கக்கூடாதா! நான் தானதர்மம் செய்வேனே! நல்லோர்களில் ஒருவனாகி விடுவேனே!”
(அல்குர்ஆன்: 63:10)
~~~~~

ஐந்துக்கு முன் ஐந்தை அரிதாக கருதிக் கொள்ளுங்கள்:

முதுமைக்கு முன் இளமையையும்!
நோய்க்கு முன் உடல் நலத்தையும் !
வறுமைக்கு முன் செல்வத்தையும் !
வேளையில் ஈடுபடும் முன் ஓய்வையும் !
மரணம் வரும் முன் வாழ்கையையும் ! அரிதாகக்கருதி  பயன்படுத்தி கொள்ளுங்கள்.
(ஹதீஸ்: நூல் மிஸ்காத்)

Thursday, May 14, 2020

அஷ்ஷெய்க் முஜாஹித் பின் ரஸீன் உஸ்தாத் அவர்கள் ஆற்றிய பின்வரும் இஸ்லாமிய சமூகத்தின் ஆட்சி வரலாற்றுத் தொடர்களைப் பார்க்கவும்

Ibnu  Razeen: السلام عليكم ورحمة الله وبركاته

Super Muslim சகோ முஸ்தபாவின் விளக்கத் தவறுகளை புரிந்து கொள்ளள அஷ்ஷெய்க் முஜாஹித் பின் ரஸீன் உஸ்தாத் அவர்கள் ஆற்றிய பின்வரும் இஸ்லாமிய சமூகத்தின் ஆட்சி வரலாற்றுத் தொடர்களைப் பார்க்கவும்

👇👇👇👇👇👇👇👇👇👇👇

1- நபிகளாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் - தொடர் 01
https://youtu.be/TsXWvIIyou0

2- நபிகளாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் - தொடர் 02
https://youtu.be/tpkcAXomj1w

3- நபிகளாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் - தொடர் 03
https://youtu.be/dKS7IMApXBE

4- நபிகளாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் - தொடர் 04
https://youtu.be/E4hydEzIDHg

5- நபிமார்கள் எதற்காக அனுப்பப்பட்டார்கள்? - தொடர் 01
https://youtu.be/WkwVOZ_Kdxk

6- நபிமார்கள் எதற்காக அனுப்பப்பட்டார்கள்? - தொடர் 02
https://youtu.be/MVPyn8tbugs

7- கிலாஃபத்தை (இஸ்லாமிய ஆட்சியை) புரிந்து கொள்வது எவ்வாறு....
https://youtu.be/Gqpe_9JjEO4

8- இஸ்லாமிய ஆட்சியின் பெயரில் ஷீஆயிஷம் இன்று ஈரானில்
https://youtu.be/uEoSvIGAQ_c

9- இஸ்லாத்தின் பார்வையில் ஆட்சி மாற்றம்
https://youtu.be/x5h34Pc5syA

10- ஷீஆ பயங்கரவாதமும் முஸ்லிம்களின் நிலையும்
https://youtu.be/p1ZCAWWI-i0

11- இஸ்லாமிய வரலாறு ஓர் அறிமுகம்
https://youtu.be/dhKbV8O1qBk

12- அபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
https://youtu.be/X1eRwHVhqnM

13- உமர்(ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் - பாகம் 01
https://youtu.be/Eqw6hNSCC3g

14- உமர்(ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் - பாகம் 02
https://youtu.be/qWRTkyWR1Lk

15- உமர்(ரலி) அவர்களின் ஜும்ஆ குத்பா
https://youtu.be/_AHy_9KLAa0

16- உமர்(ரலி) அவர்களின் இறுதி நாட்களும் மரணமும்
https://youtu.be/9yh9RX8ulJ0

17- உஸ்மான் இப்னு அஃபான் (ரலி) அவர்கள் வாழ்வில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்
https://youtu.be/3c5Ut_6vvBM

18- உஸ்மான் (ரலி) அவர்களின் வரலாறும் விமர்சனம் பற்றிய தெளிவுகளும் - தொடர் 01
https://youtu.be/gPyH1mqgZWM

19- உஸ்மான் (ரலி) அவர்களின் வரலாறும் விமர்சனம் பற்றிய தெளிவுகளும் - தொடர் 02
https://youtu.be/QfDo0sa9LQ0

20- அலி(ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு - பாகம் 01
https://youtu.be/4uFTCekUxhk

21- அலி(ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு - பாகம் 02
https://youtu.be/XB3GzUe6zc4

22- ஹஸன் ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைப் பற்றிய அஹ்லுஸ்ஸுன்னாவின் அகீதா
https://youtu.be/M6TXZ7o-wb4

23- அஹ்லுல் பைத் நபிகளாரின் குடும்பம்
https://youtu.be/PI6FLD85q98

24- ஜமல் யுத்தம் வரலாறும் படிப்பினையும்
https://youtu.be/UyBJHIuUEo4

25- ஸிப்பீன் யுத்தம் வரலாறும் படிப்பினையும்
https://youtu.be/RdS9IyZzaaA

👇👇👇👇👇👇

26- முஆவியா இப்னு அபூ சுfப்யான் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு- தொடர் 01
https://youtu.be/7PMUunIbR-0

27- முஆவியா இப்னு அபூ சுfப்யான் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு- தொடர் 02
https://youtu.be/2CQc7gP5Weg

28- முஆவியா இப்னு அபூ சுfப்யான் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு- தொடர் 03
https://youtu.be/WL0EM9iFn1E

29- முஆவியா இப்னு அபூ சுfப்யான் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு- தொடர் 04
https://youtu.be/OdfcMDYg1ew

30- யஸீத் இப்னு முஆவியா (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு- பாகம் 01
https://youtu.be/TqbR3KuJIfI

31- யஸீத் இப்னு முஆவியா (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு- பாகம் 02
https://youtu.be/_4iELBBoavA

32- கர்பலா யுத்தம் - ஹுஸைன் (ரலி) அவர்கள் மற்றும் அஹ்லுல் பைBத்தினர் கொல்லப்பட்ட இடம்
https://youtu.be/4V8-DhchB-I

33- ஹர்ரா யுத்தம்
https://youtu.be/91G4ZVlUC0E

34- அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் - பாகம் 01
https://youtu.be/99bxoEuNQZo

35- அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் - பாகம் 02
https://youtu.be/w1QTkX7kq9k

36- அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் - பாகம் 03
https://youtu.be/Qhv4zHqzEbY

37- உஸ்மானிய கிலாஃபத் ஓர் அறிமுகம்
https://youtu.be/bjw3QZakVas

38- இஸ்லாமிய வரலாறு- ஓர் பார்வை
https://youtu.be/ZF0NMQt6FfM

39- மொங்கோலியர் தாதாரியர் பற்றிய முன்னறிவிப்பு
https://youtu.be/oWqEg33Eu5c

40- ஸஊதி அரேபியாவில் ஹவாரிஜ் சிந்தனையை விதைத்த இஹ்வான்களின் துரோக வரலாறு
https://youtu.be/iqVAVmNEBd0

41- மன்னராட்சி இஸ்லாம்  அங்கீகரிக்கும் ஆட்சியா? -ஆட்சி பேசும் இயக்கங்களின் இரட்டை நிலை-
https://youtu.be/xqqvpVA-0yA

42- ஸீராவின் ஒளியில் அகீதா
https://youtu.be/h7o4w5F4KoY

43- இஸ்லாமிய வரலாறு
https://youtu.be/HW8fh0a3r7U

44- இஸ்லாமிய எழுச்சியும் முக்கிய அடிப்படைகளும்
https://youtu.be/KfwOBZg7d84

45- ஹூதி ஷீஆக்களுக்கான ஆதரவும் ஸஊதிய ஆட்சிக்கெதிரான காழ்ப்புணர்வும்
https://youtu.be/2Vbvt_LBLk8

46- மத்திய கிழக்கின் தற்போதைய நிலை ஓர் அலசல்
https://youtu.be/-7rgsEuADyg

47- பைBத்துல் முகத்தஸ் - மஸ்ஜித் அல்-அக்ஸாவில் தற்போது நடப்பது என்ன?
https://youtu.be/sBxiSFKugis

48- சிரியா (Syria) தேசம் அழுகிறது
https://youtu.be/0aFJgA3I5-o

49- யார் இந்த யூத கிறிஸ்துவர்கள்?
https://youtu.be/vHXnuHpl44k

50- Nusayriya Tyranny in Syria
https://youtu.be/VYSVKtg5vYY

மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள் உரையாற்றிய சஹாபாக்களின் வரலாற்றுத் தொடர்களின் தொகுப்பு

மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள் உரையாற்றிய சஹாபாக்களின் வரலாற்றுத் தொடர்களின் தொகுப்பு 


0️⃣1️⃣
அபு பக்கர் சித்திக் (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
https://youtu.be/X1eRwHVhqnM

0️⃣2️⃣
உமர் (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் - பாகம் 1
https://youtu.be/Eqw6hNSCC3g

0️⃣3️⃣
உமர் (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் பாகம்-2
https://youtu.be/qWRTkyWR1Lk

0️⃣4️⃣
உமர்(ரலி) அவர்களின் ஜும்ஆ குத்பா
https://youtu.be/_AHy_9KLAa0

0️⃣5️⃣
உமர் (ரழி) அவர்களின் இறுதி நாட்களும் மரணமும்
https://youtu.be/9yh9RX8ulJ0

0️⃣6️⃣
உஸ்மான் (ரலி) அவர்களின் வரலாறும் விமர்சனம் பற்றிய தெளிவுகளும் - தொடர் 1
https://youtu.be/gPyH1mqgZWM

0️⃣7️⃣
உஸ்மான் ரலி அவர்களின் வரலாறும் விமர்சனம் பற்றிய தெளிவுகளும் தொடர் 2
https://youtu.be/QfDo0sa9LQ0

மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் உரையாற்றிய நபிகளார் (ஸல்) அவர்களின் வரலாற்று தொடர்களின் தொகுப்பு.

மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் உரையாற்றிய நபிகளார் (ஸல்) அவர்களின் வரலாற்று தொடர்களின் தொகுப்பு.

01
40 வயதுக்கு (நபித்துவத்திற்கு) முன் நபிகளார்
https://youtu.be/SaRyR1Muqtc


02
அறியாமைக் காலத்தின் அழகிய பண்புகள்
https://youtu.be/nqFAh9fzNEM

03
நபிகளாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் - தொடர் 1
https://youtu.be/TsXWvIIyou0

04
நபிகளாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் – தொடர் 2
https://youtu.be/tpkcAXomj1w

05
நபிகளாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் – தொடர் 3
https://youtu.be/dKS7IMApXBE

06
நபிகளாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் – தொடர் 4
https://youtu.be/E4hydEzIDHg

07
நபிகளாரின் பெண்மக்கள்
https://youtu.be/GwGFp6LXPzE

08
நபிகளாரின் வருமானம்!
https://youtu.be/t3rmNiZBHoY

09
நபிகளார் வீட்டில் ஒரு நாள்
https://youtu.be/J523Au7ca0Y

10
நபி (ஸல்) அவர்களின் வீட்டின் இரவு நேரங்கள்
https://youtu.be/xXiEmjRKpWg

11
நபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள்
https://youtu.be/I6NqTFOIvhw

12
அன்றாட வாழ்வில் நபிகளார் (ஸல்) அவர்கள்
https://youtu.be/MQerxtm9rI0

13
நபிகளார் (ஸல்) அவர்களின் அங்க அடையாளங்கள் மற்றும் குணங்கள்
https://youtu.be/cCaAHF2yahk

14
போர்களத்தில் நபிகளார் (ஸல்)
https://youtu.be/68cddxPNxNg

15
இஸ்லாமிய வரலாற்றின் அபீஸீனியாவிற்கான முதல் ஹிஜ்ரத்
https://youtu.be/12YFFJne9E0

16
அபீஸீனியா (Ethiopia) ஹிஜ்ரத் சுருக்கப் பார்வை!
https://youtu.be/2hEIET3MavM

17
அஸ்ரா -- மிஃராஜ் பயணங்கள்,
https://youtu.be/GxjQFkS3vwY

18
The Battle of UHUD
https://youtu.be/gjrkdjLNmOk

19
The Battle of Khandaq (Trench)
https://youtu.be/N26m_cRyJA8

20
The Battle of TABUK
https://youtu.be/-79oKiDoucE

21
The Mecca Victory
https://youtu.be/OTizkAjwe_w

22
ஹுனைன்-யுத்தம்
https://youtu.be/fHzjbG66Mbo

23
மன்னர் ஹிர்களுக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்
https://youtu.be/yPXIVsrSfCQ

24
அன்சாரிகளின் சிறப்பு
https://youtu.be/_vUzLMTYkuk

25
60 நிமிடங்களில் இஸ்லாமிய வரலாறு
https://youtu.be/HW8fh0a3r7U

26
ஸீராவின் ஒளியில் அகீதா
https://youtu.be/h7o4w5F4KoY

Saturday, March 28, 2020

நமது ஊர் இளைஞர்களின் முன்னெடுப்பில் கொரோனா தொற்று கிருமிநாசினி தெளிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

28 மார்ச் 2020  இன்றைய தினம்!!

நமது ஊர் இளைஞர்களின் முன்னெடுப்பில் அதிவேகமாக பரவிவரும் தொற்று கிருமியான கொரோனா (COVID19)-ஐ தடுக்கும் விதமாக தமிழ் பரம்பரை கிருமிநாசினியான வேப்பிலை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை கரைத்து அவற்றை அணைத்து வீடுகள் முன்பாக ,பள்ளிவாசல் தெரு , மற்றும் சிவன்கோவில் தெரு, டிவிஎஸ் காலனி,மெயின் ரோடு,சங்கம், பள்ளிவாசல் தெரு,பட்டானித்தெரு, ஆகிய அனைத்து தெருக்களிலும் தெளிக்கப்பட்டது!!

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அத்துனை உறவுகளுக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!💐💐💐

இது சம்பந்தமாக சில புகைப்படங்கள்








பொதுநல சேவையில் மாஸ் நௌசாத் அலி கொரோனா (COVID19) வைரஸ் தொற்று காரணமாக ஊறடங்கு உத்தரவு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 


கொரோனா (COVID19) வைரஸ் தொற்று காரணமாக மார்ச் 22 2020 முதல் இந்தியா முழுவதும் ஊறடங்கு உத்தரவு நடைபெற்று வருவதால். அன்றாடம் உழைக்கும் மக்கள் அனைவரும் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு   வீட்டு உபயோக பொருள்கள் மற்றும் மளிகை சாமான்கள்கூட வாங்க இயலாத நிலமையில் இருக்கிறார்கள் இதன் காரணமாக நமதூர் மாஸ் குடும்ப சகோதரர்கள்  சார்பாக அவர்களால் முடிந்த அளவுக்கு 100 நபர்களுக்கு அவர்கள் குடும்பத்திற்கு தேவையான மளிகை சாமான் பொருள்களை    அவர்கள் வீட்டிற்க்கே சென்று வழங்கி உள்ளார்கள். 


இதுபோன்ற செயல்களை ஒவ்வொருவரும் அவர்களால் முடிந்த அளவுக்கு ஏழை எளியோருக்கு வழங்கிட முயற்சி செய்து நீங்களும் அல்லாஹ்விடம் நன்மையை அதிகரிக்க வல்ல ரஹ்மான் துணை புரிவானாக ஆமின் 

இதுபோன்ற நிதி உதவிசெய்ய விரும்புவோர் மாஸ் நௌசாத் அலி அவர்களை தொடர்புகொள்ளலாம்

பொதுநல சேவையில் . மாஸ் நௌசாத் அலி.

اِنَّ الْمُصَّدِّقِيْنَ وَالْمُصَّدِّقٰتِ وَاَقْرَضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا يُّضٰعَفُ لَهُمْ وَلَهُمْ اَجْرٌ كَرِيْمٌ‏
நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் - அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் -(அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது.
(அல்குர்ஆன் : 57:18)
















Friday, March 20, 2020

CAA, NPR, NRC க்கு எதிர்ப்பு தெரிவித்து நமதுஊர் (பாபுராஜபுரம்) ஜமாத் சகோதரர்கள்

CAA, NPR, NRC க்கு எதிர்ப்பு தெரிவித்து பாபுராஜபுரம் இஸ்லாமியர்கள் கண்களில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு நூதன முறையில் போராட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

March 20, 2020. வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக நமதுஊர் (பாபுராஜபுரம்) இஸ்லாமியர்கள் கண்களில் கருப்புத் துணியை கட்டிக்கொண்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினார்

குடந்தை ஷாகின்பாக் போராட்டக்குழு சார்பாக CAA, NPR & NRC போன்ற கருப்பு சட்டத்திற்கு எதிராக 29 நாட்களாக கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகில் நடைபெற்று வந்தது கொரோனா (COVID19) போன்ற கொடிய நோய்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இப்போராட்டம் தற்பொழுது கும்பகோணம் அதன் சுற்றியுள்ள பல ஊர்களில் மக்கள் CAA-விற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள்.

அதன் தொடர்ச்சியாக நமது ஊரிலும் CAA, NPR & NRC போன்ற கருப்பு சட்டத்திற்கு எதிராக கண்களில் கருப்புத் துணியை கட்டிக்கொண்டு போராட்டம் நடந்தது இதில் நமது ஜமாத் சகோதரர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள்.

இது சம்பந்தமாக சில புகைப்படங்கள் மற்றும் காணொளி CAA, NPR, NRC க்கு எதிர்ப்பு தெரிவித்து பாபுராஜபுரம் இஸ்லாமியர்கள்










போராட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் கீழ்க்கண்ட ஆவணங்களை தயார் பண்ணி வைத்துக்கொள்ளுங்கள்.

நீதியரசர் ஜனாப் ஜீ. எம். அக்பர் அலி CAA, NPR & NRC பற்றி மிக, மிக துல்லியமாக, தெளிவாக விளக்கியுள்ளார். இந்த விளக்கத்தை நன்கு, நிதானமாக படித்து பாதுகாக்கவும்.

1955 குடியுரிமை சட்டப்படி ஒருவர் இந்தியர் என்பதைச் சட்ட ரீதியாக உறுதிபடுத்துவது எப்படி?

கீழ்கண்டவாறு ஒவ்வொருவரும் செய்யுங்கள்:

1. வீட்டிலுள்ள அனைவரின் பிறந்த தேதி எழுதி கொள்ளுங்கள்.

2. அதனை மூன்று கேட்டகரியாக பிரியுங்கள்.

அ. 1987 ஜூலை 1 ஆம் தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள்

ஆ. 1987 ஜூலை 1 க்கும் 2004 டிசம்பர் 31 க்கும் இடையில் பிறந்தவர்கள்

இ. 2004 டிசம்பர் 31 க்குப் பின்னர் பிறந்தவர்கள்

3. இதில், 1987 ஜூலை 1 க்கு முன்னர் பிறந்தவர்களுக்குப் பிறப்பு சான்று அல்லது பாஸ்போர்ட் ஆகிய இரண்டில் ஒன்று இருப்பதை உறுதிபடுத்துங்கள். எனில், இவர்கள் பிறப்பின் அடிப்படையில் நேரடியாக இந்தியர்கள். வேறு எந்தச் சான்றும் தேவையில்லை.

4. 1987 ஜூலை 1 க்குப் பின்னர் பிறந்தவர்கள் அனைவருக்கும் பிறப்புச் சான்றிதழ் இருக்கிறதா என உறுதிபடுத்துங்கள். இருக்கிறது எனில்,

அ.  1987 ஜூலைக்கும் 2004 டிசம்பருக்கும் இடையில் பிறந்தவர்கள் பெற்றோரில் யாராவது ஒருவர் இந்தியர் என்பதை உறுதிபடுத்துங்கள். அதாவது அவர்களின் பெற்றோரில் யாராவது ஒருவர் பிறப்பு சான்று அல்லது பாஸ்போர்டில் இருக்கும் பெயர் அவர்களின் பிறப்பு சான்றிதழில் இருப்பது போல் இருக்கிறதா என்பதை உறுதி படுத்துங்கள். எனில், இவர்களும் வம்சாவழி அடிப்படையில் இந்தியர். வேறு சான்று தேவையில்லை.

2004 டிசம்பருக்குப் பின்னர் பிறந்தோரின் பெற்றோர் இருவருமே இந்தியராகவும் அவர்களின் சான்றில் பெயர்கள் சரியாக ஒத்துப்போகவும் வேண்டும். எனில், இவர்களும் வம்சாவழியில் இந்தியர். வேறு சான்று தேவையில்லை.

மேற்கண்ட அடிப்படையில் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் செக் செய்து, பாஸ்போர்ட் அல்லது பிறப்புச் சான்று இல்லாதவர் லிஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.

பாஸ்போர்ட் எடுக்க, ஏதேனும் ஆதார்/ரேசன் கார்டு ஏதாவது சப்மிட் செய்து பாஸ்போர்ட் எடுங்கள். இது எளிது.

பிறப்புச் சான்று எனில்,

1. மருத்துவமனையில் பிறந்தவராக இருந்தால், அந்த மருத்துவமனை இருக்கும் ஏரியா கிராம/தாலுகா/கார்ப்பரேசன் அலுவலகத்துக்குச் சென்று விவரம் கூறி அப்ளை செய்யுங்கள். 200 ரூபாய்தான் செலவு. இலகுவாக கிடைக்கும்.

2. வீட்டில் பிறந்தவராக இருந்தால்,

பிறப்பு சான்று இல்லை என்பதற்கு ஒரு அஃபிடவிட் நோட்டரி அட்டஸ்டேசனுடன் தயார் செய்து உங்கள் கிராம/தாலுக்/கார்ப்பரேசன் அலுவலகத்தில் சப்மிட் செய்யுங்கள். அவர்கள் பிறப்பு சான்று இல்லை என்பதற்கான ஒரு சான்று தருவர். அதனைக் கொண்டு மாவட்ட நீதிமன்றத்தில் சப்மிட் செய்யுங்கள். அபராதம் கட்டச் சொல்வார்கள். ஆண்டுக்கு 200 ரூபாய். கிடைத்துவிடும்.

அவ்வளவுதான்.

இம்முறையில் அவரவர் வீட்டில் ஓகே ஆகி விட்டால், குறைந்தது ஒரு வீட்டுக்காவது இதனைச் செய்ய உதவுங்கள். அவர்களிடமும் இதையே வேறு ஒருவருக்குச் செய்ய கேளுங்கள். சமுதாயத்தில் ஒருவர்கூட விட்டுப்போகாமல் அனைவருக்கும் இந்தியர் என்பதற்கான சட்ட ஆவணம் உருவாக்கிவிடலாம் இன்ஷா அல்லாஹ்.

Tuesday, March 17, 2020

CAA, NRC, NPR ஆகிய கருப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 


March 17, 2020. செவ்வாய் கிழமை மாலை 5.00 மணிக்கு ஆவூர் மெயின் ரோட்டில் வலங்கை வட்டார ஜமாத் மற்றும் குடந்தை சுற்று வட்டார முஸ்லீம் ஜமாத் கூட்டமைப்பு, மாற்றுமத சகோதரர்கள் மற்றும் அனைத்து அரசியல் இயக்கங்கள் இனைந்து CAA, NRC, NPR ஆகிய கருப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.


இதில் பெருந்திரளான ஆண்கள் பெண்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டார்கள் இதில் பாபுராஜபுரம் ஜமாத் தலைவர் மற்றும் சகோதரர்கள் கலந்துகொண்டார்.


ஆவூரில் நடைப்பெரும் C.A.A. பொதுக்கூட்டம்




Monday, March 9, 2020

"CAA, NPR, NRC, குறித்து எந்த ஒரு ஆவணமும் தர மாட்டோம்" கும்பகோணம் அருகே ஆவூரில் ஒற்றைக் கருத்தாக தீர்மானம் நிறைவேற்றிய 27 ஊர் ஜமாத் தலைவர்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

February 02, 2020. "CAA, NPR, NRC, குறித்து எந்த ஒரு ஆவணமும் தர மாட்டோம்" கும்பகோணம் அருகே ஆவூரில் ஒற்றைக் கருத்தாக தீர்மானம் நிறைவேற்றிய 27 ஊர் ஜமாத் தலைவர்கள்.

கும்பகோணம் நகர அனைத்து வட்டார ஜமாஅத் தலைவர்கள் மற்றும் நமது பாபுராஜபுரம் ஜமாத் உறுப்பினர்கள் அனைவரும்  ஆவூர் கூட்டத்தில் கலந்து கொள்கின்றார்கள். ( 34 மஹல்லா (27 ஊர்) ஜமாஅத் தலைவர்கள் பெயர் பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது )



 

Friday, February 28, 2020

பாபுராஜபுரம் ஊராட்சி முஸ்லீம் தெருவில் நீர் தொட்டி அமைத்து திறக்கப்பட்டது

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 28, 2020. அன்று கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் சார்பாக மேற்கு ஒன்றியம்  பாபுராஜபுரம் ஊராட்சி முஸ்லீம் தெருவில் குறு மின் விசை பம்பு மூலம் நீர் தொட்டி அமைத்து திறக்கப்பட்டது 

இந்த நீர் தொட்டியானது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டது இதை திறப்பதற்காக திரு கா.அன்பழகன் எம்எல்ஏ அவர்கள் மூலம் திறக்கப்பட்டது

இதனுடைய சில புகைப்படங்கள்......